ஜீவன் முக்தி

Status
Not open for further replies.
ஜீவன் முக்தி




ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவருடைய மற்றொரு படைப்பே யோக வாசிஷ்டம் என்பது பெரியவர்களின் கருத்து. இந்த நூல் முக்கியமாக இடம் பெறுவது ராமருக்கு வசிஷ்டர் செய்த ஆன்மீக உபதேச மொழிகளாகும். ப்ரம்மத்தைப்பற்றியும், ஆத்மாவைப்பற்றியும், ஆத்மா முக்தி அடைவதற்கான யோக ரீதியிலான வழிகளை இந்த க்ரந்தம் எடுத்துக்கூறுகிறது. அத்வைதத்தில் ஸ்ரீசங்கரருக்கு காலத்தால் முற்பட்டு வேதாந்தத்தை உபதேசிப்பதாக கருதப்படும் நூல்களுள் இந்த யோக வாசிஷ்டம், தத்தாத்ரேயரின் த்ரிபுர ரஹஸ்யம் போன்ற க்ரந்தங்கள் மிக முக்கியமானவை.




விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவரும், அத்வைத சந்நியாசியுமான வித்யாரணயர் தமது ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலில் ஜீவன் முக்தி அடைவதை விளக்க இந்த யோகவாசிஷ்டத்தை ஆதாரமாக கையாண்டிருக்கிறார். அத்தகைய இந்த நூலிலிருந்து ஜீவன் முக்தி அடையும் யோகியின் ஏழு நிலைகளை குறித்த பகுதியை பார்க்கலாம்.


ज्ञायनभूमि: शुभेच्छख्या प्रथमा समुदाह्रुता
विचारणा द्वितीया स्यात् तृतीया तनुमानसा ॥
सत्वापत्तिश्चतुर्थी स्यात्तत्तो संसक्तिनामिका
पदार्थोभाविनी षष्टि सप्तमी तुर्यगा स्मृता ॥


ஜீவன் முக்தி அடையும் யோகி முதலில் புனிதமானதை அடைய இச்சை/விருப்பம் உள்ளவனாக இருக்கிறான். இரண்டாவதாக சுயமாக கற்பதினாலும், நல்லோர்களின் சமூகத்தாலும் உண்மையை ஆராய முற்படுகிறான். இந்த உண்மை/மாயை நிலைகளை உணர்வதால் மூன்றாவது நிலையில் அமைதியான மனதினை உடையவனாகிறான்.


இத்தகைய அமைதியான மனநிலையை அடைந்து முதல் மூன்று நிலைகளில் எடுத்த முயற்சியால் தன்னையும் அறிந்து கொண்டு விடுவதால் அடுத்த நான்காவது நிலையில் ப்ரம்மத்தை குறிந்த ஞானத்தை அடைகிறான். இந்த நான்கு நிலைகளில் பெறப்படும் ஞானத்தால் யோகி ஐந்தாவது நிலையில் தனக்கும் உலகிற்கும் உள்ள பற்றை துறக்கிறான். தன் பற்றறுத்து ஆத்ம ஞானத்தை அடைந்த யோகி பேதங்களற்ற நிலையில் தன்னையே துறக்கிறான். ஏழாவது நிலையில் உலக வாழ்வை கடந்தவனாக முக்தியடைந்தவனாகிறான்.


இதற்கு அனுசரணையாக ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தத்தில் வரும் ச்லோகம் ஒன்று இருக்கிறது


सत्सङ्गत्वे निस्सङ्गत्वं निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलितत्वं निश्चलितत्वे जीवन्मुक्तिः ॥


நல்லோரது உறவால் உண்மை உணரப்பட்டு பற்றறுபடுகிறது. பற்றறுத்ததனால் மாயையினால் உண்டாகும் மோகத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. மோகத்திலிருந்து விடுபட்டதனால் அமைதி கிடைக்கிறது. அமைதியிலிருந்து ஜீவன் முக்தி அடையப்படுகிறது.


https://bhakthi.wordpress.com/2007/12/page/4/
 
Status
Not open for further replies.
Back
Top