• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தேவாரம்

  • Thread starter Thread starter Saab
  • Start date Start date
Status
Not open for further replies.
S

Saab

Guest
ThEvaaram is derived from the Sanskrit Deva Haaram meaning Divine Garland. ThEvaram is a collection of songs in praise of Lord Shiva sung by three great Naayanmaars - Sambandhar, Appar (Thirunaavukkarasar) and Sundarar (Sundaramoorthi Nayanaar).

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை

முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டித்
தூ மாமழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆ மாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார் வினை இலரே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: ஆண் குரங்கு மாங்கனியைப் பறிக்க, விடுபட்ட மரக்கொம்பிற் பட்டிருந்த பெருமழையானது, பாறை மீது சிறு துளிகளாகச் சிதற, இது கண்ட பசுக்கூட்டங்கள் பொழில்களில் ஒதுங்கும், திருவண்ணாமலையில் உறையும் அண்ணலாரின் பூப்போன்ற பெருங்கழல் அணிந்த செம்மையான திருவடியை நினைப்பவர்கள், வினை இல்லாதவர்கள்!

Courtesy: Shaivam.org
 
Last edited by a moderator:
திருஞான சம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை

முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்
ஆலிம் மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி நினைவார் வினையிலரே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும், மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற விரிந்த சாரலும், நீர்த்துளிகள் நிறைந்த மேகங்கள் தவழ்கின்ற (உயர்ந்த) காடுகளும் உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற அண்ணலாரின் காலனுடைய வலிமையை நீக்கிய சேவடிகளை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் வினை நீங்கப்பெற்றவர்கள்.
 
Dear Sri Saab

This is an excellent effort. You have given us the benefit of reading one Thevaram a day. Thanks. sorry that I dont have Tamil fonts now.
 
Thank you Appaiahji,

I will try to post one every day.

Regards,
Saab
 
திருஞான சம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்

பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்
ஆலிம் மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி நினைவார் வினையிலரே.

திருச்சிற்றம்பலம்
பொருளுரை: பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும், மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற விரிந்த சாரலும், நீர்த்துளிகள் நிறைந்த மேகங்கள் தவழ்கின்ற (உயர்ந்த) காடுகளும் உடைய திருவண்ணாமலையில் உறைகின்ற அண்ணலாரின் காலனுடைய வலிமையை நீக்கிய சேவடிகளை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் வினை நீங்கப்பெற்றவர்கள்.
 
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

உதிரும் மயிர் இடுவெண்டலை கலனா உலகெல்லாம்
எதிரும் பலி உணலாகவும் எருது ஏறுவது அல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேற் கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலையதுவே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: முடி உதிர்ந்த வெண் தலையை இடுகின்ற ஓடாகக் கொண்டு உலகெங்கும் எடுக்கும் பிச்சையை உணவாகவும், எருதினை வாகனமாகவும் உடையவராக இருப்பது மட்டுமல்லாமல் முதிர்ந்த சடைமேல் இளமையான வெண்பிறையை அணிந்து திருவடிகளில் அதிர்ந்து ஒலிக்கின்ற கழல்களை உடைய அடிகளாருடைய இடமே அந்தத் திருவண்ணாமலை.
 
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்
கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: நீர்ப் பெருக்கம் உடைய திருவண்ணாமலையாகியவரும், பிறைச்சந்திரன் தோன்றிய கடலின் விடத்தைப் பருகுகின்ற துணிவினை உடையவரும், திருநீறு அணிந்தவரும், அவ்விடத்தைப் பருகிக் கண்டம் கறுத்தவரும், மணம் கமழ்கின்ற திருச்சடையை உடையவரும் ஆகிய பெருமானின் கழலணிந்த திருவடிகளை வாழ்த்தி, உருகுகின்ற உள்ளம் உடையவர்களைக் கொடுமையான நோய் தாக்காது.
 
பேயோடாடும் பிரான் பெண்ணோடு அமர்வது எங்கே?

திரு ஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருவண்ணாமலை
முதல் திருமுறை

திருச்சிற்றம்பலம்

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை உதையுண்டு அவை உருள
எரியாடிய இறைவர்க்கு இடம் இன வண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலையதுவே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை: கரிந்த கால்கள் உடையனவும், குடரைக் கவர்ந்து தின்னுவனவும் ஆகிய பேர்கள் ஆடிய காட்டில், சிரித்தபடி இருக்கின்ற வெண்மையான தலைகள் நரிகளால் உதைபட்டு உருள, (அங்கு) எரியேந்தி ஆடுகின்ற இறைவருக்கு, வரியுடைய கண்களையுடைய அம்மையினோடு இருக்கும் இடம் யாதெனில், இன வண்டுகள் ஒலிக்கின்ற திருவண்ணாமலையே ஆகும்.
 
Dear Saab,

I know I'm stretching your limits, but I would like some commentry along with the meaning , could be yours or someone well versed in the subject.

Please consider my requests.

Thanks

Regards

malgova.mango
 
OK MMji, I will try. Would you like the explanations in English or Tamil?

Regards,
Saab
 
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை

திருவடித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

வைதெழுவார் காமம் பொய் போகா அடி
வஞ்ச வலைப்பாடொன்று இல்லா அடி
கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி
கணக்கு வழக்கைக் கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்ற அடி
தெய்வப் புனற் கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி. 6.6.3

திருச்சிற்றம்பலம்

பொருளுரை:
இகழ்ந்து உரைப்பவர்களின் விருப்பங்களும்
அவர்கள் பொய்யும் சென்று சேராத திருவடி;
வஞ்சித்து ஆழச்செய்யாத (பழியிலாத்) திருவடி;
கை தொழுது நாம் பரவிக் காணும் திருவடி;
(நம்) தந்திரங்கள், (உலக) வழக்கங்களைக் கடந்த திருவடி;
நாம் தொழுதேத்தி நெய்யால் ஆட்டும் திருவடி;
நீண்ட வானத்தைக் கடந்து நின்ற திருவடி;
தெய்வத்தன்மை உடைய நீரான கெடில நாடுடையான் திருவடி;
திருவீரட்டானத்தில் உறையும் எம் செல்வன் திருவடி!

Notes:
1. வைதெழுவார் காமம் பொய் போகாவடி
ஒ: சங்கரன் சார்ந்தவர்க்கல்லால் நலமிலன் - அப்பர்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே - அப்பர்
சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்
.... அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே - சம்பந்தர்
2. வஞ்ச வலைப்பாடு இல்லா அடி
(சிவபெருமான் வழுவியவர்களையும் நெறிப்படுத்துவாரே அன்றி,
ஒரு பொழுதும் வஞ்சித்து ஒரு உயிரைக் கேட்டிற்குத் தள்ளியதில்லை.)
ஒ: திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பெருமான் புகழலது இகழ் பழி இலரே - சம்பந்தர்
பழியில் புகழாய் - சம்பந்தர்
3. கணக்கு வழக்கை கடந்த அடி
ஒ: அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்று எழுதிக் காட்டொணாதே - அப்பர்
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
இத்தந்திரத்தின் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனி வரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள் நுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின்
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும் போய்த்
துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியில் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டு இல்லை என்று அறிவு ஒளித்தும் - மணிவாசகர்
4. நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
அபிடேகப் பொருள்களில் நெய் முத்திப் பயன் பெற
ஆட்டப் பெறுவது. எனவே மிகவும் சிறப்புடையது.
 
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை

திருவடித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

அரும்பித்த செஞ்ஞாயிறேய்க்கும் அடி
அழகு எழுதலாகா அருட் சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த அடி
சோமனையுங் காலனையுங் காய்ந்த அடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி
பிழைத்தார் பிழை அறிய வல்ல அடி
திருந்து நீர்த் தென் கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி. 6.6.4

திருச்சிற்றம்பலம்

பொருளுரை:
அரும்பி எழுகின்ற செஞ்ஞாயிற்றினும் சிவந்த திருவடி;
அழகு எழுதலாகாத அருட் சேவடி;
ஆண் பெண் வண்டினங்கள் சூழ்ந்த திருவடி;
சோமனையும் காலனையும் உதைத்த திருவடி;
பெரும்பித்தர்களாகிய அடியவர்கள் கூடிப் பிதற்றும் திருவடி;
தவறு செய்வோர் தவறுகளை எல்லாம் அறியவல்ல திருவடி;
தெளிந்த நீரை உடைய தென் கெடில நாடுடையான் திருவடி;
திருமூலட்டானத்து உறையும் எம் செல்வனுடைய திருவடி!

Notes:
1. சோமன் - தக்க யாகத்தில் காய்ந்தது;
காலன் - மார்க்கண்டர்க்காகக் காய்ந்தது;
2. பிழைத்தார் பிழை அறிய வல்ல அடி
ஒ: கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந்தாரே. - திருமந்திரம்
 
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை

திருவடித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி
ஊழிதோறூழி உயர்ந்த அடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் அடி
புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி
இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி. 6.6.5

திருச்சிற்றம்பலம்


பொருளுரை:
முன்னொரு காலத்தில் ஒரே பாதமாக இருந்த திருவடி;
ஒவ்வொரு ஊழிக்காலத்தும் உயர்ந்து நிற்கும் திருவடி;
வீரக்கழலும், பல சிலம்பும் ஒலிக்கின்ற திருவடி;
புகழ்பவரின் புகழுரைகள் (எவ்வளவுக்கும்) தகைவுடைய திருவடி;
புவி வாழ்வோர் இன்புற்று ஏத்தும் வண்ணம் (புவியில்) இருக்கின்ற திருவடி;
(அருள்) இன்பம் உற்றவர்கள் இடுகின்ற பூ சேருகின்ற திருவடி;
திருவதிகைத் தென் கெடில நாடுடையவனின் திருவடி;
திருவீரட்டானத்து இருக்கும் எம் செல்வன் திருவடி!

Notes:
1. ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி
- எல்லாவற்றிற்கும் இறைவனே ஆதாரமாக விளங்குவதைக்
காட்டும் ஏக பாத மூர்த்தம். ( http://www.shaivam.org/siddhanta/maekap.html )
2. ஊழிதோறூழி உயர்ந்த அடி
- பிற எல்லாவும் ஊழியில் ஒடுங்க இறைவன் மட்டும்
அழியாது நின்றமை.
(ஒ: ஊழிதோறூழி முற்றும் உயர் பொன் நொடித்தான் மலை - சுந்தரர்)
3. பொருகழலும் பல்சிலம்பும்
- ஆண், பெண் காலணிகள் - உமையொருபாகர் வடிவைக் குறிப்பன.
4. புகழ்வார் புகழ் தகைய
- எத்தனை புகழ்ந்தாலும் புகழ்வு தான் குறைவே ஒழிய இறைவன்
திருவடியின் சிறப்புக்கு மிகையாகாது.
ஒ: உவமிக்கின் மெய்யே - திருவாசகம்
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே - சம்பந்தர்
பூமி மேல் புகழ் தக்க பொருளே - அப்பர்
5. இருநிலம் - பூமி
 
request for recommending good book on thevram

I am a new member.

I recently got CDs of thevaram ( panniru saiva thirumuraigal )released by Thirumurai Mandram - Kovilpatti. rendered by Sivasri Singai Soundararajan Othuvar. Shri M Alagurajan of the mandram was kind to send the CDs.

Sir, can you recommend good book which gives each thevaram with meaning in tamil.

Regards,
Rajan
 
தித்திக்கும் தேவாரம் என்று தேவாரப் பாடல்கள் போற்றப்படுகின்றன. ஆனால் அத்வைத பிராமணர்கள் பலருக்கு இதுபற்றி ஏதும் தெரிவதில்லை. சல்மான் ருஷ்டியைத் தெரியும். ஆனால் சம்பந்தர் பாடிய பதிகங்கள் தெரியாது. அத்வைதக் கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் தேவாரப் பாடல்கள் எல்லோருக்கும் சொந்தமானவை. அந்தணர் சமூகம் இவற்றைப் படித்துப், பாடி, போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
முகில்வண்ணன்
 
So sorry to ask so much of you Saab, and certainly feel free to say no. But can you provide English translations as well? Or a website which provides such?
 
Saab,

I heartily commend your noble service - introducing old Tamil scriptures to the
present generation. Unfortunately, we brahmins do not give so much importance to
Tamil texts, as we do to Sanskrit works. This may be due to the mistaken notion that Tamil is not or cannot be as sacred as Sanskrit. It could be due to ignorance about availability of rich Tamil literature too.

May I request you to kindly continue this regardless of others' remarks - good or bad.
 
Both Sambandar and Sundarar are TB only. How can we say that we don't have anything to do with Devaram. Arunagirinathar who composed Tiruppugazh is a TB. Valllimalaiswamigal (again a TB) only popularised Tiruppugazh. Abhirami Battar is a TB. How can you say TB is not involved in propagating Tamil treasures like Devaram.

I recite few stanzas from Devaram, Divya Prabandam and Thiruppugazh daily


தித்திக்கும் தேவாரம் என்று தேவாரப் பாடல்கள் போற்றப்படுகின்றன. ஆனால் அத்வைத பிராமணர்கள் பலருக்கு இதுபற்றி ஏதும் தெரிவதில்லை. சல்மான் ருஷ்டியைத் தெரியும். ஆனால் சம்பந்தர் பாடிய பதிகங்கள் தெரியாது. அத்வைதக் கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் தேவாரப் பாடல்கள் எல்லோருக்கும் சொந்தமானவை. அந்தணர் சமூகம் இவற்றைப் படித்துப், பாடி, போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
முகில்வண்ணன்
 
இன்றைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
உலக்குக்கு மீட்டு கொண்டு வந்தவர் உ வே சாமிநாத அய்யர்
அவர்கள் . அந்த தமிழ் தாத்தா தமிழுக்கும் சைவத்துக்கும்
செய்யாத தொண்டா ? ஒருமுறை பகவான் ரமணரிடம் சென்று
தரிசனம் செய்தார் . அப்பொழுது , " நான் தமிழ் தமிழ் என்று
அலைந்து திரிந்து விட்டேன் . நான் எங்ஙனம் கடைத்தேருவது
என அறிகிலேன் ", என்றதற்கு ரமணர் ," தமிழ்த்தொண்டும் சிவத் தொண்டே . கவலையே வேண்டாம் ",என்று கூறினார் .ரமணரது போற்றத்தக்க பக்தர்களுள் முருகனார் ஒருவர் .
அவர் தமிழில் இக்காலத்தே 30,000 பாடல்களுக்கு மேலே .
கொடுத்துள்ளார் . அவர் பிராம்மண குலத்தில் உதித்தவரே .
இன்றும் தலைசிறந்த தமிழ் கலைக் களஞ்சியம் ஏழு
நூல் தொகுப்புகளாக(TAMIL LEXICON) சென்னை பல்கலை கழகத்தில் உள்ளதே அதை தொகுத்தவர்களில் முருகனாரும் ஒருவர் . அதில் அதிகமான் பிராமணர்கள் பங்குகொண்டுள்ளனர்
ரமணர் அவரது அனைத்து உபதேசங்களையும் தூய தமிழில்
கொடுத்துள்ளார் . இன்று இந்திய பல மொழியனரும் மற்றும் பல நாட்டினரும் அந்த தமிழ் பாக்களை அவர்களது மொழியில் transliteration செய்து பாராயணம் செய்துவருகிறார்கள் .
ஆனால் தமிழ் நாட்டில் அறிந்தவர்கள் கொஞ்சமே .

அத்வைதம் என்பது ஒரு குழுவினரது அல்ல . அது ஒரு நிலைப்பாடு .அதை கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை .

 
Last edited:
Off late, I've developed a good interest in knowing 'Thevaram'.. Though its difficult to understand the poetic version, the pOzhippuRai comes helpful.

Some of the tamil movie song stanza copied from Thevaram, has become a real hit..

Interesting to note is, they travelled to each popular temples around T.N and composed them, in the temple vicinity ..

I scrolled through all the temple titles of Thevaram. Sadly, none of the temples in my ancestoral native town are covered by them!
 
For those who are interested in studying thevaram, the following site will be useful. It comes in 18 languages.
http://thevaaram.org/index.php[/url]
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

  • For rent 2BHK APT WANTED.
    2BHK APT wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Chanting class.
    Sloka chanting teacher wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Announcement Hobby Classes.
    Hobby art classes are conducted by an experienced senior lady for high school children and adult...
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Shan
    Required female Brahmin cook to prepare lunch and dinner for 2 people
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
  • For rent Shanmuganathan
    3BHK INDEPENDENT HOUSE IN NEELANKARI
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
Back
Top