• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1

Status
Not open for further replies.
நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1



( English translation is already posted in this blog )

1. கலியுக துவக்கம் கி.மு 3102, மாயா ஆண்டு துவக்கம் கி.மு 3114.

2 மாயா மக்களும் இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் உருவத்தில் ஒரே மாதிரியாக இருப்பர்.
3. பல்லவ, தென் கிழக்கு ஆசிய கட்டிடக்கலை அம்சங்களை தென், மத்திய அமெரிக்க மாயா கட்டிடங்களிலும் காணலாம்.

4. நாகர்கள் தான் மாயாக்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது மாயா கட்டிடங்களில் காணப்படும் பாம்பு உருவங்கள்.

5. மயன் என்பவன் பெரிய கட்டிடக் கலை நிபுணன். இவன் பெயரில்தான் மாயா நாகரீகமே இருக்கிறது. பெயருக்கேற்றார் போல எங்கு நோகினும் கட்டிடம்தான்!

6. மதுரை நாயகர் கட்டிய மீனாட்சி கோவில் போன்ற கோவில்களிலும் வேதத்திலும் ஆயிரம் கால் மண்டபம் பற்றிக் கேள்விப் படுகிறோம். மெக்சிகோவில் யோகஸ்தான் தீபகற்பத்தில் கிஷன் இட்சா என்னும் இடத்தில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது.


7. மாயாக்களும் இந்தியர்களும் ஒரே ஆடு புலி ஆட்டத்தை விளையாடுகின்றனர். இப்படி ஒரே விளையாட்டை இரண்டு இன மக்கள் தனித் தனியே கண்டுபிடிப்பது அபூர்வத்திலும் அபூர்வம்!

8. மாயாகள் கட்டமரத்தில் பயணம் செய்திருக்கலாம். இன்றும் மெக்சிகோவில் தமிழ் சொல்லான கட்டமரம் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கலத்தில் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகவே பயணம் செய்வார்கள்.

9. நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் போருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.


10. நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.
11. சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன.
12. சங்க இலக்கியத்தில் மட்டுமே இருபதுக்கும் மேலான நாகர்கள் பாடல்களை எட்டுக்கட்டி இருக்கிறார்கள்.

13. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டா: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).
14. இந்துமத நூலகள் கிருஷ்ணனை நாகர்களின் எதிரியாகவும் இந்திரனை நாகர்களின் நண்பனாகவும் சித்தரிக்கின்றன.

15. நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.
16. கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

17. அர்ஜுனனின் பெயரான பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.
18. ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.

19. நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!


20. பத்மபுராணம் மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் நன்றாக வருணிக்கிறது. அதள,பாதாள, ரசாதள என்பது தானவர்கள் நாகர்கள் வசிக்கும் இடம் என்றும் சொல்லுகிறது.மாயா பெயர்களில் வரும் ஏ டி எல் என்ற எழுத்துக்கள் அதள, தள என்ற பின் ஒடு சொல்லாக இருக்கலாம்.

21. தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர். நாகர்களை மட்டப்படுத்தும் வகையில் கிருஷ்ணபக்தர்கள் இந்த ஆட்டத்தை அமைத்துள்ளனர். யார் பாம்புக் கட்டத்துக்கு வந்தாலும் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.

22. நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.


23. பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

24. அமரிக்காவில் ஸ்வாமி த்ரிபுராரி எழுதிய நூலில், மாயாக்களும் இந்தியர்களும் வெண்கொற்றக் குடையை அரசர்களுக்குப் பயன்படுத்துவதும் ,ஒரே ஆட்டத்தை விளையாடுவதும், ஒவ்வொரு திசைக்கும் ஒரு வர்ணத்தை ஒதுக்கியதும், ஒரே வான சாத்திரக் கதைகளைக் கூறுவதும் தன்னிச்சையாக ஏற்படக் கூடிய ஒற்றுமைகள் இல்லை. உலகில் இப்படி எங்காவது கண்டது உண்டா? என்று கேட்கிறார். புத்த மதத்தினர், சைவர்கள், மாயாக்கள் ஆகிய மூவரும் நான்கு திசைகளுக்கு நான்கு வர்ணங்களை ஒதுக்கியிருக்கின்றனர்.


25. மாயாக்கள் தொடர்பான பெயர்களில் பல சம்ஸ்கிருத சொற்கள்: க்வாடிமாலா நாடு= கேதுமால த்வீபம் அல்லது கவ்தம ஆலய, மிட்லா=மிதிலை, அஸ்டெக் நாகரீகம்= ஆஸ்தீக ரிஷி, மாயா= தேவலோக சிற்பி மயன்,டிகல் நகரம்=த்ரி கால/ சிவன்,தெவாதிஹுவசன்= தேவ தக்ஷன், ஒரிநாகோ= ஓரி நாகன், மச்சுபிச்சு= மச்ச புச்சம்/ மீன் வால். இதே பெயரில் இமயமலையிலும் பெரு நாட்டிலும் இடங்கள் உள்ளன. யூகடன் தீபகற்பம்=யோகஸ்தானம், துலா, யகடக்ளி=யக்ஷ தளி, யக்ச்சிலன்= யக்ஷ சீலன்.

26. நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் அதலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும்.


27. மாயாக்களின் சிற்பங்களில் தாமரை, ஸ்வஸ்திகா, யானை முதலியன இருக்கும். இவைகளில் எதுவுமே அந்த இடத்தில் கிடையா.
28. மாயாக்களின் பிரதான தெய்வம் கொட்சகொட்ல (பறக்கும் பாம்பு). இது கருட சத்ரு என்பதன் திரிபாக இருக்கலாம்.

29. மாயாக்களின் ஒரு ராஜாவின் பெயர் தீயில் பிறந்தவன் (கி.பி 378). மகாபாரத கால திரவுபதி, ராஜஸ்தானிய சௌஹான் ஜாதியினர், சேர மன்னர்கள், வேளிர்கள் (கபிலர் புறநானூற்றில் தடவினில் தோன்றியவனே என்று வேளிரைப் பாடுகிறார்) ஆகியோர் தங்களை யாக குண்டத்தில் பிறந்தவர்கள் என்பர். அகத்தியர், வசிட்டர் போன்றோர் தங்களை குடத்தில் (கும்ப முனி) பிறந்தவர்கள் என்பர். இன்னொரு மாய மன்னரின் பெயர் கான் மாக்ஸ் (கி.பி700). இதன் பொருள் மகா நாகன். கான் என்றால் மாயா மொழியில் நாகம்/பாம்பு என்று பொருள். கான் என்பதைத் திருப்பிப் படித்தால் நாக என்று வரும். இதை மொழியியல் ஆய்வாளர்கள் மிர்ரர் இமேஜ் (கண்ணாடியில் பார்ப்பதைப் போல வட இடமாக) என்பர். மக்ஸ் என்பது சம்ஸ்கிருத மஹா என்பதன் திரிபு.


30. மாயாக்களின் முக்கிய நகரங்களில் ஒன்று பளிங்கு. அங்கே பளிங்கு போன்ற கற்கோவில்கள் இருக்கின்றன. பளிங்கு என்பது கண்ணாடி, படிகம் என்ற பொருளில் தமிழில் புழங்கும் சொல். தமிழ் நாகர்களும் தென் அமெரிக்க சென்றனர் என்பது கட்டமரம், பல்லவ கிரந்தம், மருதன் இள நாகன் போன்ற சொற்களிலிருந்து புலனாகிறது. மாயாக்களின் எழுத்து பல்லவ கிரந்தம் போலவே சுழிவுகளுடன் இருக்கும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பேஎசும் எல்லா மொழிகளுக்கும் பல்லவ கிரந்தமே மூல எழுத்து என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.

( பகுதி இரண்டில் மேலும் 30 ஒற்றுமைகளைப் படிக்கலாம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks