திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்ஸ்வம்

drsundaram

Active member
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு தற்போது பிரம்மோற்ஸ்வம் பத்து நாட்களாக நடந்து வருகிறது...

இந்த கைங்கர்யத்தில் தாயாரை எழப்பண்ண அதாவது பல்லக்கு தூக்க கடந்த 27 வருடங்களாக ஶ்ரீபாதந்தாங்கிகள், வேத்தாள் என கைங்கர்யபரார்கள் ஶ்ரீரங்கத்திலிருந்து 40 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்...

(பெருமாள் மற்றும் தாயார் இருவரையும் அமர செய்து தோளுக்கினியாள் எனப்படும் பல்லாக்கை சுமப்பவர்கள் “ஸ்ரீபாதம்தாங்கிகள்” ..அதே வாகனங்கள், பல்லாக்கு, கனமுள்ளதை சுமக்க அதிக அளவில் தேவைபடுவார்கள் அவர்கள் “வேத்தாள்கள்”...)

இதை கடந்த 27 வருடமாக நிர்வாகித்து வந்தவர் திரு அப்பட்டை ஐயங்கார்( அவரூம் ஸ்ரீரங்கம் ஸ்ரீபாதம் தாங்கி) பார்த்தசாரதி ஐயங்கார்.. அவர் கடந்த ஆறு மாதம் முன்புதான் மறைந்தார்...

நாம நினைப்பது போல பல்லக்கு தானே என்ன கனம் இருக்க போகிறோது என எளிதாக நினைக்க வேண்டாம்...

ஸ்ரீரங்கம் வாகனங்களில் உள்ள வாரை(கம்பு) யை விட பெரிய மர வாரை திருச்சனுரில் உள்ளது..நெஞ்சை அழுத்தும் தோளை கிழிக்கும் சுமை... கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் தோள்பட்டை இறங்கி விடும்...(கீழே உள்ள படங்களை பாருங்கள்...வாரை அழுத்தி அதாவது மரம் அழுத்தி பட்ட காயங்கள்...)

ஸ்ரீரங்கத்தை போல் இல்லை இங்கே சுவாமி புறப்பாடு என்பது ..

பல்லாக்கின் மேலே தாயாருடன் குறைந்தபட்சம் ஆறு பட்டர்கள், பெரிய வாகனங்கள், இரண்டு குடை என புறப்பாடு நடக்கும்...அத்தனை கனத்தையும் சுமக்க வேண்டும்...

ஓரு நாளில் காலை மாலை, இரவு என மூன்று புறப்பாடுகள்...இது இரவு 1 மணிவரை நீடிக்கும்.... மறுபடி மறு நாள் அதிகாலை புறப்பாடாகும்...

கொட்டும் மழையானாலும் நனைந்து கொண்டே புறப்பாடு நடக்கும்...

கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஐம்பாதாயிரம் ஆரத்தி செய்த பக்தர்கள்.... அத்தனை ஆரத்தியுலும் ஒரு நொடி நிறுத்தியே செல்ல வேண்டும்..

இந்த கைங்கர்யபரார்கள் தங்கள் செய்து வரும் அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு பத்து நாட்கள் தாயார் கைங்கர்யத்துக்காக அங்கேயே தங்கி பிரம்மோற்ஸ்வம் நிறைவான பிறகே ஶ்ரீரங்கம் திரும்புகின்றனர்..சென்றுள்ள அத்தனை பேரும் ஏதாவது ஒரு அலுவலகத்தில் பொறுப்பான உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் அல்லது தனியாக சொந்த தொழில் நடத்தி வருபவர்கள்.விடுப்பு எடுத்து இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் இதில் ஈடுபட முதல் காரணம் ஆத்ம திருப்தி..அடுத்து நம்ம தாயார் ...வாரை அழுத்திய காயம் தானே ..வேலை தானே, போய்ட்டு போகுது என்ற இதை எல்லாம் மறக்க செய்யும் தாயார் கைங்கர்யம்...

காலம் காலமாக செய்து வரும் இவர்களின் இந்த கைங்கர்யம் பாராட்டுக்குரியது...

ttd1.jpg
ttd2.jpg
ttd3.jpg
ttd4.jpg
 
Back
Top