செய்தவம் மறந்தால் கைதவம் மாளும்

Status
Not open for further replies.

shridisai

You Are That!
செய்தவம் மறந்தால் கைதவம் மாளும்

.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள் 36:அறத்துப்பால், அறன்வலியுறுத்தல்
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம்
என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல்
அழியும் காலத்தில் அழியா துணையாகும் என்பது இக்குறளின்
பொது விளக்கமாகும்.
அன்றறிவாம் என்பதிர்க்கு பிற்காலம், அல்லது முதுமை என்று
பொருள் கொள்ளலாகாது. அருட்ப்ரகாச வள்ளலார் தம் திருவருட்பாவில்
இன்றுவருமோ,நாளைவருமோ, மற்றென்று வருமோ அறியேன்
என்று மானுட வாழ்க்கையில் முடிவு நெருங்கும் தருணத்தை
பற்றி பாடியுள்ளார்..

வள்ளுவர் அன்று என்று எடுத்துரைப்பது
மானுட வாழ்க்கையில் முடிவு என்று,என்று யாரும் அறிந்திராத
ஒன்று என இடித்துரைப்பதற்கே.

இளமையில் கல் என்பது அவ்வையின் வாக்கு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது
தமிழ் பழமொழி. எனவே அன்றறிவாம் என்னாது, இன்றே
இப்பொழுதே சான்றோர்கள் கூறியபடி அறஞ்செய்க என்கிறார்
வள்ளுவர்.
பொன்றுங்கால் பொன்றாத் துணை என்பதிர்கு
அதுவே (அறச் செயலே) உடல் அழியும் காலத்தில்
அழியா துணையாகும் என்ற விளக்கம் பொருந்தாது.
ஏனெனில் இவ் அறச்செயலுக்குரிய உடலே அழிந்து
போயின், பின் யாருக்கு துணையாய் நிற்க்கப்போகிறது
அதன் பயன்?
மாறாக,அறம் செய்ய விரும்பும் அவனின்
செய்தவம் மறந்தால் கைதவம் மாளும் ஆளும்
என்னும் அவ்வையின் வாக்குப்படி
பொன்றுங்கால் அறம் செய்யும் உடல் வலிமை
குன்றும்கால், செய்தவம் மறக்கும் சமயத்தில்,
பொன்றாத் துணையாக (விட்டுப் பிரியாமுடியாத துணையாக)
அதன் பயன் (அறத்தின் பயன்) கைதவமாக இருந்து
அவனையாளும் என்னும் பொருள்படவே வள்ளுவர் நமக்கு
இக்குறளை வழங்கியுள்ளார்.

Sairam
 
Status
Not open for further replies.
Back
Top