தமிழா விழித்திடு..விழித்திரு.. விழித்தெழ&#3009

Status
Not open for further replies.
தமிழா விழித்திடு..விழித்திரு.. விழித்தெழ&#3009


முல்லை பெரியாறு
எல்லைத் தகராறு - இனி
இல்லை ஆறு என
எள்ளி நகையாடி
தொல்லை தரலாம்
தமிழா...
விழித்திடு..விழித்திரு.. விழித்தெழு...

அண்டை அயலார்
ஆவியே போனாலும்
ஆவியாகப் போனாலும்
யாரும் பருகிட கூடாதென
காவிரி நீரை மறுக்கும்
பாவிகள் ஒரு புறம்
தமிழா...
துடித்திடு...கொதித்திடு...கொதித்தெழு...


பாலாறு தேனாறு
வாயாரக் கூறியது
பழங்கதையாய் ஆனது
காலாற நடக்கத்தான் முடியும்
கால் நனைக்க முடியாமல்
தமிழா...
ஒடுத்திடு...தடுத்திடு...நடத்திடு...

உறங்கும் சமயம்
மறந்தும் மரத்துவிடாதே
உன் கோவணம் கூட
உருவப்படலாம்...
தமிழா...
விரைந்திடு...வீழ்த்திடு...வென்றிடு...

அரசியல் விளையாட
சதுரங்கத் தளமல்ல...
சதிகாரர் நுழையும்
பழிவாங்கும் களமல்ல..

அப்பாவி மக்கள்
அன்றாடும் அல்லலுறும்
வாழ்க்கைத் தளம்....
அனுசரனையாய் நடந்தால்
அனைவருக்கும் நலம்...
நடுநிலைமை தவறினால்
ஆலாங்கால விஷம்...

பாரதத்தின் பெருமை
வேற்றுமையில் ஒற்றுமை...
தமிழனின் பெருமை
ஒற்றுமையில் வேற்றுமை...

தமிழா ஒன்றுபடு
ஒற்றுமை உணர்வுடன்
வேற்றுமையை மறப்போம்
மாற்றத்தை ஏற்படுத்துவோம்
ஒன்றிடுவோம்
வென்றிடுவோம்...

தமிழா...
விழித்திடு விழித்திரு விழித்தெழு
துடித்திடு கொதித்திடு கொதித்தெழு
ஒடுத்திடு தடுத்திடு நடத்திடு
விரைந்திடு வீழ்த்திடு வென்றிடு...
 
கவிதை அருமைதான் நண்பரே! ஆனால், 'பாரதத்தில் வேற்றுமையில் ஒற்றுமை' என்பது, ஏட்டில் மட்டுமே!
அது உண்மையானால் ஆறுகளுக்காகத் தகராறுகள் வருமோ? :fencing:
 
Status
Not open for further replies.
Back
Top