• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிப

Status
Not open for further replies.
அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிப

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில், தேவிபட்டிணம்

devipatnam2.jpg




தென்தமிழகத்தின் கடல் சூழ்ந்த பட்டினம் தேவிபட்டினம் என்னும் தேவிபுரம்.
ராமன் இலங்கையைஅடைய பாலம் கட்டுவதற்கு முன் விநாயகப் பெருமானை
பிரதிஷ்டை செய்ய நவபாஷண மிட்ட தலமேதேவிபட்டினம் ஆயிற்று.
அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே
அபிஷேகம், அர்ச்சனைசெய்வது இத்தலத்தின் பெருமை.


ஸ்தல வரலாறு


புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக்
கொண்டு தேவலோகத்தில் உள்ளதேவர்களை துன்புறுத்தினான்.
தேவர்களோ பயந்து என்ன செய்வது என்று தெரியாமல்,
இறுதியாகபராசக்தி தேவியிடம் தங்களை காத்து அருளும்படி
முறையிட்டனர். உடனே பராசக்தி தேவியும்அரக்கனுடன் யுத்தம் செய்ய
புறப்பட்டாள். இதை கண்ட அரக்கன் பயந்து ஒடி வந்து தேவிபட்டினத்திலுள்ள
சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொண்டான். சக்கரதீர்த்தத்தினை பராசக்தி
தன்சக்தியால் வற்றச் செய்துமகிஷாசுரனை சம்ஹாரம் செய்து அவனுக்கு
சாப விமோசனம் அருளினாள். இது கண்டு உளமகிழ்ந்துதேவர்கள்
அமிர்தத்தைப் பொழிந்தனர். அன்று முதல் தேவிபுரம் தேவிபட்டினமாக
வழங்கிவருகிறது.

ராம அவதாரம் : படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்து
அத்தவத்தின் பலனாகதேவ அசுரர்களால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற
வரத்தினை பெறுகிறான் ராவணன். ஆனால்ராவணன் தனக்கு மனிதனால்
மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்கவில்லை, இதுவே ராம
அவதாரம்தோன்றக் காரணமாக அமைந்தது.


devipatnam3.jpg



முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம்
முதலியவை செய்யவும், நவக்கிரகதோஷங்கள் விலகவும், குழந்தை
பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனைசெய்யலாம்.
நவதானியங்கள் படைத்தல், நவக்கிரக வலம், தானம் செய்தல்,
தோஷ பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்தின் முக்கிய
நேர்த்திக்கடன்களாகும்.




ராவணன் சீதையை கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான்.
இதை அறிந்த ராமன் சீதையைமீட்பதற்காக தென்திசைநோக்கி வந்தார்.
தேவசாஸ்திரங்களிலே குறிப்பிட்டது போல் எந்த ஒரு காரியம்செய்வதற்கு
முன்பாக பிள்ளையார் பூஜை, நவக்கிரக பூஜை செய்வது வழக்கம். அதன்படி
ராமபிரானும்உப்புபடிவங்கள் நிறைந்த இடத்தில் விநாயகரைப் பூஜை செய்தார்.
அதுவே தற்போது ராமநாதபுரம்மாவட்டத்திலுள்ள உப்பூர் வெயிலுகந்த
விநாயகரானது. பின்பு 15 கி.மீ., தொலைவிலுள்ள தேவிபட்டினம்வந்தார்.



ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை
பிரதிஷ்டை செய்து வணங்கிய சிறப்பு வாய்ந்தத் தலமே
தேவிபட்டினத்திலுள்ள அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்.
ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம் இதுவேயாகும்.

இங்கே அமைந்துள்ள கடல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமர் தீர்த்தமாகும்.
எல்லாநாட்களிலும் எல்லாகாலங்களிலும்
காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீராடலாம்.


??????? ???????? ??????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top