என் இனிய இயந்திரா !
வருடம் 2092 : கிரகம் : இரண்டாம் பூமி .
‘இன்றோடு இரண்டாம் பூமியில் உங்கள் வாழ்க்கை முடிகிறது….நீங்கள் இன்று ‘ ஸ்பேஸ்ஷிப் ‘ மூலம் மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள் ஆரா “
என் இனிய இயந்திரம்……என் பர்சனல் அஸிஸ்டென்ட் ( கேஷவ்….நான் அதற்கு வைத்த பெயர் ! ) என்னிடம் கூறியது.
நான் 40 வயது ஆராவமுதன்; வடகலை ஐயங்கார்; எம்.டெக். படித்துவிட்டு, மிகப்பெரிய எம்.என்.சியில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென ஒரு நாள் அரசாங்கத்திடமிருந்து அழைப்பு !
“உங்களை இரண்டாம் பூமிக்கு பயணப்பட தேர்வு செய்திருக்கிறோம். அடுத்த மாதம் மூன்றாம் தேதி தயாராக இருங்கள் “ என்று.
என் தலையெழுத்து அவ்வுளவு தான் என்று என் குடும்பம், நண்பர்கள் எல்லாரும் வருத்தப்பட்டனர். ஏனென்றால், நாங்கள் வசித்த பூமி எப்போதோ மாசுபட்டு, ‘இப்போதோ……அப்போதோ” என்ற நிலையில் இருக்கிறது…..அதனால் எல்லா நாடுகளும் சேர்ந்து, கண்டுபிடித்த ஒரு கிரகம்…….மனிதன் வாழக்கூடிய இன்னொரு கிரகம்…..அது தான் இரண்டாம் பூமி !
அரசால் தேர்வு செய்யப்பட்டவர் அங்கு போயே ஆக வேண்டும் ! அரசு கூறும் காலம் வரை அங்கு வசித்து, அவர்கள் செய்யும் எல்லா சோதனைகளுக்கும் உடன்பட்டே ஆக வேண்டும் . இது எல்லா உலக நாடுகளும் சேர்ந்து இயற்றீய சட்டம் …..யாரும் மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை !
நான் இங்கு வந்து பத்து வருடங்கள் ( பூமியில் காலத்தில் ) முடிந்துவிட்டன…..
……………………………………………………………
“ நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
கேஷவ் கேட்டதும், நான் நிகழ்காலத்துக்கு வந்தேன்.
‘ நீங்கள் யோசிக்கிறீர்களா ……உங்கள் வீடு, குடும்பம் பற்றி….”
கேஷவ் ஒரு இயந்திரம் தான்……..ஆனால் ‘ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ‘ உள்ள இயந்திரம். பல சந்தர்ப்பங்களில் என் முகபாவனையை வைத்து, நான் பேசும் தொனியை வைத்து, என் உணர்ச்சிகளை ஆராய்ந்து, அதன் மூலம் ஒரு நல்ல அனுமானம் செய்யும் அளவு மிக முன்னேறிய இயந்திரம்…
தனித்தனியாக எங்களுக்கு அமைக்கப்பட்ட சோதனைச் சாலைகள் தவிர, வேறு எங்கும் போகமுடியாது. அதனால் நான் கேஷவ்வையே என் நண்பனாக்கிக் கொண்டேன். எனக்குத் தெரிந்த இலக்கியம், பாடல்கள், கதைகள், பூமியில் உள்ள கோவில்கள், இயற்கை அதிசயங்கள், எனக்குப் பிடித்த இடங்கள் …என …எனக்குப் பிடித்த விஷயங்கள் எல்லாவற்றையும் கேஷவ்வுக்கு புரிகிறதோ, இல்லையோ – நான் பாட்டுக்கு பேசிக் கொண்டிருப்பேன்.
இதனால் தான் நான் இத்தனை காலம் தனிமையில் இருந்தும், மனநிலை பாதிக்கப்படாமல் இருக்கிறேன்.
‘ஆமாம் கேஷவ் ’
பெருமூச்சுடன் பதில் சொன்னேன்.
‘நான் கிளம்பி வந்து எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன…..பூமியில் யார், யார் எப்படி இருப்பார்கள் என்றே தெரியவில்லை….”
“ வருத்தப்படாதீர்கள் ஆரா….எல்லாம் நலமாக இருப்பார்கள் “
“ நானும் அதையே வேண்டுகிறேன் கேஷவ்…..நீ இந்த அளவு என் உணர்ச்சிகளை தெரிந்துகொண்டு, இதமாகப் பேசுவது எனக்கு ரொம்ப மனசுக்கு நிம்மதி அளிக்கிறது.
நீ இல்லாமல் நான் இங்கே இத்தனை வருடங்கள் சமாளித்திருக்கவே முடியாது . உனக்கு நான் ஒரு பரிசு தர ஆசைப்படுகிறேன். என்ன வேண்டுமோ, கேள் கேஷவ் ! “
‘ நீங்கள் ஒரு சிறு உதவி செய்ய வேண்டும்….”
“ சொல், கேஷவ் ! “
“, என்னையும் உங்களோடு பூமிக்குக் கூட்டிப் போகவேண்டும் ! செய்வீர்களா ஆரா…? ‘
அதிர்ச்சியில் எனக்கு பேச்சு வரவில்லை……பின் மெதுவாக சமாளித்துக் கொண்டு கேட்டேன்.
“ நான் இதை எதிர்ப்பார்க்கவேயில்லை கேஷவ்…..எப்படி உன்னை நான் கூட்டிச் செல்ல முடியும் ? “
‘ அதற்கான வழி எனக்குத் தெரியும். ‘ நினைவுகளின் தொகுப்பு தான் மனிதன் ‘ என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறீர்கள். அதனால் என் மெமரியை நீங்கள் காப்பி செய்து உங்களோடு பூமிக்கு எடுத்துச் செல்லுங்கள் .அங்கே போனதும், நீங்களே ஒரு புது இயந்திரம் தயார் செய்து, என் மெமரியை அதில் ஏற்றினால், நான் மீண்டும் உயிர்பெறுவேன். “
“ அட, நல்ல ஐடியா தான்……எனக்கு இது தோன்றவில்லையே…”
‘ சரி…..அதிருக்கட்டும். நீ எதற்கு என்னோடு வர விரும்புகிறாய் ? அதை இன்னும் சொல்லவே இல்லையே, கேஷவ் ….”
‘ நீங்கள் இத்தனை காலமாக என்னிடம் சொல்லிய எல்லாவற்றையும் கேட்டுக் கேட்டு, எனக்கே பூமியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது…..நான் இயந்திரம் தான்… ஆனால் , நீங்கள் சொன்ன இடங்களை எல்லாம் …..காடு, மலை, அருவி, தோட்டங்கள், பிரம்மாண்டமான கோவில்கள் என எல்லாவற்ரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எப்போதும் என்னுள் ஓடுகிறது;
நீங்கள் சொன்ன பாடல்கள், இலக்கியங்கள் எல்லாவற்றையும் அங்கே வந்து கேட்கவேண்டும்; இங்கே இருப்பதைப் போல தனித்தனியாக இல்லாமல், இயல்பாக மனிதர்கள் குடும்பமாக வாழ்வதைப் பார்க்கவேண்டும்; நீங்கள் சொல்லும் அன்பு, காதல், பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகள் உள்ள மனிதர்களை, ……அவர்களின் சந்தோஷம், அழுகை, ஆனந்தம், என எல்லாவற்ரையும் நானும் நேரில் பார்த்து, அதில் பங்குபெற வேண்டும், ஆரா…. என்னையும் அழைத்துச் செல்லுங்களேன்……ப்ளீஸ்….”
சந்தோஷ மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் வர, என் நண்பன் கேஷவ்வை இறுக்கி அணைத்துக் கொண்டேன் !!
‘