• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்

Status
Not open for further replies.
சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்

சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள் பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் மற்றும் இந்த இடங்களில் இருக்கும் பொருட்கள் தொடர்பான மதம் மற்றும் மரபுவழி விலக்கங்கள். இவ்வாறு விலக்கத்தக்க நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரிடமிருந்து விலகி நிற்பது என்பதை தீட்டு என்கிறார்கள்.


தீட்டு, துடக்கு, குற்றம்,ஆசௌசம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும்

பங்காளிகள்

ஒரு இந்து ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், இந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். ஆதி மூலமான ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் ஆதி மூலமான ஒரு ஆணையும் சேர்த்து ஏழு தலைமுறைகள் வருகின்றது. இந்த ஏழு தலைமுறைகளுக்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் அல்லது இறப்பினாலும் அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
சுப காரியங்கள் தவிர்க்க வேண்டிய காலம்

பஞ்சாங்கங்கள் ஒருவர் இறந்தபின் தவிர்க்க வேண்டிய சுப காரியங்கள் பற்றி சில பரிந்துரைகளை அளிக்கின்றன. இறந்தவர் மற்றும் குறிப்பிட்டவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள உறவுமுறைகள் தான் தவிர்க்க வேண்டிய சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கணக்கில் பரிந்துரைக்கின்றன.


[TABLE="class: wikitable"]
[TR]
[TH]எண்[/TH]
[TH]உறவு[/TH]
[TH]தீட்டு காலம் (வருடம் - மாதங்களில்)[/TH]
[/TR]
[TR]
[TD]1[/TD]
[TD]ஒருவரின்
தாய் இறந்தால்[/TD]
[TD]ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு[/TD]
[/TR]
[TR]
[TD]2[/TD]
[TD]ஒருவரின்
தந்தை இறந்தால்[/TD]
[TD]ஒரு வருடம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு[/TD]
[/TR]
[TR]
[TD]3[/TD]
[TD]ஒருவரின்
மனைவி இறந்தால்[/TD]
[TD]மூன்று மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு[/TD]
[/TR]
[TR]
[TD]4[/TD]
[TD]ஒருவரின்
சகோதரன் இறந்தால்[/TD]
[TD]ஒன்றரை மாதங்கள்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு[/TD]
[/TR]
[TR]
[TD]5[/TD]
[TD]ஒருவரின்
ப்ங்காளிகள் (தாயாதிகள்) இறந்தால்[/TD]
[TD]ஒரு மாதம்
சுப காரியம் செய்ய, கோவில் செல்ல விலக்கு[/TD]
[/TR]
[/TABLE]
நட்சத்திர தோஷம் (அடைப்பு)

ஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும் தோஷம் உண்டு. அவிட்டம் (தனிஷ்டா) முதல் ரேவதி வரையிலான ஐந்து நட்சத்திரங்கள் தனிஷ்டா பஞ்சமி என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு அடைப்பு (வீடு மூடப்பட்ட வேண்டும்) என்கிறார்கள். இது தவிர கார்த்திகைக்கு ஆறு மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து மாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு மூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்களும் அடைப்பாகும்.
[TABLE="class: wikitable"]
[TR]
[TH]
எண்[/TH]
[TH]நட்சத்திரம்[/TH]
[TH]அடைப்பு காலம் (மாதங்களில்)[/TH]
[TH]எண்[/TH]
[TH]நட்சத்திரம்[/TH]
[TH]அடைப்பு காலம் (மாதங்களில்)[/TH]
[/TR]
[TR]
[TD]1[/TD]
[TD]கார்த்திகை[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[TD]8[/TD]
[TD]விசாகம்[/TD]
[TD]மூன்று மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]2[/TD]
[TD]ரோகிணி[/TD]
[TD]ஐந்து மாதங்கள்[/TD]
[TD]9[/TD]
[TD]உத்திராடம்[/TD]
[TD]மூன்று மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]3[/TD]
[TD]மிருகசீரிஷம்[/TD]
[TD]இரண்டு மாதங்கள்[/TD]
[TD]10[/TD]
[TD]அவிட்டம்[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]4[/TD]
[TD]புனர்பூசம்[/TD]
[TD]மூன்று மாதங்கள்[/TD]
[TD]11[/TD]
[TD]சதயம்[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]5[/TD]
[TD]மகம்[/TD]
[TD]ஐந்து மாதங்கள்[/TD]
[TD]12[/TD]
[TD]பூரட்டாதி[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]6[/TD]
[TD]உத்திரம்[/TD]
[TD]மூன்று மாதங்கள்[/TD]
[TD]13[/TD]
[TD]உத்திரட்டாதி[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[/TR]
[TR]
[TD]7[/TD]
[TD]சித்திரை[/TD]
[TD]இரண்டு மாதங்கள்[/TD]
[TD]14[/TD]
[TD]ரேவதி[/TD]
[TD]ஆறு மாதங்கள்[/TD]
[/TR]
[/TABLE]
வர்ண அடிப்படையில் தீட்டு

இரத்த உறவுகள் இறப்பின் அதற்குரிய தீட்டு பிராமணர்களுக்குப் பத்து நாட்களும் சத்திரியர்களுக்குப் பன்னிரண்டு நாட்களும் வைரியருக்குப் பதினைந்து நாட்களும் சூத்திரருக்கு முப்பது நாட்களுமாகும்[SUP][1][/SUP]
நிகழ்வுகளும் தீட்டுக்களும்

மரண வீட்டுக்கு அல்லது நிகழ்வில் கலந்து கொண்டால் உடுத்திருந்த உடையுடன் தலைக்கு முழுகினால் தீட்டு நீங்கும்.


??????????? ?????? ???????????? - ????? ??????????????
 
Yes, jaijai Sir, Many of us do not know the many matters regarding Theetu, this thread gives some useful information about it.

Thanks jaijai Sir
 
Status
Not open for further replies.
Back
Top