சூரிய கிரகணம், ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி!’- திருப்பதியில் டிச. 26, 31 தேதிகளில் தரிசன நேர விவரம்

சூரிய கிரகணம், ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி!’- திருப்பதியில் டிச. 26, 31 தேதிகளில் தரிசன நேர விவரம்

திருமலை திருப்பதியில் பனி படர்ந்த விடியற்காலை 3 மணிக்கு ஒலிபரப்பாகும் சுப்ரபாதம் மிகவும் விசேஷம். ஆனால், சுப்ரபாத சேவைக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களையே பாடுகின்றனர்.

1576906665249.png


திருமலை திருப்பதிக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பை அளிக்கும் உயரிய மரியாதையாக இது பார்க்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பூமிதேவியின் அம்சமாகப் பெண்ணாகப் பிறந்தவர்.
………………………..

வருகிற டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் காலை 8.08 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஏற்படுவதையொட்டி திருப்பதிக் கோயில் 13 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26-ம் தேதி பகல் 12 மணி வரை கோயிலின் நடை சாத்தப்படுகின்றது.
….


திருப்பதியில் ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இதையொட்டி கோயிலை சுத்திகரிக்கும்விதமாக 'கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி' டிசம்பர் 31-ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுவதால், அன்றையதினத்துக்குரிய ஆர்ஜித சேவைகள் யாவும் ரத்து செய்யப்படுகின்றது எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..

மேலும் படிக்க

நன்றி: vikatan.com
 
Last edited:
Back
Top