• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :

1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.

அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்

கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்

மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்

புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்

மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்

உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்

சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்

விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்

மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு

உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி

அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி

பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

செவ்வாய் :சுப்ரமண்யர்

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

புதன் :விஷ்ணு

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

சனி : எமன், சாஸ்தா

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

ராகு: காளி, துர்கை

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

பெறுகள் பதினாறு வகைப்படும்:

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள
ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது
 
இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்! By dn First Published : 02 January 2015 02:53 PM IST "இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று என்பதுதான் பண்டைய மரபு. இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார். கந்தபுராணத்தினுள் "சிவரகசியம்' என்ற ஒரு பகுதி உள்ளது. இதற்குச் "சிவரகசிய கண்டம்' என்று பெயர். இதிகாசங்களிலேயே மிகவும் உயர்ந்தது லட்சம் கிரந்தங்களைக் கொண்ட பரமேதிகாசம். அதுதான் சிவரகசியம்.
Dear Sir this must be the basis
MS ( NAITHRU)
 
Thanks, Sri Naithru. Wonders never cease.

Looks suspiciously like Shaivaites trying to outdo Vaishnavites.

Sri Praveen has already listed the following as important Puraanams:-

14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்

The naayanmaars have also their own esteemed competing compositions.

Some folk, I presumre, want to add something of their own to existing material.

Curiously, Sri Praveern puts சிவரகசியம் ahead of .இராமாயணம் and .மஹாபாரதம்.

Wonder why?

S Narayanaswamy Iyer
 
dear sir,
my intention is not to brag my knowledge in front of you, am only a pebble in front of you. just to show what was the basis, though its fake.
Please do not take otherwise.
ms
 
Have visited Shiva-kshethrams like chidambaram and seen the "rahasyam" there, as explained to me by the chief priest of that great devasthaanam.

Was therefore intrigued that Sri Praveen should introduce a "சிவரகசியம்" ahead of .இராமாயணம் and .மஹாபாரதம் in his exposition.

Who was the composer? When and where did he or she compose it? In what language?

Do the chief priests of the temples housing the 12 jyothir-lingams accept it as genuine, and include it in their varalaaru?

Glad if someone can kindly clarify.

S Narayanaswamy Iyer
 
dear sir
about siva rahasiyam further written by ms manjula
இதிகாசங்களிலேயே மிகவும் உயர்ந்தது லட்சம் கிரந்தங்களைக் கொண்ட பரமேதிகாசம். அதுதான் சிவரகசியம். ஆனால், சிவரகசியம் என்ற நூலின் தலைப்புக்கேற்ப அந்த இதிகாசம் இன்றுவரை ரகசியமாக, சமயக் காழ்ப்புணர்ச்சியாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, இராமாயணத்தையும் மகாபாரதத்தையுமே குறிப்பிடும்படியாக மக்களின் மனங்களையும் அறிவையும் மழுங்கச் செய்துவிட்டனர் பிற மதத்து - சமயத்துப் பெரி(சிறி)யோர்! அதனால் அது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது. சைவத்தின் பெருமையை உண்மைகளைக் கூறுவதற்குப் பல புராணங்களும், வேதாந்தங்களும், சித்தாந்தங்களும் உபநிடதுகளும், ஞான நூல்களும் இருந்தாலும், சிவரகசியத்தை மட்டும் இருட்டடிப்பு செய்வதற்கான காரணம் என்ன? அதில் அப்படி என்னதான் ரகசியம் உள்ளது? இதை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று ஏன் நினைத்தனர்? அதற்கான விடைகள் எல்லாம் இந்நூலில் பொதிந்து கிடக்கின்றன. காரணம் சைவசமயத்தின் உயிர்நாடியாக உள்ளது இந்நூல். அதனால் அச்சமயத்தை வளரவிடக்கூடாது என்று நினைத்த பிற சமயத்தவரால் அன்றைக்கே இந்நூல் இதிகாசங்களில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்டு, இதிகாசம் இரண்டே என்ற முத்திரைக் குத்தப்பட்டுவிட்டது. சிவரகசியத்தில் என்ன உள்ளன? சிவரகசியம் என்பது லட்சம் கிரந்தமுடைய பரமேதிகாசம் எனப் பெயர் பெறும். இதிகாசங்களுள் பரமேதிகாசம் உயர்ந்தது என்பது சொல்லாமலேயே உணரப்படும். இச் சிவரகசியம் பரம்பொருளாகிய சிவபெருமான் உமையம்மைக்கு உபதேசித்தருளிய உயர்வுடையது. சிவரகசியம் பன்னிரண்டு பிரிவுகளை உடையது. அவற்றுள் மூன்றாவது பிரிவைத் தமிழில் செய்யுள் வடிவில் செய்தருளியவர் திருவாரூரைச் சேர்ந்த ஒப்பிலாமணி தேசிகராவார். இந்நூலுள் சிவபெருமானுடைய சிறப்புகளும், ஆன்மாக்களிடத்து(உயிர்கள்) அவர் நடத்தும் ஐந்தொழிற் சிறப்பும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்), இறைவனை மெய்யடியார்கள் வழிபட்டு வீடுபேறு அடையும் முக்தி மார்க்கங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்ரிய நிலைகளும், சிவபூஜை, அடியார் சிவபக்தி, பிரதோஷகாலச் சிறப்பு, ஐந்தெழுத்து உண்மையும் மகிமையும், வில்வத்தின் பெருமை, உருத்திராக்க மகிமை(உயர்வு), இறைவனுடைய திருப்பெயர்கள், வேதாகமங்கள், காயத்ரி மந்திரத்தின் சிறப்பு, அதைக் கூறுபவர் அடையும் மேன்மை,சிவாகமங்கள் இவற்றின் உயர்வு, புஷ்பவிதி, சிவவிரதங்கள் தீர்த்தங்களின் மேன்மை முதலியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வழி நின்று பேறுபெற்றோர் உயர்வும் கூறப்பட்டுள்ளன. சிவரகசியம் உமையம்மைக்குப் பின்னர் அவரால் முருகப்பெருமானுக்கும், அவரால் திருநந்திதேவருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. நந்திதேவர், தம்மை வழிபட்ட திருமாலுக்கு உபேசித்தார், திருமால் பிரம்மதேவருக்கு உபதேசித்தார், பிரம்மதேவர் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்க, சனகாதியர் நாரதருக்கும், நாரதர் வியாச முனிவருக்கும், வியாசர் சூதருக்கும் முறையே உபசேதம் செய்ய இப்படியாக... இச்சிவரகசியம் நிலவுகை அடைந்தது. இந்நூலுள் சிவஅபராதம், யமலோகம், யமதண்டனை ஆகியவைகளும் திருநந்தித்தேவர் முதலான சிவகணங்களின் வரலாறும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. எதனால் இந்த இதிகாசம் இருட்டடிப்பு செய்யப்பட்டு இன்றுவரை பலராலும் படிக்கப்படாமல் ரகசியமாகவே இருக்கிறது என்பது இப்போது தெள்ளத்தௌôவாக விளங்கியிருக்குமே...! -இடைமருதூர் கி.மஞ்சுளா
 
wiki says....
Shivarahasya Purana (Sanskrit: शिव रहस्य पुराण; IAST: śiva rahasya purāṇa) is one of the 'Shaiva Upapuranas' or ancillary Puranaregarding Shiva and Shaivite worship and is also considered 'Indian epic poetry' (Sanskrit: Itihāsa).

The book is dedicated to detailed explanation of Shaivite thoughts, rituals and religious myths. The manuscripts are found in various ancient literature. However, to date there has been no critical study of these manuscripts.[1] It is one of the first few works of the acclaimed Saint Ribhu, who was taught by Shiva himself.

The book consists of twelve parts and has about one hundred thousand verses.[2]

The Kannada translation of the book was published in 30 volumes in 1950.[1]
 
Ribhu Gita[edit]
The Ribhu Gita (Sanskrit: ऋभुगीता; IAST: ṛbhugītā) is an acclaimed song at the heart of this purana whose content has been described as advaita, monist or nondual. The Ribhu Gita forms the sixth part of Siva Rahasya Purana. In the span of about two thousand verses, it recounts the dialogue between Sage Ribhu and Sage Nidagha concerning the Self and Brahman, which takes place on the slopes of Mount Kedara in the Himalayas. [3]

Dialogues between Ribhu and Nidagha on the Supreme Brahman are presented elsewhere, such as in the Tejobindu Upanishad of Krishna Yajurveda, the Mahopanishad of Sama Veda, the Annapoornopanisha of Atharva Veda and the Varahopanish of Krishna Yajurveda.[2]

The Ribhu Gita uses negation (neti neti) and affirmation, reinforced by frequent repetition and exhaustive elaboration, to discuss the nature of reality under various headings. These include: [3]

  • Existence-Awareness-Self
  • Shiva is equated with Sat-Chit-Ananda, described as the screen on which Shakti is projected as the moving picture of the universe.
  • Jivanmukta - one who is liberated while still physically alive, who abides in the blissful peace of Sat-Chit-Ananda.
  • Videhamukta - one who is liberated after death through the continued repetition of "I am Self-Brahman."
  • The True Samadhi
  • Sahaja Samadhi
  • Maturing of Sahaja Samadhi
  • Mukti is Shiva's grace
  • Everything is Sat-Chit-Ananda
  • The Natural State
 
Dear Sri Naithru

You yourself say that "śiva rahasya purāṇa is one of the 'Shaiva Upapuranas' or ancillary Purana regarding Shiva" according to your source Wikipedia.

In other words, it is clearly not even a full or proper Puraanam but only an ancillary, or subsidiary, one.

As I noted above, three puraanams, including Shiva Puraanam, are listed among the eighteen principal puraanams. So why on earth does Mr Praveen elevate the "siva rahasyam" ot top of not only the 18 principal puranaas but also above raamaayanam and mahaa-bhaaratham?

You also say:-

"Real masters including Ramana Maharshi held the Ribhu Gita in esteem ."

Ramana maharishi is widely known to be a modern-day reformer and rebel, e.g. he violates the letter and spirit of the Vedams (including purusha sooktham) to achieve popularity. Not everyone follows him.

You further say that "Sri Chandrashekarendra Saraswati held the Ribhu Gita in esteem." He even held the Dhammapaada and the Qoran "in esteem". Where and when and to whom did he say that the siva-rahasyam is an ithihaasam?

If you are looking seriously for a third ithihaasam, why not choose Lalitha sahasra-naamam from Brahmaanda Puranam, or Devi Maahaathmyam from Maarkandeya Puraanam?

Is it not true that even the thri-murthis were created by Aathi-Paraashakthi? For example look at the first part of slokam 32 of Lalitha sahara-naamam (from Brahmaanda Puranam, one of the 16 principal puranams) which reads:-

"karaanguli nakhothpanna naaraayana dashoth-kruthihi"

S Narayanaswamy Iyer
 

Latest ads

Back
Top