திருப்பதி புளியோதரையின் மகிமை
நான் ஒரு முறை என் குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏழுமலையானை நல்ல படியாக தரிசனம் செய்து விட்டு அருகே இருந்த பூங்கா ஒன்றுக்குச் சென்று அமர்ந்தோம். எல்லோருக்கும் மிகுந்த பசியாக இருந்ததால் என் மனைவி கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை மெதுவாகப் பிரித்தாள். 'கம கம' என்ற வாசனையுடன் புளியோதரையும் வடாமும் மேலும் பசியைத் தூண்டின.
ஒரு வழியாகச் சாப்பிட்டு விட்டுப் பசியாறிய போது, நெற்றி நிறைந்த திருமண்ணோடு அங்கே வந்த ஒரு முதியவர் 'எனக்குக் கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா?' என்று வினவினார். அவரைப் பார்த்தால் மிகவும் இரக்கமாக இருந்தது. புளியோதரை நிறைய மீந்திருந்ததால் அவரிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தோம்.
அவசரம் அவசரமாகப் புளியோதரையை எடுத்து உண்டவர், 'ஹா' என்ற ஏப்பத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க, என் மனைவி ஒரு குவளையில் தண்ணீரை ஊற்றி அவரிடம் கொடுத்தாள். நன்றியுடன் வாங்கிப் பருகி விட்டு முதியவர் விடை பெற்றுக் கொண்டார். எங்களுக்கு ஏனோ இனம் புரியாத ஒரு திருப்தி.
இரவு மலை மேலேயே ஒரு cottage -ல் தங்கி விட்டு, மறு நாள் காலை எழுந்து குளித்த பின்னர், மீண்டும் ஒரு முறை திருப்பதியானை தரிசிக்கச் சென்றோம். முன் கூட்டியே புக் செய்திருந்ததால் இரண்டாம் முறையும் இறைவன் எங்களுக்கு நல்ல தரிசினம் தந்தான்.
கோவிலை விட்டு வெளியே வந்து cottage திரும்பினோம். முதல் நாள் கொணர்ந்திருந்த புளியோதரை தான் இன்றைக்கும். நாங்கள் சாப்பிட்டு முடித்துக் கை கழுவி விட்டு உட்கார்ந்தால், வெளியே இருந்து யாரோ 'அம்மா' என்று அழைக்கும் சப்தம் கேட்டது.
நேற்றுப் பார்த்த அதே பெரியவர். அங்கே நின்று கொண்டிருந்தார். "என்ன பெரியவரே?" என்று கேட்டால் "அம்மா, நேற்று நீங்கள் கொடுத்த புளியோதரையின் சுவை சொல்லி அறியாது. இங்கே மலையிலே பிரசாதம் என்ற பெயரில், வெடிக்காத கடுகோடு படைக்கிறார்கள். நான் நேற்று போய் தளிகை செய்யும் மாமாவிடம் அவர் எனக்கு உறவானதால், நீங்கள் கொடுத்த புளியோதரையின் சுவையைப் பற்றிச் சொன்னேன். அவரும் இன்று கடுகு தாளிக்கும் போது கவனமாக இருப்பதாகச் சொன்னார். ஆனால் இன்று என்ன ஆயிற்று தெரியுமா?" என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டுக் 'கட கட' என்று சிரிக்கத் தொடங்கி விட்டார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
அவரே தொடர்ந்தார். " இன்று கடுகை முழுக்கத் தீயடித்து விட்டார்கள்!" என்று சொல்லி மீண்டும் சிரித்தார். "அதனால் ..." என்று அவர் இழுத்த போது, நான் குறுக்கிட்டேன்.
"ஆனாலும் இந்தக் கிழத்துக்கு, இவ்வளவு நாக்கு ஆகாது. போகட்டும், இன்றும் அவருக்குப் பசி போலும். வேறு எவரும் கிடைக்காதால், நாம் இங்கே இருப்பதை எப்படியோ அறிந்து கொண்டு, இங்கே வந்து விட்டார். நேற்றுப் போலவே இன்றும் மிச்சம் இருக்கும் புளியோதரையை, அவரிடம் கொடுத்து விடு" என்று நான் சொன்னேன்.
என் மனைவியும் நான் சொன்ன படியே செய்தாள். பிறகு மெதுவாக எங்கள் துணிமணிகள் எல்லாவற்றையும் எடுத்துப் பெட்டியில் வைத்துக் கொண்டு மலையை விட்டுக் கிளம்பினோம்.
மறு நாள் செய்தித் தாளைப் பிரித்துப் படித்தால் பெரிய அதிர்ச்சி. பெருமாளின் முன்னே படைக்கப்பட்டிருந்த புளியோதரை பிரசாதத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே ஏதோ மாறுதல் தெரிவதகாவும், கடுகு தாளிப்பதில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் செய்தி வெளி வந்திருந்தது.
அப்போது தான் தெரிந்தது, எங்களிடம் தேடி நேரடியாக வந்து புளியோதரை கேட்டு வாங்கிச் சாப்பிட்டுச் சென்றது வேறு யாரும் அன்று; சாக்ஷாத் அந்தப் பெருமாளே என்று!
நானும் என் குடும்பத்தினரும் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்? அந்தப் பெருமாளே எங்களைத் தேடி வந்ததோடு மட்டுமின்றி, என் மனைவி சமைத்த பிரசாதத்தையும் ரசித்துச் சாப்பிடுவதற்கு?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு: இது ஒரு கற்பனை தான். திருப்பதி மலையில் பிரசாதமாகக் கொடுக்கும் புளியோதரையில் ஒன்று கடுகு பச்சையாகவே இருக்கும்;
இல்லை என்றால், முழுவதும் தீயடிக்கப் பட்டிருக்கும். அது தான் ஆந்திரா சமையலின் விசேஷமாகும்.

Last edited: