த்ரயம்பகேஷ்வர் கோவில் -நாசிக்

Status
Not open for further replies.
த்ரயம்பகேஷ்வர் கோவில் -நாசிக்

த்ரயம்பகேஷ்வர் கோவில் -நாசிக்


Trayambageshwar+temple.jpg







மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரத்தில் உள்ளது திர்யம்பக் என்ற ஊர். இந்த ஊரின் மலையடிவாரத்தில் உள்ளது த்ரயம்பகேஷவ்ர் சிவ க்ஷேத்ரம் . சிவ பெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்க கோவில்களில் இதுவும் ஓன்று . புண்ய நதிகளில் ஒன்றான கோதாவரியின் நதிமூலம் த்ரயம்பகேஷ்வர் மலை தான் .இந்த 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களிலும் சிவ பெருமான் தீ போன்ற ஒளி பிழம்பாக காட்சி அளித்ததாக சொல்லபடுகிறது . புராண கதை படி ஒரு முறை பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி நடந்த பொழுது சிவ பெருமான் அவர்களில் யார் பெரியவன் என்பதை சோதித்து பார்க்க முடிவில்லா ஒளி பிழம்பாக உலகை மூன்று கூறுகளாக ஊடுருவினார் . பிரம்மாவும் விஷ்ணுவும் கீழ்புறமாகவும் மேல்புறமாகவும் ஒளி பிழம்பின் முடிவை காண விரைந்தனர். பிரம்மன் ஒளி பிழம்பின் முடிவை கண்டதாக சிவ பெருமானிடம் பொய் சொல்கிறார். விஷ்ணு ஒளி பிழம்பின் முடிவை காண முடியவில்லை என்று சொல்லி தோல்வியை ஒப்புகொள்கிறார் .த்ரயம்பகில் சிவ பெருமான் நாமம் த்ர்யம்பகேஷ்வர் .

மற்ற ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்

சோமநாத் -குஜராத்
மல்லிகார்ஜுனா -ஸ்ரீசைலம்
மகாகாலேஸ்வர் -உஜ்ஜைன்
ஓம்காரேஸ்வர் -மத்திய பிரதேசம்
கேதார்நாத் -ஹிமாலயம்
பீமாஷங்கர் -மகாராஷ்டிரம்
விஸ்வநாத் -காசி
வைத்தியநாத் -ஜார்கண்ட்
நாகேஷ்வர் -த்வாரகா
ராமநாத் -ராமேஸ்வரம்
க்ரிஷ்நேஷ்வர் -ஔரங்கபாத் என்பவையாகும்


trimbakeshwar.png



Brahmma ,Rudran and Vishnu


த்ர்யம்பகேஷ்வர் கோவில் கறுப்பு கற்களால் கட்டப்பட்ட மிகுந்த வேலைபாடுகள் நிறைந்த மிகவும் பழமையான ஒரு கோவில் .கால சர்ப்ப தோஷ சாந்திக்கும் நாகபலி பூஜைக்கும் சிறப்பு பெற்ற கோவில் .அனால் த்ரய்ம்பகேஷ்வர் ஆலயத்தில் என்ன விசேஷம் என்றால் இங்குள்ள சிவ லிங்கம் தாழ்வான ஒரு பகுதியில் இருகிறது . அதே குழிக்குள் பிரம்மா விஷ்ணு மற்றும் ருத்ரன் குறிக்கும் மூன்று முகங்களும் உள்ளது என்று சொல்கிறார்கள் .தொடர்ந்து அபிஷேகங்கள் செய்வதால் இந்த முகங்கள் தேய்ந்து விட்டதால் இப்பொழுது சரியாக தெரிவதில்லை என்றும் சொல்கிறார்கள் .திங்கள் கிழமைகளில் மட்டும் மாலை தங்க கவசம் அலங்காரம் செய்கிறார்கள் .இந்த தங்க கவசத்தில் வைரம் மரகதம் போன்றவைகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றி அழகான பச்சைபசேல் என்ற மலைகளை காணலாம் .அஞ்சனேரி என்று சொல்லப்படும் மலை திர்யம்பகேஷ்வர் கோவிலில் இருந்து 7 கி. மீ தொலைவில் உள்ளது .இங்கு தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சொல்லபடுகிறது .




கருப்பு கற்களால் கட்டப்டுள்ள இந்த கோவிலில் நந்தி மட்டும் வெள்ளை கல்லால் ஆன சிலையாக இருக்கிறது. நந்தியை தாண்டி உள்ளே சென்றால் மூல ஸ்தானம் .இங்கு சிவ லிங்கம் தாழ்வான் பகுதியில் ஒரு பள்ளத்தில் இருப்பதை காணலாம் . நம் ஊரில் இருப்பது போல சிவன் கோவிலில் அம்மன் சன்னதி இங்கு காணப்படவில்லை . கோவில் உள்ளயே ஒரு தெப்பகுளம் இருக்கிறது . கோவிலுக்கு பின்புறம் தெரியும் மலை தான் ப்ரிம்மகிரி மலை .இது தான் கோதாவரியின் நதி மூலம் .

நீண்ட வரிசையில் நின்று தான் கோவிலுக்குள் செல்ல வேண்டியிருந்தது . கோவிலுக்கு வெளியில் மேலே தாற்காலிக கூரை போட்டு வரிசையில் நிற்பவர்களுக்கு வசதி செய்திருக்கிறார்கள் .ஏனெனில் இங்கு மழையும் வெயிலும் அதிகமாக இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த தாற்காலிக வரிசை நிற்கும் இடத்தில் தரையில் தளம் அமைக்காததால் பெரிய கூறிய கற்கள் நிறைந்த இடமாக இருக்கிறது . செருப்பில்லாமல் வரிசையில் நிற்பதினால் காலை பதம் பார்த்து விடுகிறது . இதை தவிர்க்க தரையில் அவர்கள் ஒரு கம்பளம் விரித்திருக்கிறார்கள் .இருந்தாலும் அது தொடர்ச்சியாக இல்லாததாலும் பல இடங்களில் கிழிந்து இருப்பதாலும் காலை பதம் பார்த்து விடுகிறது . கோவிலுக்குள் சென்று பிறகும் வரிசை நீளமாக இருந்தது . நாங்கள் கேள்விபட்டோம் இந்த கோவிலில் எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்று.




http://mathuraikaran.blogspot.com/
 
When you get down at nasik, there is a pond, take bath in it, and afterwards you can ask the shopkeep to keep your bags. I went into the temple and had the darshan from external praharam, Now that is just not enough, In north one can do pooja himself in the garba graha, I asked the officials there but was refused entry to santum santorum....
hmmmmm.....

There was a security at the santum santorum, I enquired with him, He asked me to wait, so that he can make some arrangements. I waited, now he introduced a priest to me, and the priest asked me what type of pooja you want to do, rs.500/-, rs.1000/-, I said i want to do rs.100/-, He agreed asked me to wear a dhoti and leave my shirt and pants outside, Nothing should be worn inside, I went with him, I touched all the three lingsas, which are in the form of a tiny pebbles, and he asked me to touch the side of the lingam, to feel the river and said that river comes till the garba graha, Fully contended, I left the temple, don't remember paying the security money or not. But remembered saying thanks to him,..........

But sad thing is in omkareshwar 8 years back, I sat in the garba graha did all the pooja myself, it was almost empty early morning, For almost half an hour i was there, I did not pay any money, but now one cannot go near the jyotirlingam, one needs to pour water in a glass like vessel which directs the water to the jyotirlingam, You cannot even touch the jyotirling. Now to some extent this is correct, but the other end it is wrong too... the narmada river was pure once upon a time, now all the draingae of the locality is being directed inside the river, added to it, people use soap and bath(me too....), and the same water the devotees take it in a kalash and do the abishegam to the jyotirlingam(I din't do it.), It would be more correct if the temple admin could provide the gangajal for paid service(if free is not possible), then even more sanctity will be restored.
 
Status
Not open for further replies.
Back
Top