சிந்து சமவெளியில் பேய் முத்திரை
லண்டன் சுவாமிநாதன் (English translation of this article has been posted earler)
சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் போற்றப்படும் நாகரீக அகழ்வாரய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட பல வியப்பான, புதிரான, புரியாத முத்திரைகளில் ஒன்று பேய் முத்திரை. இதைத் தோண்டி எடுத்த மார்ஷல் என்பவர் இதையும் பதிவு செய்து வைத்திருக்கிறார். இதை ஆய்வாளர்கள் ‘டெவில்’ பேய் என்று குறித்துள்ளனர். இரண்டு பக்கம் உடைய இம்முத்திரையில் வால் உடன் கூடிய ஒரு சாத்தான் போன்ற ஒரு உருவமும் சில எழுத்துகளும் உள்ளன. இது பேயை ஓட்டுவதற்கான தாயத்தா அல்லது பேய்களை வழிபடும் தாயத்தா எனபது தெரியவில்லை.
எதற்கெடுத்தாலும் ஆரிய, திராவிட முத்திரை குத்தும் பகுத்தறிவுப் பகலவர்கள் இதுவரை இது ஆரியப் பேயா அல்லது திராவிடப் பேயா என்று தீர்மானித்து முத்திரை குத்தவில்லை. இது மட்டுமல்ல. ஆடு அல்லது மாடு போன்ற முகத்துடன் கையில் வில்லுடன் செல்லும் ஒரு உருவம், பாதிப் புலி, பாதிப் பெண் உருவம், புலிக்குப் பயந்து மரத்தின் மீது ஏறி அமர்ந்த உருவம், பெரிய ஆட்டுடன் பலி கொடுக்கும் முத்திரை, ஏழு நடனமாதர்கள் ஆடும் உருவம் போன்ற பல தெய்வங்கள் இருக்கின்றன.
சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாரும் படிக்கவில்லை. அவரவர் மனம் போல விளக்கம் அளித்து வருகின்றனர். நாளுக்கு நாள் ஆரிய திராவிட உளறல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த தெய்வ முத்திரைகளைப் பற்றி மட்டும் பலரும் ‘கப்சிப்’ என்று இருந்து விடுகின்றனர். உலகில் மூட நம்பிக்கை இல்லாத சமுதாயமே இல்லை. ஆனால் பகுத்தறிவு, பகுத்தறிவு என்று புலம்பும் சில தமிழர்களுக்கு இந்த உண்மையை ஜீரணிப்பது கொஞ்சம் கடினமே.
மார்ஷல் போன்றோர் சிந்து சமவெளி முத்திரைகளை எந்தெந்த அடுக்குகளில் எடுத்தோம் என்று எழுதி வைக்காததால் பல உண்மைகளை அறியமுடியவில்லை. அது மட்டுமல்ல. ஏற்கனவே மதத்தைப் பரப்ப வந்தவர்களும் நாட்டை ஆளவந்தவர்களும் கட்டிவிட்ட ஆரிய திராவிட வாதத்தை சிந்து சமவெளி ஆய்விலும் நுழைத்துவிட்டார்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்ற முது மொழிக்கேற்ப ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆரிய திராவிட சகதியில் சிக்கியதால் இன்றுவரை சிந்து சமவெளி பற்றிய உண்மைகள் வெளிப்படவில்லை.
இந்து மதத்தில் உள்ள முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் போதாது என்று எண்ணி மார்ஷல் போன்றோர் புதுக் கரடிகளையும் புகுத்திவிட்டனர். வேதத்தில் உள்ள உக்கிரமான ருத்திரன் வேறு, தமிழர்கள் போற்றும் சாந்தமான சிவன் வேறு. சிந்து சமவெளி சிவன் ப்ரோட்டோ சிவன்- அதாவது இந்த சிவனுக்கெல்லாம் மூல சிவன் என்று புதிய தெய்வம் ஒன்றைக் “கண்டுபிடித்து” ஏற்கனவே குழம்பிக் கிடக்கும் இந்துவை இன்னும் குழப்பினர்.
இதுவும் போதாது என்று தமிழ் முருகன் வேறு, ஆரிய ஸ்கந்தன் வேறு என்று மேலும் ஒரு புதுக் கரடியைக் கிளப்பி இந்துமதத்தை ஒழித்துகட்டும் வாதங்களையும் பரப்பி வருகின்றனர். தேவார மூவரும், திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரும், திருப்புகழ் அருணகிரிநாதரும், கந்தபுராண கச்சியப்ப சிவாச்சாரியரும் இதை எல்லாம் படித்தால் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்வார்கள். 2000+ சங்க இலக்கியப் பாடல்களிலும் 30000 சங்க இலக்கிய வரிகளிலும் இல்லாத ஆரிய திராவிடக் கடவுள்களை எல்லாம் இவர்கள ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காணலாம்.
சிந்து சமவெளியில் தோண்டி எடுக்கப்பட்ட ஒட்டக எலும்புக் கூடு எங்கிருந்து வந்தது? போன்ற விஷயங்களை கவனமாக மறைத்தும் மறந்தும் விடுவார்கள். ருக் வேதத்தின் காலம் கி.மு 1500. சிந்து சமவெளி நாக்ரீகத்தின் முடிவுக் காலம் கி.மு.1800. ஆகவே ஏதேனும் தடயம் கிடைத்தாலும் அது வேத கால இலக்கியங்களிலேயே கிடைக்க முடியும்.
தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன்
இது ஒரு புறம் இருக்க தமிழனின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் “ஆரியக் கடவுளான” இந்திரனையும் வருணனையும், விஷ்ணுவையும் தமிழர் கடவுள் என்று உறுதியாகக் கூறுகிறது. மேலும் தொல்காப்பியத்தை அரங்கேற்றியதே நாலு வேதத்திலும் கரைகண்ட அதங்கோட்டு ஆசான் என்றும் பாயிரம் கூறுகிறது. பலராமனின் பனைக்கொடி பற்றிவேறு தொல்காப்பியர் பேசுகிறார். ஆரிய திராவிட வாதக்காரர்களுக்கு இது எல்லாம் செமை அடி கொடுப்பது போல இருக்கிறது.
அது சரி, சிந்து சமவெளி முத்திரையில் காணப்படும் பேய் ஆரியப் பேயா? திராவிடப் பேயா என்று சிறிது பார்ப்போம். பேய் பிசாசுகள் இல்லாத இலக்கியம் உலகில் எம்மொழியிலும் இல்லை. அதர்வண வேதத்தில் பேயோட்டும் மந்திரங்கள் உண்டு. சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பேய் பிசாசுகள் உண்டு. இந்தியாவின் வட கோடியில் இருந்து தென் கோடி குமரி முனை வரை பேய்க் கதைகளும் பேய் பற்றிய நம்பிக்கைகளும் இருக்கின்றன.
உலகிலேயே நீண்ட இதிஹாசமான மஹாபரதத்தில் பேயின் கேள்வி என்ற பகுதியில் (யக்ஷப் பிரஸ்னம்) பேய் கேட்ட 130 கேள்விகளுக்கும் தர்மபுத்திரன் சரியான பதில் கூறவே இறந்து போன நாலு சகோதரர்களையும் பேய் உயிர்ப்பித்தது. இந்த 130 கேள்விகளுக்கான பதில்கள் சம்ஸ்கிருத மொழியில் இந்து மத தத்துவங்களை பழச் சாறு போல பிழிந்து கொடுக்கிறது. இதே போல சம்ஸ்கிருதத்தில் உள்ள விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளும் உலகப் பிரசித்தம். இந்த வேதாளம் , யக்ஷன் எல்லாம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. காடு மலை, மேடு பள்ளம், ஆறு குளம் மரம் செடி, கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகிய அனைத்திலும் உள்ள அணங்குகள் பற்றி சங்கத்தமிழ் நுல்கள் நிறையவே பேசுகின்றன.
போர்க்களத்தில் பேய்கள் அடிக்கும் கூத்துகளையும் கொட்டங்களையும் கலிங்கத்துப் பரணியும், காரைக்கால் அம்மையாரின் பாடல்களும் கூறும். சுடுகாட்டில் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று புற நானூறும் குறுந்தொகையும் பாடுகின்றன. ஆக பேய்கள் இல்லாத கலாசாரம் இல்லை. அணங்கு என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “உருவம் இல்லாத” என்று பொருள். (டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் எழுதிய முருகன் கட்டுரையில் காண்க)
திருவள்ளுவர் கூறிய பேய்க்கதை, ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன எழு ஜாடித் தங்கமும் நாவிதனும் என்ற பேய்க்கதையை நினைவுபடுத்துகிறது.
ஷேக்ஸ்பியரில் பேய்கள்
இந்தியக் கதைகளை அராபியர்கள் ‘காப்பி’ அடிக்க அது அராபிய இரவுக் கதைகள் மூலம் மேலை நாடுகளுக்கும் பரவின. ஷேக்ஸ்பியர், மாக்பெத், ஹாம்லெட் முதலிய நாடகங்களில் இறந்தவர்கள் பேயாக வரும் காட்சிகளைப் படைத்திருக்கிறார்.
Picture: please see No 14, a figure with bow (click on the picture to enlarge it)
வேடன் உருவம் முருகனா?
சிந்துவெளி முத்திரைகளில் வில்லுடன் தோன்றும் ஒரு வேடன் போன்ற உருவம் உள்ளது. இந்து மத நூல்களில் தக்ஷனுக்கு சிவன் ஆட்டுத்தலை வைத்த கதையை இது நினைவுபடுத்தும். புருஷா மிருகம், கிம்புருஷன், கின்னரர்கள், சரபேஸ்வரர், நந்திகேச்வரர், தேவியரால் கொல்லப்பட்ட மஹிஷாசுரன், சமண மத நூல்களில் வரும் கோமுக யக்ஷன் போன்றோருக்கு ஆட்டுத்தலையும் மாட்டுதலையும் உண்டு. முருகனுக்கு ஆடு வாகனம் உண்டு. முருகனின் கையில் வில்லுடன் தோன்றும் பல கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.சூரபத்மனை வில் போட்டு சம்ஹரிக்கும் காட்சி இன்றும் திருவண்ணாமலையில் நடக்கிறது. ஆக கையில் வில்லுடன் திரியும் வேடன் முருகனா?
வில்லுடம் முருகன் தோன்றும் தமிழ்நாட்டுக் கோவில்கள்: திருவேட்டக்குடி, திருகொள்ளிக்காடு, நெய்வேலி, திருச்சாய்க்காடு,திருவிடைகழி, வில்லுடையான்பட்டு,போளக்குறிச்சி, அனந்தமங்கலம், விளாநகர், திருமயிலாடி முதலிய கோவில்களில் வேல் முருகனுக்குப் பதில் வில் முருகன் இருக்கிறார்.
இந்திரனை ஏறு/காளை என்று 20 இடங்களில் ருக் வேதம் புகழ்கிறது இதைத் தொடர்ந்து தமிழர்களும் ஏறு என்ற சொல்லை பல சொற்களுடன் பயன்படுத்துகின்றனர்.
முருகன் தமிழ் சொல் அல்ல
டாக்டர் இரா நாகசாமி அவர்கள் தமிழ் சம்ஸ்கிருதம் ஆங்கிலம் மூன்றிலும் புலமை பெற்ற பேரறிஞர். ஆதாரமில்லாத எதையும் கூறமாட்டார். அவர் முருகன் என்ற சொல் ம்ருகயா (வேட்டைகாரன்) என்ற வடமொழிச் சொல்லில் இருந்து வதிருக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்துள்ளார். ஆனால் சிந்துவெளியில் பேய் வடிவில் இருப்பது முருகன் அல்ல என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஆக வில் வீரன் முருகனா என்பது ஆய்வுக்குரிய விஷயமே. (Dr R Nagaswamy’s article: “ Murukan-The origin of the word” from Tamil Arts Academy.org)
Please read my earlier posts:
1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai
2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty
3. Vishnu seal In Indus Valley
4. Indus Valley –New Approach required
5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods
Contact [email protected] or [email protected]
******************