தினசரி பாராயணம்.

kgopalan

Active member
நித்ய பாராயணம்.
காலையில் தூங்கி எழுந்தவுடன் இரண்டு உள்ளங்கைகளையும் பார்த்து சொல்ல வேண்டியது. கராக்ரே வசதே லக்ஷ்மி, கர மூலே ஸரஸ்வதி, கர மத்யே து கோவிந்த ப்ரபாதே கர தரிசனம்.

குளிக்கும் போது சொல்ல வேண்டியது. ஸமுத்ர வஸனே தேவி பர்வத ஸ்தன மண்டலே. விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே.

புண்ய ஸ்லோகோ நளோ ராஜா புண்ய ஸ்லோகோ யுதிஷ்டர: புண்ய ஸ்லோகோ ச வைதேஹி புண்ய ஸ்லோகோ ச ஜனார்தன: அஹல்யா த்ரெளபதி ஸீதா தாரா மண்டோதரி ததா. பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹா பாதக நாசனம்.


கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஸதைரபி. முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.

வக்ர துண்ட மஹா காய கோடி ஸூர்ய ஸமப்ரப. அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா. அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்னிசம். அநேக தந்தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மகே.

ஸராரன் யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம். சரணம் த்வாம் ப்ரபந்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரியம். பகவன் பார்வதி ஸுநோ ஸ்வாமின் பக்தார்த்தி பஞ்சனம். பவத் பாதாப்ஜயோர் பக்தீம் தேஹி மே விபுலாம்ஸ்ரியம்.

ப்ரஹ்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ஸ்மரேன் நித்யம் மஹா பாதக நாசனம்.

வாஸுதேவம் ஹ்ரிஷிகேசம் வாமனம் ஜல சாயினம். ஜனார்தனம் ஹரீம் க்ருஷ்ணம் ஸ்ரீ வக்ஷம் கருடத்வஜம்.

மஹாதேவ மஹாதேவ மஹாதேவ தயானிதே. பவானேவ பவானேவ பவானேவ கதிர்மம.ய சிவோ நாம ரூபாப்யாம் யா தேவி ஸர்வ மங்களா.தயோ ஸம்ஸ்மரணாத் பும்ஸாம் ஸர்வதோ ஜய மங்களம்.

யஸ்யா பூஜன மாத்ரேன ஹரிரப்யர்சிதோ ப்ருஸம். வந்தே ஸ வத்சாம் தாம் தேனும் சர்வ தேவ ஸ்வரூபிணீம். காத்யாயணி மஹாமாயே மஹாயொகின்யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதீம் மே குரு தே நம.

ஓம் நம: கமல வாஸின்யை நாராயண்யை நமோ நம: க்ருஷ்ண ப்ரியாயை ஸாராயை பத்மாயைஸ்ச நமோ நம:

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி. வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா.
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரஸ்மே திவாகர. ஆயுர் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஸ்ரியம் புத்ராம்ஸ்ச தேஹி மே.

ஆதித்யாய ச ஸோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனிப்யஸ்ச ராஹவே கேதவே நம.
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரெளத்ரம் பவோத்பவம் ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீசம் மங்களம் மங்கலாயுதம்.

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத ராம தூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகீ நந்தனாய ச நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம: ஞான வைராக்கிய ஸம்பூர்ணான் ஹரி பக்தி பராயணான் பூர்வா சார்யான் அஹம் வந்தே ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகான்.
 
your son's birth star is pooratttaadhi. kumba rasi.virischika lagnam.

to find out upanayanam date;-
உப நயனம்;-
மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் செய்ய வேண்டும். உத்திராயனத்தில் செய்ய வேண்டும். வளர் பிறை சிலாக்கியம்.
த்விதியை, த்ருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திதிகள் சிலாக்கியம். த்வாதசி, த்ரயோதசி மத்திமம்
புதன், வியாழன், வெள்ளி கிழமைகள் சிறந்தது, ஞாயிறு , திங்கள் மத்திமம்

அசுவதி, ரோஹிணி, மிருக சீர்ஷம், புனர்பூசம். பூசம்,உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,
உத்திராடம், திரிவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி .

சந்திரன் இல்லாத சுப லக்னகள். ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் சிறந்தது.
லக்னத்திலிருந்து எட்டாம் இடம் எந்த கிரஹமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
அனத்யயன தினம் கூடாது. அதாவது, அம்மாவாசை, பெளர்ணமி தினக்களும், இதற்கு முந்தைய சதுர்தசி தினங்களும் ,கிருஷ்ண பக்ஷ அஷ்டமியும் அத்யயனம் செய்ய க்கூடாது.

ருக் வேதிகளுக்கு குரு, யஜுர் வேதிகளுக்கு சுக்கிரன், சாம வேதிகளுக்கு செவ்வாயும் அஸ்தமனமும், நீசமும் கூடாது.

கரி நாள், தனிய நாள், மரண யோகம்,ராகு காலம் , யமகண்டம் , சந்திராஷ்டம தினங்கள் வேண்டாம்.

தாரா பலம், சந்திர பலம் இருக்க வேண்டும். கசரம் யோகம் உள்ள நாள் வேண்டாம்.
பஞ்சகம் பார்க்க வேண்டும்.

அவமாகம், த்ருதினஸ்ப்ருக் நாட்கள் வேண்டாம்.

எந்த ஒரு மாத த் தில் இரு அமாவாசை, அல்லது இரு பெளர்ணமி வருகிறதோ அதற்கு மல மாசம் என்று பெயர். எந்த ஒரு மாதத்தில் அமாவாசையோ, பெளர்ணமியோ வரவில்லையோ அதற்கு விஷ மாதம் என்று பெயர். இவை இரண்டிலும் சுப காரியம் செய்ய கூடாது.

எந்த ஒரு மாதத்தில் மாத பிறப்பு வர வில்லையோ, எந்த ஒரு மாதத்தில் இரு மாத பிறப்புகள் வருகிறதோ இந்த இரு மாதங்களிலும் சுப காரியம் செய்ய கூடாது.
மாத சூன்யம், தியாஜ்யம் பார்க்க வேண்டும். ஹோரை நன்றாக இருக்க வேண்டும். கெளரி பஞ்சாங்கம் நன்றாக இருக்க வேண்டும்.

பூரட்டாதி நக்ஷத்திரத்திற்கு தாரா பலன் உள்ள நக்ஷத்திரங்கள்:- அசுவதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம்,மிருக சீர்ஷம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சத்யம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
கும்ப ராசிக்கு எட்டாவது ராசி கன்னி. அதில் வரும் உத்திரம், ஹஸ்தம், சித்திரை சந்திராஷ்டமம் ஆகும். ஆகையால் மற்ற ஒரு நக்ஷ்க்ஷத்திர பொருத்தம் பார்க்க வேண்டும்.

வருகிற மாசி, பங்குனி, சித்திரை வைகாசியில் பார்த்து எழுதுகிறேன்.
 
Back
Top