சுலப ஜோதிட. பாடம் மனிதனின் ஆயுள்.

Status
Not open for further replies.
சுலப ஜோதிட. பாடம் மனிதனின் ஆயுள்.

our_planets.jpg





அனைத்து கிரகங்களும், நன்றாக அமைந்திருந்தால், ஒரு மனிதனின் பூரண ஆயுள்-120 வருடங்களாகும். ஆயுளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1 அற்பஆயுள் :-1 முதல் 32 வயதுவரை. 2.மத்திம ஆயுள்:- 33 முதல் 60 வரை. 3 பூரணஆயுள்:-61 முதல்120 வயது வரை. இதை எப்படி தெறிந்துகொள்வது ?

லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, தசமாதிபதி- மூவரும் பலம் பெற்றிருந்தால், பூரண ஆயுள். இருவர் மற்றும், பலமாக இருந்தால், அதில் பாதி - 120/2= 60 வயது. ஒருவர் மட்டுமே பலம் பெற்றிருந்தால், அதிலும் பாதியாம்-அதாவது 60/2=30 வயது. ஒருகால், மூவருமே பலவீனமாகில், பால அரிஷ்டம், யௌவன அரிஷ்டம், அல்லது கெளமார அரிஷ்டம், முறையே, 1 முதல், 12 வயது வரை, 13 முதல், 20 வயது வரை அல்லது 21 முதல் 32 வயது வரை.
பொதுவாக 3, 8ம் வீடுகள் ஆயுளைக் குறிக்கும். இது தவிற, சனி ஆயுள் காரகனாவார். இவ்விரண்டு வீடுகளும், பலமாக இருந்து,அதன் அதிபதிகள், சுபர் பார்வையும் பெற்றால், நிச்சயமாக, நீண்ட ஆயுளைக் குறிக்கும். சனியும், 8ம் வீட்டோனும் கூடினால், நீண்ட ஆயுள். ஒருகால், இவை, சுபர் பார்வை பெற்றால், தீர்காயுள், என கூறமுடியும்.
லக்னத்திற்கு 8 மிடமும், அதற்கு 8 மிடமுமாகிய 3 மிடமும், ஆயுள் ஸ்தானமாகும் . ஆயுள் ஸ்தானத்திற்கு 12மிடம், விரய ஸ்தானமாகும். அதாவது ஆயுளுக்கு விரய ஸ்தானம்- இதை மாரக ஸ்தானமெனவும் கூறலாம். 8க்கு 12= 7 மிடம். 3க்கு 12= 2. . இதனால்தான், பல இடங்களில், 2, 7, மிடங்களை மாரக, ஸ்தானம், அசுப ஸ்தானம் என கூறுகிறோம்.
இதைப்போலவே மீதமுள்ள 11 பாவங்களுக்கும், 12 மிடம் , விரயம் ( அந்த பாவத்திற்கு ) , எனத் தெறிந்து கொள்ளவும். எந்த பாவாதிபதியும், 12ல் இருந்தால், அந்த பாவத்தின் பலன்கள், குறைந்தே காணப்படும்.



N Ramakrishnan Narayanan
 
சுலப ஜோதிடம். திருமணத்திற்கு ஜாதங்களைப்



rit-1-kaasi.jpg



பெண்ணிற்கு ஆணின் ஜாதகத்தைப் பொருத்துவதே வழி முறை. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்தே அனைத்து கணிப்புகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக கூறப்படுவது :-மனப் பொருத்தம் இருந்தால், ஜாதகப்பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஆயின், சகோத்திரம் கூடாது. பென்ணின் வயது ஆணின் வயதைவிட 3 முத
ல் 5 வருடங்களாவது, குறைவாக இருக்க வேண்டும். ஜாதகப் பொருத்தங்கள். நாடியை தவிர்த்து, 10.அவையாவன. 1. தினம் ( நட்சத்திரம் ) 2. கணம். 3. மஹேந்திரம். 4. ஸ்திரீ தீர்கம். 5. யோநி. 6.ராசி. 7ராசி அதிபதி. 8.வசியம். 9.ரஜ்ஜூ.10. வேதை. இவற்றில் குறைந்தது, ஐந்துபொருத்தங்கள் அவசியம்.அதில் தினமும்,ரஜ்ஜுவும்,மிகவும் ,முக்கியம் 7, 10, 19, 22டாவது நட்சத்திரங்கள் கூடாது. 27ஐ தவிர்ப்பது நல்லது,(பாதம் 4.) ஏக ராசியானால் , ஆணின் நட்சத்திரம், முன்னதாக இருக்க வேண்டும். ஏக நட்சத்திரமென்றால்,( உதாரணத்திற்கு )- மிருகசீர், ரோகிணி, சுவாதி போன்றவைகளை சேர்கக்கூடாது. சிர,கண்ட ரஜ்ஜூ ,அதிக கெடுபலன்கள் விளையும். சஷ்டாஷ்டக ( 6 , 8வது ) ராசிகளை, எந்த காரனம் கொண்டும் பொருத்த வேண்டாம். தம்பதிகளிடையே நிம்மதி குலையும், ஆயுள் முழுவதும், சண்டை சச்சரவுகள் நீடிக்கும், வியாதிகள் ஏற்படும். சப்தம ராசி ந்ன்கு பொருந்தும் ( தினம், ரஜ்ஜு பொருத்தங்கள் இருந்தால் ). எக்காரணம் கொண்டும் சம சப்தம லக்னங்களான:- கடக-மகர, சிம்ம—கும்ப, ஜாதங்களை பொருத்த வேண்டாம்- விவாக ரத்து ஏற்பட 80 அதிக வாய்ப்பு உண்டு.
சுத்த ஜாதகத்தை தோஷ ஜாதகத்துடன் பொருத்தக்கூடாது. 1. செவ்வா, 2. ஸர்ப்ப, 3. கால ஸர்ப்ப, 4, சுக்ர தோஷ , 5. செவ்வா தோஷ ஜாதகங்களை, ஜோதிடர் மட்டுமே பொருத்தவேண்டும். பெண்ணிற்கு ஆயில்யம், மூலம், விசாகம், கேட்டை எனில், குரு ,மற்றும், சுபர் நன்றாக அமைந்திருந்தால், கெடுதல் ஏற்படாது. அல்லது, மேற் கண்ட நக்ஷத்திரங்களை உடைய பெண்ணிற்கு முறையே, மாமியார், மானார், இளைய மைத்துனன், மூத்த மைத்துனன் இல்லாத குடும்பமாக பார்த்து , திருமணம் செய்ய்யலாம்.

????????



 
Status
Not open for further replies.
Back
Top