சந்தியா வந்தனத்தின் போது "அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ" என்று ஏன் விஷ்ணுவின் பெயர் மட்டும் கூறப்படுகிறது?

நித்ய கர்மாவென்னும் சந்தியா வந்தனத்தின் போது "அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ" என்று சொல்வதில் ஏன் விஷ்ணுவின் பெயர் மட்டும் கூறப்படுகிறது? சிவனை வழிபடுபவர்களும் இவ்வாறே சொல்வதுண்டு. பேதம் பார்ப்பதற்காக இதைக் கேட்கவில்லை. இந்த நெடுநாளைய சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்.
பி.கு: பெரிய கடவுள் விஷ்ணுவா சிவனா என்ற ரீதியில் பதிலை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. மிக மிக நன்றி.
 
இறைவன் பெயர்கள் இறை தன்மை ஒட்டி உள்ளது.

அச்யுத என்றால் மாற்ற முடியாதவர் என்றும் அநந்த என்றால் அந்தம் முடிவு இல்லாதவர் என்றும் கோவிந்தா என்றால் பசுக்களை காப்பவர் எனவும் கொள்ளலாம்.

பெயர் வேறு இருந்தாலும் பரமன் ஒருவனே. அது விஷ்ணுவாகவும் கொள்ளலாம் அல்லது சிவனாகவும் கொள்ளலாம்.
 
நித்ய கர்மாவென்னும் சந்தியா வந்தனத்தின் போது "அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ" என்று சொல்வதில் ஏன் விஷ்ணுவின் பெயர் மட்டும் கூறப்படுகிறது? சிவனை வழிபடுபவர்களும் இவ்வாறே சொல்வதுண்டு. பேதம் பார்ப்பதற்காக இதைக் கேட்கவில்லை. இந்த நெடுநாளைய சந்தேகத்தைத் தீர்க்க வேண்டுகிறேன்.
பி.கு: பெரிய கடவுள் விஷ்ணுவா சிவனா என்ற ரீதியில் பதிலை நிச்சயம் எதிர்பார்க்கவில்Vi

To my limited knowledge I feel
ஆக்கல் ப்ரஹ்மா
அழித்தல் சிவன்

காத்தல் விஷ்னு வழுகின்ற காலத்தில் கடனை அடைக்கிறோம். எனவே
விஷ்னுவை குறிப்விடலாம்.

இதை தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை ஆனால் படிப்பவர் எல்லோர் மன நிலையும்
நம் எண்ணம் போல் இருக்காது
 
பொதுவாக நம் சாத்திரங்களும் வேதங்களும் இறைவனை சைவ வைணவ பேதப்படுத்திப் பார்க்கவில்லை அவை அனைத்தும் "பரப்ரும்மம்" என்ற ஒரு சொல்லினாலேயேதான் குறிப்பிடப்பட்டன. அங்கு குறிப்பிடப்பட்ட அனத்து சொற்களும் உயர்ந்தவன், எங்கும் வியாபித்திருப்பவன், ஆதியந்தம் இல்லாதவன் என்றே குறிப்பிட்டன பின்னாளில் அவை விஷ்ணுவைக் குறிப்பதாக, சிவனைக் குறிப்பதாக என்றெல்லாம் அவரவர் விரும்பிய வண்ணம் ஏற்றுக் கொள்ளப்பட்டன சைவர்களில் "அத்வைதிகள்" என்போருக்கு பேதமில்லாத பரம்பொருள் ஒன்றே என்ற காரணத்தால் அவை எந்தக் கடவுளைக் குறிப்பிட்டாலும், அது சிவனா, விஷ்ணுவா எனப் பொருட்படுத்தாமல் எல்லா இறை வடிவத்தையும் வணங்கும் மனப்பக்குவத்தைக் கொடுத்தது. மேலும் காத்தல் கடவுள் விஷ்ணு, அழித்தல் கடவுள் சிவன் என்றும் சிலர் கொண்டதால் இயல்பாகவே, காப்பவரான விஷ்ணுவை எல்லோரும் போற்ற ஆரம்பித்தனர் நம் சமய ஆச்சாரியர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர் அவ்வளவே நீங்கள் எந்தப் பெயர் சொல்லி வேண்டினாலும் இறுதியாக அவை பரம்பொருளாலேயே நிறைவேற்றப்படுகிறது
 
Back
Top