• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

தொலைந்து போனவை ................

  • Thread starter Thread starter Falcon
  • Start date Start date
Status
Not open for further replies.
F

Falcon

Guest
தொலைந்து போனவை ................




சுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்

அந்த காலம் தான்
நன்றாக இருந்தது....!
******
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
*******
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள் .,
*******
மிதி வண்டி வைத்திருந்தோம்.,
*********
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
********
ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

KB படங்கள் என்றால்
ஒரு மாதம்அலசுவோம்
*****
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
********
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு
*******
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
********
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
*******
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும் பாடல் கேட்பது
சுகமானது
********
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்
*******
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்
**********
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்
*******
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு DEEPAWALI DRESS
*****
டான்ஸில் ஆபரேஷன்தான்
பெரிய ஆபரேஷன்
நிறைய பேர்
பண்ணி கொண்டார்கள்
*******
வானொலி நாடகங்களை
ரசித்து கேட்டோம்.,
********
எல்லோரும் அரசு பள்ளிகளில்
படித்தோம்.,
*******
சாலையில் எப்போதாவது
வண்டி வரும்.,
*******
மழை நின்று
நிதானமாக பொழியும்
*******
தமிழ் ஆசிரியர்கள்
தன்நிகரற்று விளங்கினர்.,
*********
வேலைக்கு போகாதவன்
எந்த குடும்பத்திற்க்கும்
பாரமாயில்லை.,
*********
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,
*******
வெஸ்ட் இன்டீசை
வெல்லவே முடியாது.,
*********
சந்தைக்கு போக
பத்து ரூபாய் போதும்.,
*******
அம்மா பக்கத்தில் உறங்கினோம்
*********
கொளுத்தும் வெயிலில்
செருப்பு இல்லாமல் நடந்தோம்
********
முடி வெட்ட
இரண்டு ரூபாய்தான்.,
Shaving 50 பைசா
-------------------
பருவ பெண்கள் பாவாடை
தாவணி உடுத்தினர்………
சிலிண்டர் மூடுதுணி போல்
யாரும் நைட்டி அணிய வில்லை.,
******
சுவாசிக்க காற்று இருந்தது.,
குடிதண்ணீரை யாரும்
விலைக்கு வாங்க வில்லை.,
********
தெருவில் சிறுமிகள்
பல்லாங்குழி ஆடுவார்கள்.
அவர்களை கலாய்த்துகொண்டே
நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,
*******
டாக்டர் வீட்டுக்கே வருவார்
********
காதலிப்பது த்ரில்லிங்கா இருந்தது
*******
சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

*******
மயில் இறகுகள்
குட்டி போட்டன...புத்தகத்தில்.,
******
ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு
அப்பாவிடம் அடி வாங்கி்னோம்..,
*******
மூன்றாம் வகுப்பிலிருந்து
மட்டுமே,ஆங்கிலம்.,
******
ஐந்தாம் வகுப்பு வரை
அரைக்கால் டவுசர்.,
******
மொத்தத்தில் மரியாதை இருந்தது..
*******
தொலைந்து போனவை
நம் நாட்கள் மட்டுமல்ல.,
நம் சுகங்களும்தான்..,
*********

கற்றதும் பெற்றதும்⁠⁠⁠⁠

Source: WhatsApp
 
Last edited by a moderator:
hi

தொலைத்து போனவை பல விஷயங்களும் பொருள்களும் மட்டும் அல்ல.....இன்று நல்ல உள்ளங்கள் மற்றும்

உறவினர்களும் தொலைந்து விட்டார்கள்.......உறவுகள் என்றும் சுகமானவை.....அன்பு தொல்லை தான்...

ஆனால் அன்று அன்பு சொல்ல உறவுகள் இருந்தன.....கொஞ்சம் தொல்லை தான்...இன்று அன்பும்

இல்லை ....தொல்லையும் இல்லை.....தொலைந்து அதிகம்.....இன்று கிடைத்தது வெறும் மன உளைச்சல்

மட்டும் தான்...
 
Status
Not open for further replies.
Back
Top