• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பத&

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பத&

சமூக வலைதளங்களில் இ - மெயிலில் கருத்து பதிவு செய்தால் கைது இல்லை: கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தில்லை என மத்திய அரசு விளக்கம்

Tamil_News_large_1141317.jpg


புதுடில்லி: 'தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 - ஏ பிரிவு, உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி, இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் போன்றவற்றில், ஒருவர் தெரிவிக்கும் கருத்து, பதிவு செய்யும் விஷயங்கள், ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன. அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள், அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும், தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ -யின்படி, கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். 'இவ்வாறு கைது செய்யப்படுவது, அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், மத்திய அரசு, நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.

நீதிபதிகள் செலமேஸ்வரர், எஸ்.ஏ.போப்டே ஆகியோரை கொண்ட அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு தரப்பு வாதத்தை எடுத்து வைத்து, மேலும் கூறியதாவது: சமூக வலைதளங்களில், தகவல் தொடர்பு சாதனங்களில், தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு, அரசியல் எதிர்ப்பு, விமர்சனங்கள் வந்தன என்பதற்காக, அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ, தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம். உதாரணமாக, 'டுவிட்டர்' வலைதளத்தில், 'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருங்கள்' என, வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான், தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும். சில சமயங்களில், நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில், சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி, வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more at: No arrest for comment in social media | ???? ???????????? ? - ???????? ??????? ????? ???????? ???? ?????: ??????? ???????????????? ?????????? ?? ?????? ???? ???????? Dinamalar
 
Status
Not open for further replies.
Back
Top