தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

Status
Not open for further replies.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்



ff8ef271-1e65-41e0-bd15-22196fc1a07c_S_secvpf.gif



ஸ்தல வரவலாறு....


தஞ்சையை ஆண்ட சோழ அரசர் தஞ்சையை சுற்றி 8 திசைகளிலும் காவல் தெய்வங்களாக அஷ்டசக்திகளை அமைத்திருந்தார். அதில் தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமைந்திருக்கும் சக்தி புன்னை நல்லூர் மாரியம்மன் ஆகும் என்று சோழ சம்பு என்ற நூல் கூறுகிறது.

1680-ம் வருடம் தஞ்சையை ஆண்டு வந்த ஏகோஜி எனப்படும் வெங்கோஜி மகாராஜாவின் கனவில் அம்பிகை தோன்றி தஞ்சைக்கு கிழக்கே புன்னை காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை சேவிக்க கூறியுள்ளார் . மன்னரும் இத்தெய்வத்திற்கு புன்னை நல்லூர் கிராமத்தை வழங்கினார்.

1727 முதல் 1735 வரை தஞ்சையை ஆண்ட துளஜா மகாராஜாவினால் அம்பி கைக்கு சிறிய அளவில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. திருச்சுற்று மாளிகையும் அமைக்கப்பட்டது. பலம் மிகுந்த சாதசிவ பிரம்மேந்திர சுவாமிகளை கொண்டு புற்றுருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் வடிவமைத்து சக்கர பிரதிஷ்டையும் செய்தார்.

1798 முதல் 1832 வரை ஆண்டு வந்த இரண்டாம் சரபோஜி மகாராஜா இக்கோவிலில் மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய 2-வது சுற்று திருச்சுற்று முதலியவற்றை கட்டி அம்பிகைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

பின்னர் 3-வது திருச்சுற்றும் வெளி மண்டபமும் கட்டப்பட்டன. இக்கோவிலில் பேச்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. குழந்தைகள் பயந்து அழுவதை தடுப்பது இத்தெய்வம் என்பது பழங்காலம் தொட்டு வழங்கி வரும் நம்பிக்கையாகும்.

தனிசிறப்பு.....

இக்கோவிலின் கருவறையில் அருள்பாலிக்கும் மாரியம்மன் புற்று மண்ணால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பாகும். எனவே அம்பாளுக்கு நித்திய அபிஷேகம் நடத்தாமல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தைலாபிஷேகம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) நடந்து வருகிறது.

அந்த ஒரு மண்டல காலமும் அன்னையின் உக்கிரம் அதிகமாகும் என்பதால் தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாய் வியர்வை வியர்த்து தானாகவே மாறி விடும் வழக்கம் இன்று வரை நடந்து வருகிறது. அதனால் முத்து மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

????? ????????????? ?????????? || thanjavur punnainallur mariamman temple
 
Status
Not open for further replies.
Back
Top