திருமங்கையாழ்வார் திருதக்ஷத்திரம்

திருமங்கையாழ்வார் திருதக்ஷத்திரம்

கலந்திருக் கார்த்திகைக்கார்த் திகைவந்தோன் வாழியே!


காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே!


நலந்திக ழாயிரத்தெண் பத்துநாலுரைத் தோன்வாழியே!


நாலைந்து மாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே!


இலங்கெழுகூற் றிருக்கையிரு மடலீந்தான் வாழியே!


இம்மூன்றி லிருநூற்று மூவொன்பான் வாழியே!


வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே!


வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே!


அறிவு தரும் பெரிய திருமொழி தப்பாமல்
ஆயிரத்து எண்பத்து நாலு பாட்டும்
குறிய தொரு தாண்டகம் நாலு ஐந்தும் ஆறு ஐந்தும்
குலா நெடும் தாண்டகம் எழு கூற்று இருக்கை ஒன்றும்
சிறிய மடல் பாட்டு முப்பத்து எட்டு இரண்டும்
சீர் பெரிய மடல் தனில் பாட்டு எழுபத்து எட்டும்
இறையவனே கார்த்திகையில் கார்த்திகை நால்
எழில் குரையல் வரு கலியா விரங்கு நீயே!
(ஸ்வாமி தேசிகன் - பிரபந்த சாரம்)
 
Back
Top