திரு. T m சௌந்தர்ராஜன் - சுவாரசியமான குறிப்ப

Status
Not open for further replies.
திரு. T m சௌந்தர்ராஜன் - சுவாரசியமான குறிப்ப

டி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!

* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!


* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.

* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!

* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!

* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!

* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!

* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா!'


* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார்.

* கவிஞர் வாலியைத் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி!

* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!

* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!

* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!

* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!


* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்!

* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!


* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை.


* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!


* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.

Courtesy : one Weekly Magazine
 
நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் திரு.டி.எம்.எஸ் அவர்கள் வைணவ ஐயங்கார் அல்ல... அவர் சௌராஷ்டிரா சமுதாயத்தை சார்ந்தவர்.

நானும் திரு.டி.எம்.எஸ்ஸின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன்...

மன்னாதி மன்னனில் வரும்," அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உடமையடா..." தொடங்கி இன்று வரை அவரது அத்தனை பாடல்களிலும் மெய் மறப்பவன்...

காலத்தால் அழியாத பாடல்களை தமிழுக்கு அளித்தவர் திரு டி.எம்.எஸ்..
 
It is unfortunate that TMS has not been honoured by the Central Government.
The Central Ministers from Tamil Nadu ought to have recommended TMS's name
for due recognition for the Republic Day awards. Nowadays if the songs in one
film become hit immediately a special felicitation function for the Music Director
and the singers is arranged with cash awards. Think of those days when TMS
sang for the leading actors, I do not think that he was handsomely paid. In line
with TMS some of his contemporaries too were conveniently forgotten by the
film industry. Thank you Mr Ashokindee for the post on TMS.

PC RAMABADRAN
 
T m s அவர்கள் சௌராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்தவரே!! ஆனால் அவர் பிறந்தது முத்தமிழும் சங்கமித்த மதுரை மாநகரில்தான்.

அவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் திரு. சின்னகோண்ட சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் பயின்றார். பின்னர் அரயக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் கற்றார். அவரின் 21 - ம் வயதிலிருந்து மேடைகளில் பாட தொடங்கியுள்ளார். அதுவும் அக்கால சங்கீத புகழ் திரு m k தியாகராஜ பாகவதர் குரலை பின்பற்றி பாடியிருக்கிறார்.


1946 ல் s m சுப்பையா நாயிடு, t m s அவர்களுக்கு 5 பாடல்கள் பாடும் வாய்ப்பை கொடுத்தார். அதுவும் (திரு m k தியாகராஜ பாகவதர் நடையில்) இடம் பெற்ற திரைப் படம் "கிருஷ்ணா விஜயம்" , துரதிர்ஷ்டவசமாக அந்த திரைப் படம் 1950 ல் தான் வெளியானது.


ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமப்பட்டு சினிமாவில் நுழைந்திருக்கிறார். 1954 ல் திரு .மருதகாசி அவர்கள் சினிமாவில் நிரந்தரமாக கால் பதிக்க சிபாரிசு செய்திருக்கிறார். திரைப் படம் "தூக்குத் தூக்கி" ..!!!

அதே வருடம் திரு. டி ஆர் ராமண்ணா மற்றும் டி ஆர் ராஜகுமாரி அவர்கள் இணைந்து ஆர் ஆர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, "கூண்டுக்கிளி" தயாரிக்கும் பணியில் இறங்கியிருந்தனர். அதே திரைப் படத்தில் திரு டி எம் எஸ் அவர்கள், கூட்டுப் பாடகராக (chorus ) இருந்துள்ளார் , தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் டி எம் எஸ் - இன் குரலைக் கேட்டுவிட்டு அதே திரைப்படத்தில் தனிப் பாடல் பாட ஏற்பாடு செய்தார். அவர் பாடிய பாடல் " கொஞ்சும் கிளியான பெண்ணை ..!!" இசை திரு . கே வி மகாதேவன், இந்த பாடல்தான் திரு. டி எம் எஸ் நடிகர் திலகத்துக்காக பாடிய முதல் பாடல்...

அதற்கு முன் அவர் சுமார் ஆறு மாத காலம் திரு. சுந்தர்லால் நட்கர்னி (இயக்குனர், சென்ட்ரல் ஸ்டுடியோஸ்) வீட்டில் வேலை பார்த்திருக்கிறார்.

வெற்றிப் பாடல் " ராதே என்னை விட்டு ஓடாதடி " க்காக அவர் வாங்கிய சம்பளம் வெறும் 625 ரூபாய்தான் .

விருதுகள் மற்றும் கெளரவங்கள்

  • பத்மஸ்ரீ விருது - இந்திய அரசாங்கத்தால் 2003 (????) ம் வருடம் வழங்கப்பட்டது.
  • "கலைமாமணி" தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு கவுரவித்தது.
  • கௌரவ டாக்டர் பட்டம்
  • பேசும் படம் விருது - 20 தடவை , அதிலும் 1954 லிருந்து 1969 வரை தொடர்ச்சியாக 15 முறை வாங்கியுள்ளார்.
  • "சிங்க குரலோன்" - இலங்கை தமிழ்ச் சங்கம் 1971 ல் வழங்கி கவுரவித்தது.
  • "பாரத் கலாஜர்" விருது மற்றும் "இசை சக்கரவர்த்தி" விருது - ஆந்திரா அரசு 1963

அன்றைக்கு நடந்த அரசியல் சூழலில் , கடைசிவரை அவருக்கு "தேசிய விருது" கொடுக்க யாரும் முன்வரவில்லை. இருந்தாலும் டி எம் எஸ் அவர்கள் "உலகத் தமிழர்" ஒவ்வொருவர் நெஞ்சிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்!!!
 
  1. அதோ அந்த பறவை ......
  2. அங்கே சிரிப்பவர்கள்.........
  3. அன்பு நடமாடும்................
  4. அன்பு மலர்களே.................
  5. அமைதிக்கு பெயர்தான் .....
  6. அமைதியான நதினிலே
  7. அன்று வந்ததும் இதே நிலா
  8. அம்மம்மா ...........................
  9. அழகிய தமிழ் மகள் இவள்
  10. ஆகாய பந்தலிலே
  11. ஆடல்ளுடன் படலை
  12. ஆட்டுவித்தால்
  13. ஆறு மனமே ஆறு
  14. ஆஹா மெல்ல நட
  15. இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
  16. இரண்டு மனம் வேண்டும்
  17. உன்னை அறிந்தால்
  18. உன்னை ஒன்று கேட்பேன்
  19. உலகம் பிறந்தது
  20. உழைக்கும் கைகளே
  21. எங்களுக்கும் காலம் வரும்
  22. எங்கே அவள்
  23. எங்கே நிம்மதி
  24. என்ன என்ன இனிக்குது
  25. என்னடி ராக்கம்மா
  26. என்னை யார் என்று
  27. ஒன்று எங்கள் ஜாதியே
  28. ஒளி மயமான எதிர் ..
  29. கட்டி தங்கம் வெட்டி எடுத்து
  30. கடவுள் ஏன் கலானான்
  31. கண்ணை நம்பாதே
  32. கன்னி நதியோரம்
  33. கல்லெல்லாம் மாணிக்க
  34. காற்றுவாங்க
  35. குங்கும பொட்டின்
  36. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
  37. சட்டி சுட்டதடா
  38. சிலர் சிரிப்பார்
  39. சோதனை மேல் சோதனை...
  40. நினைத்தேன் வந்தாய் ...
  41. பச்சைக்கிளி முத்துசரம் ....
  42. பேசுவது கிளியா ....
  43. தொட்டால் பூமலரும் ...
  44. மணப்பாறை மாடு பூட்டி ....
  45. ராஜாவின் பார்வை ....
  46. நான் மாந்தோப்பில்...!!
  47. நான் பார்த்ததிலே ....
  48. இன்பமே உந்தன் பேர் ...!!
  49. பனி இல்லாத மார்கழியா ..
  50. ஒரு ராஜா ராணியிடம்

என்னுடைய மடிக்கணினியில் இருக்கும்.... டி எம் எஸ் அவர்களின் குரல்பதிவுகள்...!!!

ஆயினும், தொட்டால் பூமலரும் - நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.!!

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
Last edited:
மிக அழகான தொகுப்பு வழங்கி இருக்கிறீர்கள் . படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது .
இதே மாதிரியான சுவையான செய்திகளை தாங்கள் வழங்க வேண்டுமென்று நான்
உங்களை வேண்டுகிறேன். முக்கியமாக மறைந்tha AM RAJA, JIKKI, CHIDAMBARAM JAYARAMAN
MKT, PU CHINNAPPA,TR MAHALINGAM,KBSUNDARAMBAL இவர்களின் வாழ்க்கை வரலாறுகளை
தாங்கள் சேகரித்து கொடுக்க தங்களை வேண்டிக்கொள்கிறேன். நன்றி ashokindeed அவர்களே

RAMABADRAN
 
நன்றிகள் திரு . ராமபத்ரன் அவர்கள்....

கண்டிப்பாக வெளியிடுகிறேன்... தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்...

சந்தர்ப்பம் வரும்பொழுது நிச்சயம் உங்கள் பார்வைக்கு,...!!

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
New Picture (5).webp

tms latest photo with his wife
 

Attachments

டி.எம்.எஸ் - என்றும் என்றென்றும் ...!!!

இன்னொரு பாடகர் அல்லது பாடகியுடன் டி.எம்.எஸ் இணைந்து பாடும் பாடலை முதலில் டி.எம்.எஸ் ஆரம்பிக்காமல் , மற்றவர் ஆரம்பிக்க
அதன் பின்பு டி.எம்.எஸ்ஸின் குரல் சற்றுத்தாமதமாக வரும்... . பாடல்களில் ....!!!

டி.எம்.எஸ். தமது அழுத்தமான முத்திரையைப் பதித்துக் கொண்டே உற்சாகமாக தாம் வந்துவிட்டோம் என்பதை குரல் குறிப்பால் உணர்த்தும் இடம் அருமை

அந்த வகையில் இன்னொரு பாடகருடன் டி.எம்.எஸ். பாடிய பாடல்களில் அவரது வருகையை ஆர்வத்துடிப்போடு எதிர்பார்க்க வைக்கும் பாடல்களை பார்க்கலாம்

'தரிசனம்' படத்தில் ' இது மாலை நேரத்து மயக்கம்...' என்ற பாடலை முதலில் எல்.ஆர். ஈஸ்வரி தான் ஆரம்பித்து வைப்பார்.இளமை துள்ளும் குரலில் அவருக்கே இயல்பான நளினத்துடன் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பாடலின் பல்லவியை முழுதாகப் பாடி முடித்ததும் -

டி.எம்.எஸ் ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டே பாடலில் தமது பங்கை ஆரம்பிப்பார்.

அவர் பாடத் துவங்குவதற்கு முன்பாக அந்தச் சிரிப்பே ரசிக நெஞ்சங்களை சிலிர்க்க வைக்கும்.

ஆதாவது ' இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை. எல்லாமே மாயை ' என்று சொல்லிக் கொண்டே ஒரு பட்டினத்தார் சிரித்தால் அல்லது ஒரு புத்தர் சிரித்தால் எப்படி இருக்குமோ!.... அந்த அர்த்தத்தை தமது சலிப்பும் , கிண்டலும் கலந்த அந்த சிரிப்பொலியால் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து நமது செவிகளின் முன் கொண்டவந்து நிறுத்துவார் டி.எம்.எஸ்.


(இதே போல ஒரு அர்த்தமும் , ஆழமும் பொதிந்த சிரிப்பொலியை வி.தட்சிணாமூர்த்தியின் இசையில் உருவான ' தேவி ' படத்தில் இடம்பெற ' அன்னையின் மடியில் துவங்கிய வாழ்க்கை.. மண்ணின் மடியில் முடிகிறது... ' என்ற பாடலின் பல்லவியில் முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் வெகு யதார்த்தமாக ஆனால் சிந்¾னையைத் தூண்டுகின்ற விதத்தில் அற்புதமாக வெளிப்படுத்துவார் டி.எம்.எஸ்.)

மெல்லிசை மன்னரின் இன்னிசையில் ' குமரிக் கோட்டம்' படத்தில் ஒரு பாடல்.
' நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவதை சொன்னாள் ' என்ற பாடலை கிட்டத்தட்ட பாதிப்பாடல் வரை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிவிடுவார்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் இளமை ஊஞ்சலாடும் குரலை ரசித்துக் கொண்டே 'எப்போ வருவாரோ' என்று டி.எம்.எஸ்.…இன் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருப்போம்.

எல்.ஆர்.ஈஸ்வரி பலல்வியையும் , சரணத்தையும் பாடி முடித்ததும் அசத்தலான ஒரு பின்னணி ஒலிக்கும் .

அந்த இசையைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டே ' நான் தொடர்ந்து போக... என்னை மான் தொடர்ந்ததென்ன..?' என்று துள்ளிக் குதித்துக் கொண்டே டி.எம்.எஸ் enter ஆகும் இடம் அருமை ! அருமை! அபாரம்!!

நன்றி : கூகுள் வலைப்பூ !!!
 
டி.எம்.எஸ் - என்றும் என்றென்றும் ...!!!


''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலைப் பாட வந்த போது,

படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,

இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.

அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.

இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!

காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.

ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.

இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?'...

'சுந்தரம்!...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.

பல்லவியில்...ஒரு விதமான பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி.மற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

ஒரே வரியையே இரண்டு இடத்தில், இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.

உதாரணமாக ' நீயும் நானுமா?' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.

இப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி. !!

அய்யா !! உந்தன் குரலுக்கு நாங்கள் மட்டுமல்ல, நடிகர் திலகமே அடிமை என்பது இதிலிருந்து விளங்கும் ...!!

:lalala:


நன்றிகளுடன்
அசோக் குமார்
 
டி.எம்.எஸ் - என்றும்......!!!! என்றென்றும் ...!!!

'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்கள், பாகவதரின் தீவிரமான ரசிகர்.
பாகவதரின் பாடல்களைக் கேட்டதால் தான் சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆர்வமும் தாகமும் அவருக்கு அதிகமானதாம்.'

அதனால் தானோ என்னவோ டி.எம்.எஸ்ஸின் துவக்க கால பாடல்களில், டி.எம்.எஸ்ஸின் குரலில் பாகவதரின் சாயலும் ,முத்திரைகளும் அதிகமாக இருக்கும்.

பாகவதரைப் போல பாடவேண்டும் என்பதற்காக டி.எம்.எஸ். அவரது பாடல்களை திரும்பத் திரும்ப உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

'கடம்' மாதிரி வாய் சின்னதாக இருக்கும் மண் பானையை வாங்கி , அதற்குள் தமது வாயை வைத்துக் கொண்டு பலவித குரல்களை எழுப்பி... அதில் பாகவதர் வாய்ஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டுபிடித்து, அந்தக்குரலை நாளும் பொழுதுமாக மண்பானைப் பயிற்சி மூலமாக உருவாக்கிக் கொண்டாராம். பாகவதர் ஸ்டைலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

டி.எம்.எஸ். பின்னணிப் பாடகரக அறிமுகமாகி... இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே பாகவதர் பாதிப்புடன் பாடினார்.

அதற்குப் பிறகு தம்க்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, தமது கடின உழைப்பாலும் , கதாபாத்திரங்களுக்கும் , நட்சத்திரங்களுக்கும் ஏற்ப தமது குரலிலே வண்ணங்களையும், வித்தியாசங்களையும் காட்டக் கூடிய அளவுக்கு 'தனித்துவம்' பெற்ற பாடகராக முத்திரை பதித்தார்.


பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:

1.கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் (பட்டினத்தார்)

2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்)

3. நாடகமெல்லாம் கண்டேன் ( மதுரை வீரன்)

4. வசந்த முல்லை போலே வந்து (சாரங்கதாரா)

5. ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)

6. ஆடவேண்டும் மயிலே ( ' அருணகிரி நாதர்' )

7. வில்லேந்தும் வீரரெல்லாம் ( குலேபகாவலி)

8. ஏரிக்கரையின் மேலே (முதலாளி)

9. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

10. முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்)

11. வா கலாப மயிலே ( காத்தவராயன்)

12. பெண்களை நம்பாதே (தூக்குதூக்கி)

13. நான் பெற்ற செல்வம் (நான் பெற்ற செல்வம்)

14. தில்லையம்பல நடராஜா (சௌபாக்யவதி)

15. வாழ்ந்தாலும் ஏசும் ( நான் பெற்ற செல்வம்)
 
தமது படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில் அதிக அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளுவார் எம்.ஜி.ஆர்.

தாம் எதிர்பார்க்கும் விதத்தில் மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார் எம்.ஜி.ஆர்.

இதைப் பற்றி ' மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

தாம் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமன்றி...பாடல் வரிகளும் கூட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுவார்.

எந்தப் பெரிய கவிஞராக இருந்தாலும்...எம்.ஜி.ஆர், போதும் என்று சொல்லும் வரை ...அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடல் வரிகளை அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து பாடல் எழுதுவது வரை...இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும் , சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

ஆனாலும் அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான் மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை இன்றைய 20 வயது இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகை அல்ல.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'நினைத்ததை முடிப்பவன்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் அவர்களை வேவு பார்க்க வந்து மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில் பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

மெல்லிசை மன்னர் எம்.ஜி.ஆருக்கே உரித்தான உற்சாகம் பொங்கி வரும் விதத்தில் அருமையான ஒரு மெட்டமைத்து எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை அந்த மெட்டுக்குப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

காட்சிச் சூழலை நன்கு கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தக் கவிஞர்...பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.

பாடல் வரிகள் நன்றாக இருந்தும் எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால் மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும் ,சரணங்களையும் எழுதச் சொன்னார்.

அந்தக் கவிஞரும் சளைக்காமல் எழுதிக் கொடுத்தார்.

ஆனாலும் எம்.ஜி.ஆர் முகத்தில் திருப்தி இல்லை.

வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து இதே மெட்டுக்கு எழுத வைத்தார்கள்.

அந்தப் பாடலிலும் மக்கள் திலகத்துக்குத் திருப்தி இல்லை.

இதே போல அந்த நாளில் பிரபலமாக இருந்த 5, 6 கவிஞர்கள் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர்.எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.

கடைசியில் ஒரு மூத்த கவிஞரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.

பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது.

'இது தான் இதே தான் நான் எதிர் பார்த்தது ! என்றார் எம்.ஜி.ஆர்.

உடனே பாடல் ஒலிப் பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர் உற்சாகம் பொங்க.

அந்தப் பாடல் தான்....

' கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும்பொய்யே சொல்லாதது ...'என்ற பாடல்.

எம்.ஜிஆரின் எதிர்பார்ப்பைப் பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் யார் என்று கேட்கின்றீர்களா?

கவிஞர் மருதகாசி.

பாடலைப் பாடியவர் நம் ஏழிசை வேந்தன் டி எம் எஸ் !!!!
 
நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல்
வேறொரு பாடகரைப் பாட வைத்தார் மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.

ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும்
ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.

மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?என்று எல்லோருக்குமே குழப்பம்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.

உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மிகவும் சவாலான ஒரு வேலை தான்..!!!

ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை கை கொடுத்துப் பாராட்டினார்.

இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட. வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில் கருவிகளை நம்பாமல் திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பிஇந்த சாதனையைப் படைத்த இருவரும் தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற பாடல் தான் அது.

Coutersy : யாழ்சுதாகர்

 
நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.

டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்...அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி....இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை....எனவே...மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ். 'நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்...என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

ஆனால்...உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்...குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்...

எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.

அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.

ஆனால்...எம்.எஸ்.வி...தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.

'நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்...மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது...'என்று சொல்லிய எம்.எஸ் வி...டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

பாடலைக் கேட்ட நடிகர் திலகம்...'உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்...'என்றார்.

அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.

'மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக...இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.

டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்...அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்...என்றாராம் சிவாஜி.

சொன்னது போலவே...அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து...அந்த மெட்டையும்...டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்...மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?
'சாந்தி ' திரைப் படத்தில் இடம் பெற்ற ' யார் அந்த நிலவு?...ஏன் இந்தக் கனவு?....!!!

அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்.....'செய்வன திருந்தச் செய்' என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்...இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
...!!!



Coutersy : யாழ்சுதாகர்
 
Status
Not open for further replies.
Back
Top