• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பு&#

Status
Not open for further replies.

JR

Hare Krishna
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பு&#

10929931_460239244140455_6083841578443984946_n.jpg


புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)
“தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்...பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”
— ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)
ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.
கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும். நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்’மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.



Source: Facebook | Use ful tips
 
Sir/Madam,
Good . Could you please clarify the following ?
puliyodaraiyil milagai serkka vendama?
Should we not prepare mix (powder) for puliyodarai.
 
Dear Sir,

It appears from the above recipe, that 'milagu' is used instead of 'milagai'. See that in the ingredients list, 200g milagu is given which is powdered the next day after preparing pulikaichal and added to the puliyodharai. For exact info (on how it would taste with milagu alone), I would have to prepare the above recipe...:).
 
In Trivandrum, inside the Fort Area, in the South Street, there is a Srinivasa Perumal Koil. Every year the purattasi Utsavam is celebrated there well. I used to go to this temple regularly during the years I lived in Trivandrum. They prepare Puliyodarai with Milakaaai Vatral instead of Milagu. (chillies instead of pepper) For the sample measures mentioned above by JRji, you would need 20 pieces of chillies. You will have to add the chillies to the pulikkaichal as you cook it and allow the chillies to mix well with the pulikkaichall. You will have cut each of the chillies into two or three pieces depending on their length. And adequate salt will have to be added.

The puliyodarai I used to get from the temple in Trivandrum as prasad was just Amrita.
 
In Trivandrum, inside the Fort Area, in the South Street, there is a Srinivasa Perumal Koil. Every year the purattasi Utsavam is celebrated there well. I used to go to this temple regularly during the years I lived in Trivandrum. They prepare Puliyodarai with Milakaaai Vatral instead of Milagu. (chillies instead of pepper) For the sample measures mentioned above by JRji, you would need 20 pieces of chillies. You will have to add the chillies to the pulikkaichal as you cook it and allow the chillies to mix well with the pulikkaichall. You will have cut each of the chillies into two or three pieces depending on their length. And adequate salt will have to be added.

The puliyodarai I used to get from the temple in Trivandrum as prasad was just Amrita.

Yes Vaagmi ji, we traditionally prepare puliyodharai only with red chillies... I am too surprised this temple puliyodharai recipe uses milagu as a substitute for milagai... I am tempted to try it in small scale soon! Thanks for letting me know about the other recipe...!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top