• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சித்திரம் எழுப்பிய கவிதை

Status
Not open for further replies.

saidevo

Active member
சித்திரம் எழுப்பிய கவிதை

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

Vibram-FiveFingers-for-Kids.jpg


(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****
 
708331df31872f15c7702014bf63-grande.jpg


(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மண்ணின் வெடிப்புகள் மனதின் வெடிப்புகள் என்றவள் அறிவாளா?
கண்ணில் வரும்நீர் மண்ணில் விழுந்து பயிர்கள் செழிக்குமோ?
இயற்கையை வேண்டுதல் போல மனிதனை வேண்டுதல் எளிதோ?
இயற்கையை அழித்திடும் மனிதன் கடவுளா அன்றி அரக்கனா?

--ரமணி, 01/03/2013

*****
 
AthtA-thAthtA-400x187.png

(கலிவிருத்தம்)

ஆத்தாளின் பாம்படமோ அடகு வங்கியிலே
தாத்தாவும் பையனும் மதுபானக் கடையிலே
நேத்திருந்த நிலைமாறி நெறிமுறைகள் தடம்புரண்டு
சோத்துக்கே வழியின்றிச் சீரழியும் தினவாழ்வு.

--ரமணி, 02/03/2013

*****
 
girlpray.jpg


கலிவிருத்தம்

சின்னக் கரம்கூப்பிக் கண்ணை இமைக்காமல்
தன்னந் தனியாகத் தருவடியில் அமர்ந்தருளும்
விக்ன ராஜாவிடம் விடைவேண்டும் சின்னரோஜா
பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?

--ரமணி, 02/03/2013
 
C0025531-Human_baby_with_a_tail-SPL.jpg


05. வால்நரன்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
ஒருகோடி மனிதர் உலகில் இன்று
சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

*****
 
06. வெண்மையில் பெண்மயில்

img-white-peacock-bnATyam.png

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****
 
img-gaNapati-child-500x341.jpg

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG1...BrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013
 
img-boyandcow-400x263.png

08. பசுவும் கன்றும்!

image link:
MediaFire - Space for your documents, photos, video, and music.

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!

--ரமணி, 19/03/2013

*****
 
"நோக்குமே மாடு" -- affirmative and so நெருடல்.
"நோக்குதோ மாடு" -- wonderment and so may be appropriate. Just a suggestion.

Cheers.
 
You have a point Raju, thank you. Since the first statement பார்க்கிறதோ suggests wonderment, I wrote it as affirmative for the second. Perhaps your suggestion adds value, thank you.

"நோக்குமே மாடு" -- affirmative and so நெருடல்.
"நோக்குதோ மாடு" -- wonderment and so may be appropriate. Just a suggestion.

Cheers.
 
00hindu-baby-01.jpg

09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

--ரமணி, 05/04/2013

*****
 
img-EduExp.jpg

10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

--ரமணி, 25/04/2013

*****
 
no-hands-boy-utensils-wash-up-motivational-and-inspirational.jpg


11. இறைவன் இருப்பில் ஐயம்

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
இறைவனும் உள்ளானோ இங்கு?

--ரமணி, 07/06/2013

*****
 
You have a point Raju, thank you. Since the first statement பார்க்கிறதோ suggests wonderment, I wrote it as affirmative for the second. Perhaps your suggestion adds value, thank you.
அருமை அருமை சிறப்பான விளக்கம்
 
mother-in-exam-hall-with-baby-child-india-inspirational-motivational.jpg


12. சின்னக் குழந்தை சமர்த்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
அன்னையவள் தேர்வெழுத ஆர்வமுடன் நெஞ்சுறைந்து
கன்னற் கருவிழியால் கூர்ந்ததை நோக்கியே
மின்னற் கொடிபோலப் பொன்னின் நிறம்காட்டும்
சின்னக் குழந்தை சமர்த்து.

--ரமணி, 07/06/2013

*****
 
Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

13. யோகாசன யுவதியர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆகாவென் றெழுந்ததுபார் பாரத யுவதியர்
யோகாசனப் பயிற்சிகள் அற்புதமாய் இங்கே!
சக்ராசன யுவதியின் உந்திமேல் பத்மாசனம்
உக்கிரமாய்ச் செய்யும் உல்லாச யுவதி!

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

*****
 
00ramaNi-chithtira kavi-14.jpg

14. இலையோ செய்தி!?

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
இலைகளா லான இனிய கணேசர்!
இலையினில் செய்தி இயற்கையைப் போற்று!
கலைவண்ணம் கல்லிலே காண்பது போல
இலைகளில் காண்ப(து) இனிதோ எளிதோ
அலையலை யான வியப்பு.

--ரமணி, 14/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/10/ganesh-ji-made-by-leaf-of-tree-art.jpg
http://www.myindiapictures.com/pictures/up1/2012/04/leaf-art-amazing.jpg

*****
 
tree-on-head-funny.jpg


15. மண்டையில் வளர்ந்த மரம்!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

*****
 
desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg


16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...del-and-funny-modeling-fashion-show-india.jpg

*****
 
poor-and-rich-cartoon-jokes.jpg


17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/poor-and-rich-cartoon-jokes.jpg

*****
 
dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi.jpg


18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...eigners-are-not-allowed-funny-india-hindi.jpg

*****
 
girls-weight-without-makeup-and-with-makeup-funny.jpg


19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...ight-without-makeup-and-with-makeup-funny.jpg
00ramaNi-chithtira kavi-18

*****
 
00ramaNi-chithtira kavi-20.jpg

20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113


image:
https://santhavasantham.googlegroup...00100041293317_1131177301_n.jpg?view=1&part=4

*****
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top