நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க

Status
Not open for further replies.
நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க

நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க


1.சந்திர(ன்) பகவான்:
நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்க வே ண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால்

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூ ர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33கிலோமீட்டர் தொலை வில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்துவிட முடி யும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்தி லிருந்து நீங்கள் கிளம்பவேண்டும் . பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை மு டித்துக் கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலா ம்.

2.குரு பகவான்:

கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக் கொண் டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்பவேண்டு ம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங் குடி செல்ல எண்ணற்றபேரு ந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிரு ந்து 17கிலோமீட்டர் தூரத்தில் உள் ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்துவிடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத் சகாயே ஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிச னத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்ப கோணத்திற்கு திரும்ப



வேண்டும்


3. ராகு பகவான்

கும்பகோணத்திற்கு வெகுஅருகிலேயே 6கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ் வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாத சுவாமி ஆலயம் 100 தூண்களை கொண் ட பெரிய கோயில் என்பதால் தரி சனம் செய்து முடிக்க 30 நிமிடங் களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணி க்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.




4. சூரிய(ன்) பகவான்

சூரியனார்கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45- க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக் கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்துவிடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவ சூரிய நாரா யண கோவில் மற்ற நவகிரக கோ யில்களைபோல் அல்லாமல் சூரிய னை முதன்மையாக கொண்டு நவ க்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவா னை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.




5. சுக்ர(ன்) பகவான்

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோ மீட் டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அ ல்லது கார்மூலமாக 10நிமிடங்களி ல் கஞ்சனூரை அடைந்துவிடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங் களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோ விலுக்கு சென்றுவிடமுடியும். அதோ டு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத் திற்குள்ளாக சுவாமி தரி சனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.




6. செவ்வாய் (அங்காரகன்) பகவான்

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கத வுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயி லாடுதுறை செல்லும்பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொ லைவிலுள்ள மயிலாடுதுறை யை 2அல்லது 2.15மணிக்கெல் லாம் அடைந்துவிடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவைமுடித்துக்கொண் டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால்கூட 15 கிலோ மீட் டர் தூரமுள்ள வைத்தீ ஸ்வரன் கோயிலை 3.45மணிக்கெல்லாம் அடைந்துவிடமுடியு ம். பின்னர் கோயில்நடை திறந் து பின்பு சுவாமி தரிசனத்தை மு டித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந் து கிளம்பினால் சரியாக இருக்கும்.




7. புதன் பகவான்

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30மணிக்கு கிளம் பினால் 16கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதா ரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையு ம் தரிசித் துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.




8. கேது பகவான்

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ் பெரும் பள் ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்துவிடலாம். இந்த கீழ்பெரு ம்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூ ரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயி லையும் இணைக்கும் சுரங்கப்பா தை ஒன்று இங்கு அமைந்திருப்ப தாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தி ல் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற் கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.




9. சனி பகவான்

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறு தியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிரு க்கும் திருநள்ளாறுஸ்தலம். கீழ்பெ ரும்ப ள்ளத்திலிருந்து 6.15அல்லது 6.30மணிக்கு புறப்பட்டால் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்க டையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்துவிடமு டியும். அதன்பின்னர் ஸ்ரீதர்பாரன் யேசுவரர் திருக்கோவிலில் சனிபக வானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.













???????????? ????????? ???-?????? ?????
 
I have done this roundup many times. If you stay 3-4 days in kumbakonam you can do many temples. Once i did 33 temples in 3 days- route decided by the driver- many unseen temples very interesting. Another trip i did negapatinam side like vedranyam, kodiyakkarai etc., it is enjoyable since good tasty food in all places good rooms and we think nothing bad other than gods in many ways,
thank god for giving me such opportunities and wish many more
[email protected]
 
Status
Not open for further replies.
Back
Top