சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் நெய்யபிஷே&#2965

Status
Not open for further replies.
சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் நெய்யபிஷே&#2965

சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் நெய்யபிஷேகம் !

பிப்ரவரி 13,2015




சபரிமலை: மாசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. ஐந்து நாட்கள் நெய்யபிஷேகம் நடைபெறும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை, 5:30 மணிக்கு திறந்தது


TN_39826_105817982.jpg


தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18-ம் படி வழியாகச் சென்று ஆழி குண்டத்தில் மேல்சாந்தி நெருப்பு வளர்த்தார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இரவு, 10:00மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 5:30 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும், 11:30 மணி வரை அபிஷேகம் நடைபெறும். வரும், 17ம் தேதி வரை, தினமும் நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.

இந்த நாட்களில் உதயாஸ்தமன பூஜை, களப பூஜை மற்றும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும்.மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்த போது 18ம் படியேற சன்னிதானம் முன் திரண்ட பக்தர்கள்.


Temple news | News | Dinamalar temple | ??????? ??? ???????? 5 ??????? ???????????? !
 
Status
Not open for further replies.
Back
Top