திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி


மாணி்க்க வாசகா் அருளிய 8 ஆம் திருமுறை


திருவாசகம்


பாடல்எண் ~ 05


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்


போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்


கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்


கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்


சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா


சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து


ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்


எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

பொழிப்புரை:


குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், யாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
 
திருவாசகம்


#பாடல்எண் ~ 06

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்


பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்


மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்


வணங்குகின் றார்அணங் கின்மண வாளா


செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்


திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே


இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்


எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

#பொழிப்புரை:


#உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; #பள்ளியினின்றும்
 
திருப்பள்ளியெழுச்சி


மாணி்க்க வாசகா் அருளிய 8 ஆம் திருமுறை

திருவாசகம்


பாடல்எண் ~ 08
முந்திய முதல்நடு இறுதியு மானாய்


மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்


பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்


பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே


செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்


திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி


அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்


ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே



பொழிப்புரை:


அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர். பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண் டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
 
திருப்பள்ளியெழுச்சி


மாணி்க்க வாசகா் அருளிய 8 ஆம் திருமுறை


திருவாசகம்


பாடல்எண் ~ 09

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !



விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !



நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.
 
Back
Top