• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழ் தெரியுமா? Tamil Quiz -1

Status
Not open for further replies.
தமிழ் தெரியுமா? Tamil Quiz -1

Tamil+Pyramid+2.jpg


தமிழ் தெரியுமா? Tamil Quiz -1
Do You Know Tamil?

Score level:
25 –30 You are a Tamil Scholar!
15-25 Well Done! You are good at Tamil.
10-15 Not good at Tamil.
Under Ten- Are you a Tamil?


1)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் அர்த்தம் என்ன? இதைப் பாடியவர் யார்?
2) தன் முடி ஏன் நரைக்கவில்லை என்று கூறிய புலவர் யார்? அதற்கு அவர் கூறிய 5 காரணங்கள் என்ன?
3).உபகாரம் செய்யாவிட்டாலும் பிறருக்கு அபகாரமாவது செய்யாமல் இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்த புலவர் யார்?
4) “இவர் என் மகளிர்; அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே” என்று சொல்லிக்கொண்டு பாரியின் மகளிரை திருமணம் செய்விக்க ராஜ்யம் ராஜ்யமாக அலைந்து திரிந்த பிராமண புலவன் யார்?
5)முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி ஆண்ட மலையின் பெயர் என்ன?

6)ஒருவரிடம் போய் பிச்சை கேட்பது அசிங்கம், அவனுக்குப் பிச்சை போட மாட்டேன் என்று சொல்லுவது அதைவிட மகா அசிங்கம் என்று பொருள்படப் பாடிய புலவன் யார்?
7).புலவரைப் பார்க்க நேரம் இல்லை, ஐயாவுக்கு பரிசு மட்டும் கொடுத்து அனுப்பு என்று கூறிய மன்னன் யார்? உடனே கோபத்தில் கொதித்தெழுந்த புலவன் யார்?
8)கோப்பெருஞ் சோழனுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கச் சென்ற புலவரை உனக்கு மகன் பிறந்த பின் வா என்று அனுப்பப்பட்ட புலவர் யார்?
9)படையின் முதல் வீரர் போனபோது பனை மரத்தில் நுங்கு காய்த்தது. படையின் கடைசி வீரர் போவதற்குள் பனங்கிழங்கு சுட்டுத் தின்னும் காலம் ஆகிவிட்டது (நம்ம ஊர் அரசியல் ஊர்வலம் போல). அவ்வளவு பெரிய படை என்று புகழ்ந்த புலவன் யார்? புகழப்பட்ட மன்னன் யார்?
10)வானத்திலிருந்து ஒரு எரி நட்சத்திரம் விழுந்தவுடன் மன்னன் சாகப் போகிறான் என்று ஜோஸ்யம் கூறிய புலவர் யார்? அவர் சொன்ன படியே இறந்த மன்னன் யார்?

கீழ்கண்ட பழமொழிகளைப் பூர்த்திசெய்ய முடியுமா?


11)காக்காய் உட்கார………………………..
12)ஆடு நனைகிறதே என்று ------------------
13)ஐந்து பெண்களைப் பெற்றால்-----------
14)---------------------மீசைக்கும் ஆசை
15)பசி வந்தால்-----------------------
16)புலி பசித்தாலும்----------------------
17)பட்ட காலிலே படும்-----------------------
18)கல்யாண சந்தடியில் தாலி--------------------------
19)சிறு துரும்பும் ----------------------------
20)திருப்பதியில் மொட்டைத்----------------------------

இந்தப் பொன்மொழிகளை யார் சொன்னார்கள்

21)நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்
22)கங்கையின் புனிதமாய காவிரி
23)ஆயிரம் இன் தமிழ் பாடினான்
24)ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
25)எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
26)வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல்
27)வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்
28) புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்
29) சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை
30)கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக


Answers: விடைகள் 1) எந்த ஊரும் எங்கள் ஊரே, எல்லோரும் எம் உறவினரே. இதைப் பாடியவர் கணியன் பூங்குன்றன்-புறநானூறு பாடல் 192
2) புலவர் பெயர் பிசிராந்தையார் (புறநானூறு பாடல் 191); ஐந்து காரணங்கள் என் மனைவி குணவதி, என் பிள்ளைகள் புத்திசாலிகள், வேலைக்காரர்கள் குறிப்பறிந்து வேலை செய்வர், அரசன் தர்மவான்,எங்கள் ஊரோ அறிவாளிகள் நிறைந்த ஊர் 3) நரிவெரூஉத் தலையார் ((புறநானூறு பாடல் 195); அவர் சொன்னது:நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்.;அதுதான் எல்லாரும் உவப்பது 4) கபிலர் 5) பாரியின் பறம்பு மலை 6) கழைதின் யானையார்; “அவர் சொன்னது:ஈ என இரத்தல் இழிந்தன்று;அதன் எதிர், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;” (புறநானூறு பாடல் 204).
7) மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி; கோபப்பட்ட புலவன் பெருஞ்சித்திரனார்; யானோ வாணிகப் பரிசிலன் அல்லேன் (புறநானூறு பாடல் 208)
8) பொத்தியார் 9) புலவர் ஆலத்தூர் கிழார், மன்னன் சோழன் நலங்கிள்ளி (புறநானூறு 225)

10) புலவர் கூடலூர் கிழார், மன்னன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (புறநானூறு 229)
11) பனம் பழம் விழுந்தது போல 12) ஓநாய் அழுததாம் 13) அரசனும் ஆண்டி ஆவான் 14)கூழுக்கும் ஆசை 15) பத்தும் பறந்து போகும் 16) புல்லைத் தின்னாது 17) கெட்ட குடியே கெடும் 18) கட்ட மறந்தது போல 19) பல் குத்த உதவும் 20) தலையனை தேடியது போல 21) அப்பர் என்ற திருநாவுக்கரசர் 22) குலசேகர ஆழ்வார் 23) மதுர கவி ஆழ்வார் 24) திரு வள்ளுவர் 25) பட்டினத்தார் 26) குலசேகர ஆழ்வார் 27) பனம்பாரனார் 28) பாரதி தாசன் 29) பாரதியார் 30) ராமலிங்க சுவாமிகள்

Tamil+Flag.jpg
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top