திருக்கடித்தானம் அற்புத நாராயணர்

திருக்கடித்தானம் அற்புத நாராயணர்

1578968019744.png


பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் பிரதிஷ்டை செய்த பெருமாள் கேரளாவில் உள்ள திருக்கடித்தானத்தில் இருக்கிறார். இவரை வழிபட அற்புதம் நிகழும்.

கோயில் கட்ட விரும்பிய சகாதேவனுக்கு பெருமாள் சிலை கிடைக்கவில்லை. மனம் வருந்திய அவர் தீக்குளிக்க தயாரான போது, தானாக பெருமாள் சிலை ஒன்று தோன்றியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததால் சுவாமிக்கு 'அற்புத நாராயணன்' எனப் பெயர் ஏற்பட்டது. அறுபது ஆண்டுக்கு ஒரு முறை சுவாமியின் சக்தி அதிகரிக்கிறது. கற்பகவல்லி நாச்சியார் என்னும் பெயரில் மகாலட்சுமித்தாயார் இங்குள்ளார்.

வட்ட வடிவமான கருவறையில் சுவாமி கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரண்டு சன்னதிகள் இருப்பதால் இரட்டைக் கொடிமரங்கள் உள்ளன.

கருவறைக்கு தெற்கிலுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னதிக்கு கதவுகள் கிடையாது. மரத்தாலான சட்டத்தின் வழியே இவர்களை தரிசிக்கலாம்.

மேலும் படிக்கவும்

நன்றி: தினமலர்
 
Last edited:
Back
Top