தேவி நீயே துணை!

Status
Not open for further replies.
# 47 .

தத: ச'தேன நேத்ராணாம் நிரீக்ஷிஷ்யாமி யன்முனீன் |
கீர்தயிஷ்யந்தி மனுஜா : ஸதாக்ஷீமிதி மாம் தத: ||

அப்போது முனிவர்களை நான் நூறு கண்கள் கொண்டு பார்க்கப் போவதால் மனிதர்கள் என்னை 'சதாக்ஷீ' என்ற போற்றுவார்.

# 48

ததோஹமகி2லம் லோகமாத்மதேஹ ஸமுத்3ப4யை : |
ப4ரிஷ்யாமி ஸுரா: சா'கைராவ்ருஷ்டே: ப்ராணதா4ரகை : ||

பின்னர் மழை பெய்யும் வரை, உயிரைக் காக்கும் ஓஷதிகளை என்னுடைய உடலிலிருந்தே தோற்றுவித்து, அவற்றால் உலகைப் போஷிக்கப்போகின்றேன்.

 
# 49.

சா'கம்ப4ரீதி விக்யாதிம் ததா3 யாஸ்யாம்யஹம் பு4வி |
தத்ரைவ ச வதி4ஷ்யாமி து3ர்க்கமாக்2யம் மஹாஸுரம் ||

அப்போது பூமியில் நான் சாகம்பரீ என்று புகழ் அடைவேன்.
அதே காலத்தில் துர்க்கமன் என்னும் கொடிய அசுரனையும் வதம் செய்வேன்.

# 50

து3ர்க்கா3 தே3விதி விக்2யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
புனச்'சாஹம் யதா3 பீ4மம் ரூபம் க்ருத்வா ஹிமாச்சலே ||

# 51

ரக்ஷாம்ஸி ப4க்ஷயிஷ்யாமி முனீனாம் த்ராணகாரணாத் |
ததா3 மாம் முனய: ஸர்வே ஸ்தோஷ்யந்த்யா நம்ரமூர்த்தய : ||

# 52.

பீ4மா தே3வீதி விக்யாதம் தன்மே நாம ப4விஷ்யதி |
யதா3ருணாக்யஸ் த்ரைலோக்யே மஹாபா3தா4ம் கரிஷ்யதி ||

# 53.

ததா3ஹம் ப்4ராமரம் ரூபம் க்ருத்வா ஸங்க்யேய ஷட்பத3ம் |
த்ரைலோக்யஸ்ச ஹிதார்தா2ய வதி3ஷ்யாமி மஹாஸுரான் ||

அதனால் எனக்கு துர்க்காதேவி என்னும் சிறந்த பெயர் ஏற்படும்.
மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பாற்ற ஒரு பயங்கரமான
வடிவத்தை எடுத்துக் கொண்டு ராக்ஷசர்களை அழிப்பேன்.

அப்போது முனிவர்கள் என்னைத் தலை வணங்கி
எனக்கு பீமா தேவி என்ற சிறந்த பெயரை அளிப்பார்கள்.

அருணன் என்னும் அசுரன் மூன்று உலகங்களுக்கும் கொடுமை
இழைக்கும்போது நான் ஆறு கால்களுடைய வண்டுக்களின்
கூட்டமாகத் தோன்றி அக்கொடிய அசுரனை வதம் செய்வேன்.

 
# 55.

ததா3ததா3வதீர்யாஹம் கரிஷ்யாம்யரி ஸம்க்ஷயம் || ஓம் ||

அப்போது உலக மக்கள் எல்லோரும் எங்கும் என்னை 'ப்ராமரீ' என்ற பெயரில் துதிக்கப் போகின்றார்கள். இவ்வாறு எப்போதெல்லாம் தானவர்களின் வளர்ச்சியும், நல்லவர்களின் தளர்ச்சியும் ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரித்து சத்ருக்களை நாசம் செய்வேன்.

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்ட3புராணே ஸாவர்ணிகே மன்வன்தரே
தே3விமாஹாத்ம்யே ஏகாத3சோ'த்3யாய :

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்தில் உள்ள தேவி மஹாத்மியத்தில் பதினோராவது அத்தியாயம் முற்றிற்று. :hail: :hail:

அன்னையின் புகழ் வாழ்க! அன்னையின் புகழ் வளர்க!
அன்னையின் அருள் அனைவருக்கும் நல்லறிவையும்,
நல்ல வாழ்க்கை நெறியையும், நீண்ட ஆயுளையும் தருக! :pray:

மீண்டும் வேறு ஒரு நூலில் (thread )
மீண்டும் வேறு ஒரு நூலுடன் ( literary work )
சந்திக்கும் வரையில் விடை பெறும்,
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.:pray2:
 
Status
Not open for further replies.
Back
Top