தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்ற&

Status
Not open for further replies.
தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்ற&

skanda4.jpg

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -7
தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.


விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்
மந்த்ர வேத புராண கலைகளும்
ஐம்பத்தோர்விதமான லிபிகளும் வெகுரூப ”
என்றும் இன்னுமோர் இடத்தில்

“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்
அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”


என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.


திருமந்திரம்

திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்
இணையார் கழலிணை யீரைந்தாகும்
இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்
இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)
12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.


திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே, உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.


காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.
வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.

சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.

நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.

ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ--வும் கடைசி க்ஷ--வும் இருக்கிறது.


மந்திர சாஸ்திர விளக்கம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும் உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.

கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.

உலகில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சிவன், முருகன், தேவியர் ஆகியோருடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு வேறு எந்த மொழியும் கடவுளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை!!
கடந்த சில நாட்களில் வெளியான ஏனைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்து இன்புறுக. இன்னும் வரும்…………..
 
51a. அக்ஷரப் புலவர்கள்

# 51 (a). அக்ஷரப் புலவர்கள்

ஆலவாய் அம்பதியில் ஆட்சி புரிந்தான்
அழகிய முறையில் வங்கிய சேகரன்;

அசுவமேத யாகங்கள் பத்துப் புரிந்தார்
காசியில் பிரமன் மும்மனைவியருடன்.

நீராடச் சென்றான் பிரமன் கங்கைக்கு,
சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரியருடன்.

செல்லும் வழியில் நின்றாள் சரஸ்வதி,
உள்ளம் கவரும் ஓரிசையில் மயங்கி.

சரஸ்வதிக்குக் காக்கவில்லை பிரமன்,
சாவித்திரி, காயத்திரியுடன் நீராடினார்.

கரையேறிவிட்ட கணவனைக் கண்டதும்
சரஸ்வதிக்குக் கோபம் மூண்டு விட்டது.

“என்னைத் தனியே விட்டு விட்டு நீர்
இன்னும் இருவருடன் நீராடியது ஏன்?”

கோபம் அனைவருக்கும் பொது ஆயிற்றே!
கோபம் கொண்டார் இப்போது பிரமனும்!

“உன் மேல் குற்றம் உள்ளபோதே நீ
என் மேல் சீறிச் சினந்து கொண்டாய்!

எண்ணற்ற மனிதப் பிறவிகள் எடுத்து
மண்ணில் உழன்று குற்றம் நீங்குவாய்!”

“மண்ணில் பிறவியே வேண்டாம் எனக்கு!
எண்ணற்ற பிறவிகளில் என்ன செய்வேன்?”

கண்ணீரால் சினம் தணிந்தார் பிரமன்,
பெண்ணின் சாபத்தை எளிதாக்கிவிட்டார்.

“அ”காரம் முதல் “ஹா”காரம் வரையுள்ள
அக்ஷரங்கள் நாற்பது எட்டும் உனக்குதவும்!

நலம் திகழும் நாற்பது எட்டு எழுத்துக்களும்
பலவேறு வர்ணங்களில் பிறவி எடுப்பார்கள்.

அகரம் ஆவது நம் தனிப்பெரும் தலைவன்
அரன் ஆகிய சோமசுந்தரேஸ்வரனே அன்றோ?

அவனும் ஒரு புலவனாகி, பின் தலைவனாகி,
சங்கம் வைத்துத் தங்கத் தமிழ் வளர்ப்பான்.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top