தொல்காப்பியத்தில் நெருடல்
Picture shows Kannaki's cooking for Kovalan
தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 3
தொல்காப்பியத்தின் துவக்க வரியே நெருடலாக இருக்கிறது. “எழுத்தெனப்படுவது” என்று செயப்பாட்டு (வினை) பொருளில் –Pseudo Passive voice--துவக்குகிறார். இதை பொருளதிகாரத்திலும் காண்கிறோம். உலகத்தில் வேறு எந்த நூலும் இப்படித் துவங்குவதாகத் தெஇயவில்லை.
சொல்லப்/ பட்டன/ படும்/ பட்ட (3-564-1, 651-1; 3-63-22, 68-8, 253-2,). இது போல மணிமேகலை-24,30. திருக்குறளிலும் ‘கொல்லப்படு’ என்ற சொல் வருகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் காலத்தைக் காட்டுவதோடு மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை என்பதையும் காட்டும்.
புரிதல், புரிந்தோள் என்பன தொல்காப்பியத்தோடு சிலப்பதிகாரம், மணிமேகலையில் மட்டூமே வரும்.
ஆகும்: இந்தச் சொல் மூன்று அதிக்கரங்களிலும் நிறைய இடங்களில் வரும். மேலும் சம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஆசிரியர் மூன்று அதிகரங்களையும் எழுதாவிடில் இப்படி இருக்கமுடியாது. புறநானூற்றில் மூன்றே இடங்களில் மட்டுமே வருகிறது.
எண்ணுங்காலும்: இது தொல். இல் 2-47-1 ல் உள்ளது. இதைத் தவிர திணைமாலை ஐம்பதில் (150-2) மட்டுமே வருகிறது. இப்படிக் ‘கால்’ விகுதியுடன் வருவது சங்க காலத்தில் மிகமிகக் குறைவு. கலி., குறள் போன்ற நூல்களில்தான் அதிகம்.
எப்பொருள்: இது சொல் அதிகாரத்துக்குப் பின்னர் குறள் முதலான பிற்கால நூல்களில் மட்டுமே உள்ளது. மேலும் ‘எப்’ துவக்கத்துடன் சங்க இலக்கியத்தில் சொற்களே இல்லை.
என்ப: தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த இச்சொல் மூன்று அதிகாரங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் ஒரே ஆசிரியர், ஒரே காலத்தில் எழுதியதே என்பதைக் காட்டும்.
என்மனார்: முன்னர் குறிப்பிட்டது போல 60--க்கும் மேலான இடத்தில் வரும் இச்சொல்லும் 3 அதிகாரங்களிலும் காணப்படுகிறது. இது தவிர கலித்தொகை, குறுந்தொகையில் இரண்டே இடங்களில்தான் வருகிறது.
என்றா: இந்தச் சொல்லும் 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை.
ஏனை, ஏனவை: ஏனவை என்ற சொல்லை 1, 3 அதிகாரங்களைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. ஏனை, என்ற சொல் குறிஞ்சிப்பாட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வரும். தொல். இல் எல்லா அதிகாரங்களிலும் காணப்படுகிறது.
எண்கள்: ஐந்து, எட்டு, ஐம்பது, ஐயீர் ஆயிரம் போன்ற எண்களை 3 அதிகாரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்.
உயிர் எழுத்துக்களில் துவங்கும் சொற்களில் இருந்து மட்டுமே எடுத்துகாட்டுகளைக் கொடுத்தேன். ஏணையவற்றைக் கொடுத்தால் கட்டுரை நீளும்.
எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் கொண்டு பல வினைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இவை புற நானூற்றில் குறைவாகவும், பிற்காலத்தில் அதிகமாகவும் புழக்கத்தில் உள்ளன.எள்ளின், எள்ளாமை, எள்ளாது--- குறள் முதலிய நூல்களில் மட்டுமே வரும். எள்ளின் என்ற சொல் தொல். 3-109-7 தவிர குறள், கலி. மணி.யில் மட்டுமே வருகிறது.
‘இன்’- னில் முடியும் சொற்கள் ஒன்றின், நுவலின், நீங்கின், மறுப்பின், மறைப்பின் முதலியன தொல். தவிர குறள், சிலம்பு முதலிய சங்கம் மருவிய கால நூல்களிலேயே காணலாம்.
Continued in Part 4; contact [email protected]