• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம் - கார்த்திகையில் கார்த்திகை நாள்

பிறப்பில் நீலன் என்ற பெயருடையவராக இருந்த ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், சோழ சாம்ராஜ்யத்தின் குறுநில மன்னராக திருமங்கை என்னும் பகுதிக்கு இருந்தார்.
பன்னிரு ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்த ஆழ்வாரான ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஆழ்வார்களிலேயே அதிகமான திருத்தலங்களை அருளிச்செய்து திவ்யதேஸங்களாக்கிய ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் அருமையாகவே இருக்கிறது. ஆழ்வார்களின் தலைவராகிய ஸ்ரீ.நம்மாழ்வாருக்கு அடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களை அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திருமொழிகளுக்கு , தொடர்புடையதாக ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த ஆறு திருமொழிகளான பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் பாசுரங்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழியில் பதினோரு பத்தில், மொத்தம் 1084 பாசுரங்களை அருளிச்செய்துள்ளார்.

முதல் பத்தின் முதல் திருமொழியில் " வாடினேன் வாடி வருந்தினேன் " என தொடங்கும் பாசுரத்துடன் பத்து பாசுரங்களில் ஸ்ரீமன்.நாராயணனை எப்படி எல்லாம் வழிபட வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார். ஆழ்வார் ஸ்ரீமன்.நாராயணனைத் தொடக்கமாகக் கொண்டு பாசுரங்களை அருளிச் செய்ததற்குக் காரணம், அவர் அவதரித்த திருக்குறையலூருக்கு சிறிது தூரத்தில் உள்ள திருவெள்ளக்குளம் திவ்யஸதலத்தை சேர்ந்த குமுதவல்லி நாச்சியாரை சந்தித்தபோது அவர் மீது பற்றுக் கொண்டு அவரை மணக்க விரும்பினார். குமுதவல்லி நாச்சியார் பிராமணப் பெண்ணாக இருந்த நிலையில் இவர் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்ததால், நாச்சியார் இவரை மணக்க வேண்டுமானால், இவர் ஸ்ரீவைஷ்ணவனாக இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்ல, ஆழ்வார் இதனை அறிந்து கொண்டு ,திருநறையூர் நம்பி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு நம்பியிடம் தன்னை வைஷ்ணவனாக மாற்ற வேண்டிய நிலையில், அவருக்கு பஞ்ச ஸம்ஸ்கார தீட்சையை அருளினார். பின்னர் வைணவனாக மாறியதால், குமுதவல்லி நாச்சியார் ஆழ்வாரை மணந்து கொண்டார்.
குமுதவல்லி நாச்சியார் தன்னை மணந்து கொள்வதற்கு முன்பு ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரிடம் , தன்னை திருமணம் செய்து கொண்டால், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு ததியாராதனை ஒரு வருடத்திற்காவது அளிக்க வேண்ட, ஆழ்வாரும் ஒப்புக்கொண்டு, திருமணம் செய்து கொண்டார்.

சிறிய குறுநில மன்னராக இருந்த காரணத்தால் தினமும் அவ்வளவு பெருக்கு ததியாராதனை அளிப்பதற்கு தேவையான அளவுக்கு பணமில்லாத காரணத்தாலும், அவரிடம் இருந்த பணம் முழுவதுமே போதவில்லையாதலாலும், சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் இருக்க, அந்த சோழ மன்னன் அவர் மீது கோபம் கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க, அதனால் பல வழிப்பறிகளில் ஈடுபட்டார்.
ஸ்ரீமன்.நாராயணன் அவரின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் அவரை மாற்ற எண்ணி, அவர் வழிப்பறி செய்து கொண்டிருந்த திருமணங்கொல்லை என்ற பகுதிக்கு நிறைய நகைகளையும் , செல்வங்களையும் எடுத்துக் கொண்டு வர , அங்கு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்த ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், அவரிடம் வழிப்பறி செய்து அவர் கொண்டு வந்திருந்த அத்தனை செல்வங்களையும் அள்ளிக்கொண்டு, ஸ்ரீமன்.நாராயணனின் திருப்பாதத்தில் இருந்த நகையை கழற்ற முயல , அது முடியாத நிலையில் தன்னால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இப்படி தடுக்கும் நிலையில் உள்ளவர் யார் என்று வினவ, ஸ்ரீமன்.நாராயணன் அஷ்டாக்ஷர மந்திரமான ௐம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை அவர் காதில் ஓத , பின்னர் ஆழ்வார் எம்பெருமானை நிமிர்ந்து பார்க்க , எம்பெருமானாக தன் மனைவியான ஸ்ரீ.லஷ்மியையுடன் ஸேவை ஸாதிக்க எம்பெருமானை புரிந்து கொண்டு முதன் முதலாக பெரிய திருமொழியின் முதல் திருமொழியின் முதல் பத்து பாசுரங்களில் தம் வாழ்க்கையில் அதுவரை அனுபவித்த விஷயங்களை சொல்லி , எப்படி எம்பெருமானின் அருள்கடாக்ஷத்தைப் பெற்றதற்காக பூவுலகில் வாழும் அத்தனை மனிதர்களும் "நாராயணா என்னும் நாமம் " ஜெபிப்பதற்காக அருளிச் செய்துள்ளார்.

அடுத்து இரண்டாவது திருமொழியை வடநாட்டின் திருப்பிரிதியில் தொடங்கி பின்னர் வடநாட்டு திவ்யதேஸங்களாக திருவதரி, திருசாளக்கிராமம், நைமிச்சாரண்யம் என்று ஒவ்வொரு திவ்யஸ்தலங்களுக்கும் சென்று அங்கு எழுந்தருளியுள்ள பெருமாளைப் பற்றி பாசுரங்கள் அருளி அவற்றை திவ்ய தேஸங்களாக்கினார்.

அதன் பின்னர் தென்னாட்டில் நவ நரசிம்மர் ஸ்தலமாகிய சிங்கவேள் குன்றம்,ஸ்ரீ.வேங்கடவாணனின் ஸ்தலமான திருமலை தொடங்கி பின்னர் அதைத் தொடர்ந்து வழி வழியாக வந்து பல திவ்ய ஸ்தலங்களை அருளிச் செய்து திவ்ய தேஸங்களாக்கினார்.

ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணபுரம், திருநறையூர் திவ்ய தேஸங்களைப் பற்றி நூறு பாசுரங்களுக்கு மேலும், ஸ்ரீ.ரங்கநாதனைப் பற்றி ஐந்து திருமொழிகளையும், ஸ்ரீ.திருவேங்கடமுடையானைப் பற்றி நான்கு திருமொழிகளையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்துள்ள திருவெழுக்கூற்றிருக்கையில் அவரின் அருளிச் செயல் திருக்குடந்தை ஸ்ரீ.சார்ங்கபாணி திருக்கோயிலின் திருத்தேரின் விளக்கத்தை உச்சமாகக் கொண்டும், ஒன்று , இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய எண்களைக் கொண்டும் பாசுரம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

சிறிய திருமடல் , பெரிய திருமடல் பாசுரங்கள் அத்தனை அளவுக்கு வார்த்தைகளையும், வரிகளையும் கொண்டு , அருமையாக அமைந்துள்ளது.
பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ.ரங்கநாதனின் திருக்கோயிலை பல ப்ராகாரங்களைக் கட்டி அற்புதமாக அமைத்தவரும் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரே.

ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரைப் பற்றி இன்னும் ஆயிரக்கணக்கில் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

ஆக ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரின் திருநக்ஷத்திர தினமான நாளான , நாளை (10.11.19) பத்தர்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகிறேன்.

முக்கிய குறிப்பு :- 2014 ஆம் ஆண்டு திருநகரியில் சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தன்றும், ஸ்ரீரங்கத்தில் 2017 ஆம் ஆண்டு ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரத்தன்றும், திருவல்லிக்கேணியில் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீ.திருமங்கை ஆழ்வாரின் திருநக்ஷத்திரத்தன்றும், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி ப்ரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் அன்று வேடுபறிக்காக சிறிய குதிரை வாஹனத்தில் எழுந்தருளியபோது அடியேன் எடுத்த புகைப்படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.
 

Latest ads

Back
Top