துளசியின் பெருமை

Status
Not open for further replies.
துளசியின் பெருமை

துளசியின் பெருமை


slide-6-452x236.jpg


.

துளசி 10 பெருமை

1) தெய்வ மூலிகையாம் துளசியின் மகிமை அளவு கடந்தது.


2) துளசி விஷ்ணுவிற்கு உகந்தது.


3) ஈசுவரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்.


4) துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கள்பேறு, செல்வம், கல்வி, நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும்.


5) துளசி 400 விதமான நோய்களை போக்கும்.


6) சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை துளசி வழங்குகிறது என ஆயுர்வேத நூற்கள் கூறுகின்றன.


7) துளசிச் செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.


8) துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.


9) திருமணம் ஆகாத பெண்கள் தான் விரும்பிய கணவனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும்.


10) வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
துளசிச்செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட வேண்டும்.


துளசியை வழிபட வேண்டிய காலங்கள்

1.அன்றாடம் பெண்களும், ஆண்களும் வழிபடலாம்.


2.திருமணமாகாத பெண்கள் பவுர்ணமி மற்றும் துவாதசி திதிகளில் ஆராதனை செய்யலாம்.


3.ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


4.திருமணமான பெண்கள் ஸ்ரீதுளசி தேவியை வழிபட்டு வந்தால், நன்மக்கட்பேறு அடைவர்.கர்ப்பம் தரித்த பெண்களின் அச்சம் நீங்கும்.


5.துளசி கவசத்தை மும்முறை காலை நேரத்தில் கூறி வருபவர்களுக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.


6.துளசி விரத்தை ஐப்பசி மாத வளர்பிறை துவாதசியில் தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசியில் முடிக்க வேண்டும்.


7.வேத விற்பன்னர் மூலம் அஷ்டாஷரம்,புருஷ சூக்தம் முதலியவற்றால் வழிபாடு பெற்றால் இஷ்டமான பலன்உடனே கிட்டும்.


8.பெண் மூலிகையாம் துளசியின் அருகில் ஆண் மூலிகையான தொட்டால் சிணுங்கியை வைத்து வழிபட்டு வந்தால் நோய், நொடியின்றி நீண்ட நாள் வாழலாம். முதியோர்கள் நீண்ட ஆயுள் பெறுவர்.


9.வீடுகளில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று, திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் பலன் முழுவதும் பெறுவர்.


10.ஆலயங்களில் தரும் துளசியை அருந்துபவர் சத்யநாராயண பூஜை செய்த பலன் பெறுவர்.


11.மகா விஷ்ணுவிற்கும்,ஸ்ரீதுளசிக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அசுவமேத யாகம் செய்த பலன் அடையலாம்.

துளசியின் மகத்துவம்

துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் தான் விரும்பிய மணாளனை அடையவும், சுமங்கலிப் பெண்கள் மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும். வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள் என்று ஸ்ரீ பத்ம புராணம் கூறுகிறது.


துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. மேலும் நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.


துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.


ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.


அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.


பூஜையின் போது துளசியை சமர்ப்பித்தால் பக்தி அதிகரிக்கும். துளசிச்செடியின் அடியில் ஸ்ரீ கிருஷ்ணரை வைத்துப் பூஜித்தால் மோட்ச சாம்ராஜ்யம் கிட்டும். துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.


கொடும் பாவங்கள் செய்தவனாயினும், அந்திமக் காலத்தில் துளசித் தீர்த்தம் அருந்தி, துளசித் தளத்தை தலையில் தரித்துப் பின் உயிர் நீக்க நேர்ந்தால், கட்டாயம் முக்தி அடைகிறான். துளசித்தளம், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மட்டுமின்றி சிவபெருமானையும் பூஜிக்க ஏற்றது.


விநாயகரை துளசியால் பூஜிக்கலாகாது. விரதத்தில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தன்று உபவாசம் இருப்பவர்கள், ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தியே விரதத்தை முடிக்க வேண்டும்.


ஏகாதசி அன்று துளசி பறிக்கக்கூடாது. திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளிஆகியப நாட்களிலும், எண்ணை தேய்த்துக் கொண்டும் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


மேலும் இறை நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும். துளசியைப் பறித்து மூன்று நாள் வரை உபயோகிக்கலாம். துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.


மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித்தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.


சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகாஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி' என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள்.அன்றுதான்ஸ்ரீகிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.


நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக்கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள். நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து, வெற்றி பெறுவோம்!!


துளசி மாலை அணிவது ஏன்?

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள். துளசி இருக்கும் இடத்தில் லட்சுமி வசிப்பாள். விஷ்ணு அருள் கிடைக்கும்.

வீட்டின் தென் மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி, கோலமிட்டு வழிபட்டு வந்தால் நல்லது. துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

??????? ????? ????????? ~ Arrow Sankar
 
The story of Srimati Tulasi devi is very touching too, even including her previous life wedded to 'Sankachuda'.

Here is a beautiful picture of a woman worshiping Smt. Tulasi devi:

attachment.php
 

Attachments

  • Tulsi_worship.webp
    Tulsi_worship.webp
    46.3 KB · Views: 283
Status
Not open for further replies.
Back
Top