தேவி நீயே துணை!

Status
Not open for further replies.
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

நதேப்4யோ ஸர்வதா3 பக்த்யா சண்டி3கே ப்ரணதாயமே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (7)

பரப்ரம்ம ஸ்வரூபிணி ஆகிய அன்னையே!எப்போதும் மாறாத பக்தியுடன் உன்னை வணங்குவோருக்கும் எனக்கும
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! எம் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸ்துவத்ப்௪ : ப4க்திபூர்வம் த்வாம் சண்டி3கே வ்யாதி3 நாசி'னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || (8)

சண்டிகையே! அனைத்து வியாதிகளையும் நாசம் செய்பவளே!பக்தியுடன் உன்னைத் துதிப்பபவர்களுக்கு நீ
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

சண்டி3கே ஸததம் யே த்வாமர்சயந்தீஹ ப4க்தித: |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 9

சண்டிகையே! எவர் எவர் உன்னை எப்போதும் மாறாத பக்தியுடன்
அர்சிக்கின்றார்களோ அவர்களுக்கு
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! அவர்களின் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3ஹி சௌபா4க்4யமாரோக்3யம்
தே3ஹிதே3வி பரம் ஸுக2ம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 10

தேவி! சௌபாக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் அளிப்பாய்.
பிரமானந்தம் ஆ
கிய பேரின்பத்தையும் அளிப்பாய்.
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

விதே4ஹி த்3விஷதாம் நாச'ம் விதே4ஹி ப3லமுச்சகை : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி|| 11

சத்ருக்களை நாசம் செய்வாய்! அற்புதமான பலத்தைத் தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

விதே4ஹி தே3வி கல்யாணம் விதே4ஹி விபுலாம் ச்'ரியம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 12

தேவி! மங்கலத்தை அளிப்பாய்! நிறைந்த செல்வத்தை தருவாய்!

நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

வித்3யாவந்தம் யச'ஸ்வந்தம் லக்ஷ்மிவந்தம் ஜனம் குரு |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 13

கல்விமான் ஆக்குவாய்! புகழ் பெற்றவன் ஆக்குவாய்! செல்வம் படைத்தவனாகவும் இந்த மனிதர்களை ஆக்குவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ப்ரசண்ட3 தை3த்ய த3ர்பக்4னே சண்டி3கே ப்ரணதாய மே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 14

பெயர்பெற்ற தைத்தியர்களின் செருக்கை அழித்தவளே!
சண்டிகையே! வணங்கும் எனக்கு
நல்ல ரூபத்தைத் தருவாய்!
நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்!
பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
Last edited:
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

சதுர்பு4ஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேச்'வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 15

நான்கு புஜங்களை உடையவளே! நான் முகனால் துதிக்கப் படுபவளே! பரமேச்வரி!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.

க்ருஷ்ணேன ஸம்ஸ்துதேதே3வி ச'ச்'வத்ப4க்த்யா ததா2ம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 16

அம்பிகையே! தேவி! கிருஷ்ணபகவானால் இடைவிடாது பக்தியுடன் துதிக்கப் பட்டவளே!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்.
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

ஹிமாசல ஸுதாநாத2 பூஜிதே பரமேச்'வரி |

ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி |
| 17

பார்வதி நாதனால் பூஜிக்கப் பட்டவளே! பரமேச்வரி!

நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

ஸுராஸுர சி'ரோரத்ன நிக்4ருஷ்ட சரணேம்பிகே |

ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி|
| 18

தேவர்களும் அசுரர்களும் தங்கள் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களால் தொட்டு வணங்கும் அழகிய பாதங்களை உடையவளே! அம்பிகையே!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

இந்த3ராணீபதி ஸத்3பா4வ பூஜிதே பரமேச்'வரி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி |
| 19

இந்திராணியின் பதியாகிய இந்திரனால் நன்கு பூஜிக்கப் பட்டவளே! பரமேஸ்வரி!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

தே3வி ப்ரசண்ட3தோ3ர்த3ண்ட3 தை3த்ய த3ர்ப விநாசி'னி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 20

தேவி! கொடிய தோள் வலிமை படைத்த தை
த்தியர்களின் கர்வத்தை நாசம் செய்தவளே!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!
 
அர்க்க3லா ஸ்தோத்திரம்.

தே3வி! ப4க்த ஜனோத்3தா3ம த3த்தானந்தோ3த3யேம்பி3கே |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ' தே3ஹி த்3விஷோ ஜஹி || 21

தேவி! பக்தர்களுக்கு பரமானந்தத்தின் மூலமான முக்தியை அளிப்பவளே!அம்பிகையே!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்! நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

பத்னீம் மனோரமாம் தே3ஹி மனோவ்ருத்தானுஸாரிணீம் |
தாரிணீம் து3ர்க3 ஸம்ஸார ஸாக3ரஸ்ய குலோத்3ப4வாம் || 22

மனதுக்கு இனியவளாகவும், மனதின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுபவளாகாவும், கடப்பதற்கு அரிய ஸம்சார சாகரத்தைக் கடக்க உதவுபவளாகவும், நல்ல குலத்தில் உதித்தவளும் ஆகிய மனைவியை அளிப்பாய்.
 
ப2லஸ்ருதி:

இத3ம் ஸ்தோத்ரம் படி2த்வா து ம
ஹாஸ்தோத்ரம் படே2ன் நர :|
ஸ து ஸப்த ச'தி ஸங்க்2யா வர மாப்நோதி ஸம்பத3 :||

இந்த ஸ்தோதிரத்தைப் படித்த பிறகே தேவி மாஹாத்மியத்தைப் படிக்க வேண்டும். அதனால் சிறந்த பலன் கைக்கூடும், சகல சம்பத்தும் கிடைக்கும்.

இதி ஸ்ரீ மார்கண்டே3ய புராணே அ
ர்க்க3லா ஸ்தோத்ரம் ஸமாப்தம் ||
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

தே3வா ஊசு: || (8)
நமோ தே3வ்யை மஹா தே3வ்யை சி'வாயை ஸததம் நம : |
நம: ப்ரக்ருத்யை ப4த்3ராயை நியதா: ப்ரணதாஸ்மதாம் || (9)

தேவர்கள் கூறியது:-
தேவிக்கு நமஸ்காரம். மஹா தேவிக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம். இயற்கை என்கின்ற வடிவானவளுக்கு நமஸ்காரம். மங்கள ஸ்வரூபிணியான அன்னையை அடக்க ஒடுக்கமாக நாங்கள் வழிபடுகின்றோம்.

ரௌத்3ராயை நமோ நித்யாயை கௌ3ர்யை தா4த்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்நாயை சேந்து3ரூபிண்யை ஸுகா2யை ஸததம் நம: || (10)

பயங்கர வடிவை உடைய தேவிக்கு நமஸ்காரம். நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரிக்கு நமஸ்காரம். உலகையே தாங்குபவளுக்கு நமஸ்காரம். ஒளி வடிவானவளுக்கு நமஸ்காரம். சந்திரப்பிரபையை போன்ற தேவிக்கு நமஸ்காரம். இன்ப வடிவானவளுக்கு என்றென்றும் எங்கள் நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்3த்யை ஸித்3த்4யை குர்மோ நமோ நம : |
நைர்ருத்யை பூ4ப்4ருதாம் லக்ஷ்ம்யை ச'ர்வாண்யை தே நமோ நம : || (11)

சரணமடைந்தோருக்கு எல்லா நலன்களுமாகத் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும், மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரம். புவியாளும் அரசருக்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவனின் பத்தினிக்கு மீண்டும் மீண்டும் எங்கள் நமஸ்காரங்கள்.

து3ர்கா3யை துர்க3பாராயை ஸாராயை ஸர்வகாரிண்யை |
க்யாத்யை ததை2வ க்ருஷ்ணாயை தூ4ம்ராயை ஸததம் நம: || (12)

கஷ்டங்களைக் கடக்க உதவும் துர்க்கை வடிவினளும், அனைத்தின் சாராம்சம் ஆனவளும், அனைத்தயுமே ஆக்குபவளும், கியாதி வடிவினளும், கரிய நிறத்தவளும், புகை வடிவினளும் ஆன தேவிக்கு என்றென்றும் நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

அதிஸௌம்யாதி ரௌத்3ராயை நாதாஸ் தஸ்யை நமோ நம : |
நமோ ஜக3த்ப்ரதிஷ்ட்டா2யை தே3வ்யை க்ருத்யை நமோ நம : || (13)

இனிய வடிவினை உடையவளும், பயங்கர வடிவினை உடையவளும் ஆகிய தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். உலகின் ஆதாரமாகவும், உலகின் இயக்கமாகவும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வ பூ4தேஷு விஷ்ணு மாயேதி ச'ப்3தி3தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : || (14 -16 )

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் விஷ்ணு மாயை என்று கூறப்படுகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு சேதநேத்யபி4தீ4யதே |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(17 -19)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சைதன்ய வடிவினள் என்று கூறப்படுகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு புத்3தி4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(20 - 22)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் புத்திவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு நித்3ராரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(23 - 25)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நித்திரைவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு க்ஷுதா4ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(26 - 28)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பசிவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு ச்சா2யாரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(29 - 31)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பிரதி பிம்பவடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு ச'க்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(32 -34)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவில் உறை
கின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷுத்ருஷ்ணா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(35 - 37)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் வேட்க்கையின் வடிவில் உறைகின்றாளோ ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு க்ஷாந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(38 - 40)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் பொறுமையின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
யாதே3வி ஸர்வபூ4தேஷு ஜாதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(41 - 43)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜாதியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு லஜ்ஜா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(44 - 46)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் நாணத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு சா'ந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(47 - 49)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சாந்தி வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு ச்'ரத்3தா4 ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(50 - 52)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் சிரத்தையின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு காந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(53 - 55)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் காந்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு லக்ஷ்மீ ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(56 - 58)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் செல்வத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு வ்ருத்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(59 - 61)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனோபாயம் என்னும் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு ஸ்ம்ருதி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(62 - 64)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் ஞாபக சக்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு த3யா ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(65 - 67)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் இரக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு துஷ்டி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(68 - 70)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் திருப்தியின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

யாதே3வி ஸர்வபூ4தேஷு மாத்ரு ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(71 - 73)

எந்
த தேவி எல்லா உயிர்களிடத்திலும் தாயின் வடிவில் உறைகின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

யாதே3வி ஸர்வபூ4தேஷு ப்4ராந்தி ரூபேணே ஸம்ஸ்தி2தா |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை நமோ நம : ||
(74 -76)

எந்த தேவி எல்லா உயிர்களிடத்திலும் மயக்கத்தின் வடிவில் உறைகின்றாளோ,
அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
 
ஐந்தாவது அத்யாயத்தில் காணப்படும்
தேவர்கள் செய்த தேவி ஸ்துதி இது.

இந்த்3ரியாணாமதி4ஷ்டாத்ரீ பூ4தானாஞ்சாகி2லேஷு யா |
பூ4தேஷு ஸததம் தஸ்யை வ்யாப்திதே3வ்யை நமோ நம : || (77)

எந்ததேவி இந்திரியங்களை ஆள்பவளாக, எல்லா உயிர்களிடத்தும், எல்லப் பொருட்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ; அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

சிதிரூபேண யா க்ருத்ஸனமேதத் வ்யாப்ய ஸ்திதா ஜக3த் |
நமஸ்தஸ்யை || நமஸ்தஸ்யை|| நமஸ்தஸ்யை நமோ நம : || (78 - 80)

எந்ததேவி இந்த உலகம் முழுவதிலும் சைதன்யவடிவினளாக வியாபித்து நிற்கின்றாளோ, அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

இவ்வாறு தேவர்கள் கூடி தேவியைத் துதித்த போது, கங்கையில் நீராடப் பார்வதி தேவி வந்தாள்.
 
தேவி ஸ்துதி
பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது.

தே3வி ப்ரபன்னார்த்திஹரே ப்ரஸீத3
ப்ரஸீத3 மாதர் ஜக3தோகி2லஸ்ய |
ப்ரஸீத3 விச்'வேச்'வரி பாஹி விஸ்வம்
த்வமீச்'வரி தே3வி சராசரஸ்ய || (3)

தேவி! சரணம் அடைந்தவர்களின் துன்பங்களைத் துடைத்தருள்பவளே! அருள்புரிவாய்! அருள்புரிவாய்! உலகனைத்துக்கும் அன்னையே! அருள்புரிவாய்! உலகத்தின் ஈஸ்வரி! உலகினைக் காப்பாய்! தேவி! நீயே சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஆள்பவள்.
 
தேவி ஸ்துதி
பதினோராவது அத்தியாயத்தில் காணப்படுவது.

ஆதா4ரபூ4தா ஜகதஸ்த்வமேகா
மஹீஸ்வரூபேண யத: ஸ்தி2தாஸி |
அபாம் ஸ்வரூப ஸ்தி2தயா த்வயைத
தா3ப்யாயதே க்ருத்ஸ்ன மலங்க்4யவீர்யே || (4)

பிருதிவியின் வடிவில் இருப்பதனால் உலகிற்கு நீ ஒருத்தியே ஆதாரம் ஆகின்றாய். கடப்பதற்கரிய வீரியம் வாய்ந்தவளே! நீரின் வடிவில் நீ இருப்பதனாலேயே இது நிகழ்கின்றது.

Status
Not open for further replies.
Back
Top