• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசிய

Status
Not open for further replies.
சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசிய

karana-sahasra 2.jpg

Picture: Sahasralinga in Karnataka, India

(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).

இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.

கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்-- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.

இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.

இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.

கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.

sahasralinga 2.jpg

கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.

சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.

கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.

கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.

வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்

வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.

இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.

ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.

ஆயிரம் ஏன்?

யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.

************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top