அன்பர்களே - ஸாய்ராம். வணக்கம். அன்னையின் பாசமும் பரிவும் அன்பும் அளவிடற்கரியது. அதே வகையில் தந்தைக்கும் பாசமும் பரிவும் உண்டு, தந்தைக்கும் நம் நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் வண்ணம் நான் எழுதிய ஒரு சிறு கவிதைத் துண்டு ChennaiOnline : ???????? | (???)???? என்ற வலைத்தளத்தில் பிரசுரமாகியிருப்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். இந்த தமிழ் பிராமண அமைப்பு செய்து வரும் தொண்டு மகத்தானது. இதில் பரிபூரண பங்கேற்று வெற்றிகரமாக நடத்திவரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் - திருவாளர்கள் ஆர்.வி.ஆர்., ஸ்வாமிநாத சர்மா,, சபேசன் நாராயணசாமி, சந்துரு, ப்ரவீண் இன்னும் ஏனைய பெயர் தெரியாதவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். குறிப்பாக நவீன ஸ்வயம்வரம் நிகழ்ச்சி நிச்சயமாக அனைவரையும் கவர்வதோடு, நற்பயன்களையும் நல்கியிருக்கிறது. சமீபத்தில் மதிப்புமிகு திரு ஸ்வாமிநாத சர்மா அவர்களை சென்னையில் எங்கள் உறவினர் திருமண வைபவத்தன்று சென்னையில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. உன்னதமானவர். அறிவுஜீவி. வாழ்க, வளர்க. ஸாய்ராம் - நாகை ராமஸ்வாமி