தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து &#2970

Status
Not open for further replies.
தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து &#2970

தண்ணீர் தேடாத கிராமம்: மழைநீரை சேமித்து சாதனை

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊரணியில் மழைநீர் சேமிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு 11 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடே ஏற்பட்டது இல்லை.

மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில், நூறு சதவீதம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து வெளியேறும் கூடுதல் மழைநீர், 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஊரணியில் அமைக்கப்பட்ட இரண்டு ராட்சத தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. ஊரணி எப்போதும் நிரம்பியே உள்ளது.இந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்செல்லும் மக்கள், 'தேத்தாங்கொட்டை' விதைகள் மூலம் தண்ணீரை தெளிய வைத்து, காய்ச்சி பயன்படுத்துகின்றனர். இந்த தண்ணீர், 'மினரல் வாட்டரை' விட தூய்மையாக உள்ளதாக கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detai...ction_types=og.likes&fb_ref=.U_gDAJJDbYo.like
 
Status
Not open for further replies.
Back
Top