தமிழர்களுக்கு தாலி உண்டு:ம.பொ.சி

Status
Not open for further replies.
தமிழர்களுக்கு தாலி உண்டு:ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன. இது பற்றி நான் படித்ததைக் கீழே கொடுத்துள்ளேன்:

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்ற னர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

ஈகை அரிய இழை அணி மகளிர் (ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

அகலுள் மங்கல அணி எழுந்தது- சிலப்பதிகாரம்1-47 (மங்கல சூத்திரத்தை ஊரவ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் (கன்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.

நல்லாவுர் கிழார் குறிப்பிடும் " வால் இழை மகளிர்" என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சி., பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர். தமிழ் பெண்களுக்கு வாழ்த்து- தீர்க்க சுமங்கலி பவ:
 
Status
Not open for further replies.
Back
Top