• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!

Status
Not open for further replies.
சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!

சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!

சந்திரபாபு... தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

chandra babu.jpg




கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!


பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட.... கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!


கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா. தபேலா தாழு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!


சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.


காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!


சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!



மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸீக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!



J P C babu.jpg



1947ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
 
சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!

முதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!


View attachment 1648

புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!


ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!


சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.



எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி. ஆர்.'
என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான் சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலை படவும் இல்லை!


'புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்க்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு' என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!


ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு


View attachment 1649


'குங்குமப் பூவே கொஞ்சம் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா'ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
 
Last edited:
சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!


எஸ். எஸ் வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார்.
'நான் தீக் குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!



aas.jpg

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரிபடத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!



எழுந்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு', ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!



ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!



நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல', அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!



மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம்லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்' என்றவர்!

aaaaaa.jpg

'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபுஎன்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும் போது, 'ஓ ஜீசஸ்! என்று சொல்லியபடிதான் நுழைவார்!




ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட., உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ.... உற்சாகமானபொழுது அது!




'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!
 
சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!

நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் 'தேடித் தேடிப் பழகிய வந்தாலும் கூட 'எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!


'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!


'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!


சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.




கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.

அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது.



மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.


நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.)




1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.





சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.


 
சந்தோசத் தமிழன் திரு. J p சந்திரபாபு.... !!!


சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், பறக்கும் பாவை என்னும் படத்தில் சுகமெதிலே இதயத்திலா என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, சபாஷ் மீனா திரைப்படத்தில் ஆசைக்கிளியே கோபமா என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.




தாம் நடிக்காவிடினும் பெண் என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த எஸ்.பாலசந்தருக்காக கல்யாணம் வேணும் வாழ்வில் என்னும் பாடலைப் பாடினார். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படத்தில், 'ஜாலி லைஃப்" என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!



எம்.ஜி.ஆரை வைத்து "மாடி வீட்டு ஏழை" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.




[h=2]பாடி நடித்த பாடல்கள் தொகுப்பு : [/h]


  • ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )

  • விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )

  • கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )

  • கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )

  • புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )

  • பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )

  • ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )

  • ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )

  • எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )

  • என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )

  • சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )

  • ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )

  • ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )

  • குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )

  • தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )

  • தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )

  • சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )

  • நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

  • சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )

  • அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )

  • சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )

  • நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )

  • மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )

  • பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன் )

நன்றி : விக்கி, விகடன், ஹிந்து,லக்ஷ்மன் சுருதி, கூகுள் வலைப்பூக்கள்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top