திருச்சந்த விருத்தத்தின் 33ம் பாசுரம்

திருச்சந்த விருத்தத்தின் 33ம் பாசுரம்

மின்னிறத்து எயிற்றரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவர்க்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தோர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகனல்லையே,33
பாசுர விளக்கம்
இப்பாசுரத்தின் கண் ஸ்வாமி ஸ்ரீ திருமழிசையாழ்வார்


ஒளி மிக்க மின்னலைப் போன்று பளபளக்கும் பற்களை உடையவனான ராவணன் வீழும்படியாக கொடுமையான செயல்களைப் புரியும் அம்புகளை அவன் மீது எய்து, அவனுடைய தம்பியான ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அருள்புரிந்து அரசினையளித்த பெருமையை உடையவனே, நல்ல அழகிய நிறத்தினளாய்,ஒப்புமை இல்லாதவளாய்,இனிமையான சொல்லினை உடையவளாய், உன் திறத்தில் மிகுந்த காதலுடையவளான நப்பின்னையின் நாயகனே, எப்போதும் சகல கல்யாண குணங்கள் நிரம்பப் பெற்றவனாய், பசும்பொன்னினைப் போன்று அவயவங்களின் ஸமுதாய சோபையைப் பெற்ற புண்டரீகாக்ஷன் அல்லவோ நீ என்று அருளிச் செய்கிறார்,33


ஆழ்வார் ஆண்டாள் எம்பெருமானார் தேசிகன் ஸ்ரீமதழகியசிங்கர் திருவடிகளே சரணம்.
 
Back
Top