திங்கள் ஆயிரம்....

Dedicated to my appa, chitthappa and athimber celebrating their sadabhishekam
Sadabhishekam is celebrated by those who have seen 1000 full moons

முதலில் தோன்றிய படைப்பு கடவுள்
மூவுலகின் அறிவினை ஆக்கிடும்
மூத்தோர் காணும் முழுமதி ஆயிரம்
மூன்று தலைமுறை அறிவினை ஆக்கிடும்

அனைத்து உலகும் ஆகிய ஈசன்
அனைத்தனின் சக்தி ஆக்கிடும்
ஆன்றோர் காணும் திங்கள் ஆயிரம்
அவர் வழி வாழ்வோர் சக்தி ஆக்கிடும்

ஆதிமூலம் ஆகிய அந்த நாராயணனே
அனைவரின் ஆன்மா ஆக்கிடும்
அப்பெரியோர் காணும் திங்கள் ஆயிரம்
அக்குல மக்களின் ஆழ்மனது ஆக்கிடும்

அந்த ஈசன் பிரம்மன் நாராயணன்
அம்மூவர் இணைந்தே விஷ்ணுவாகிடும்
ஆயிரம் திங்கள் காணும் ஆன்றோர்
அவருள் ஒளியை விஷ்ணு ஆக்கிடும்

"எதிலும் இருக்கும் அந்த விஷ்ணு
(தத் விஷ்ணோர் பரமம் பதம்)
எப்பொழுதும் ஆன்றோர் பார்த்திடும்
(சதா பஷ்யந்தி சூராய)
எங்கும் விரிந்த பார்வையாளன்
(திவீவ சக்ஷுர் ஆததம்)
என்று தொடங்கும் அந்த ஆதி வேதம்,

அந்த அதிசயத்தக்க ஆன்றோரில்
(தத் விப்ராஸோ விபன்யவோ)
ஆர்த்தெழுந்து ஒளியை தூண்டிடும்
(ஜாக்ருவாம்ச சம் இந்ததே)
அனைத்திலும் இருக்கும் விஷ்ணுவென
(விஷ்ணோர் யத் பரமம் பதம்)
அந்த ஆதி வேதம் முடியுமே..

அறிவு சக்தி ஆழ்மனதாக்கிய
அகில சாக்ஷியை நித்தம் நினைக்கிற
ஆயிரம் திங்கள் காணும் உமதொளி
அவனொளி உம்வழி வந்து வாழ்த்துமே!!!

-TBT
 
அற்புதமான ஆழ்ந்த சிந்தனையிலிருந்துதித்தவரிகள்.
வயதில் மூத்தவரென்ற முறையில் நான் நல்லாசிகளை வழங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

ப்ரம்ஹண்யன்
பெங்களூர்.
 
மிக்க நன்றி

அற்புதமான ஆழ்ந்த சிந்தனையிலிருந்துதித்தவரிகள்.
வயதில் மூத்தவரென்ற முறையில் நான் நல்லாசிகளை வழங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

ப்ரம்ஹண்யன்
பெங்களூர்.
 
Back
Top