கௌரி விரதங்கள்.

kgopalan

Active member
-சாந்திரமான மாதம்.-பக்ஷம்--திதி--தேதி-- கெளரிவ்ருதம்

சைத்ரம்.---சுக்ல---ப்ரதமை --- 7-4-27. ஸம்வத்ஸர கௌரி விரதம்.

-சைத்ரம்----சுக்ல---த்ருதியை---9-4-27. ஸெளபாகிய கௌரி விரதம்

---வைசாக-----சுக்ல---சதுர்த்தி----21-04-2026 லாவண்ய கௌரி விரதம்.



---ஜ்யேஷ்டா---சுக்ல--த்விதியை--16-6-26. புன்னாக

---ஜ்யேஷ்டா-- சுக்ல---சதுர்த்தி-- 18-6-26. கதலி



--ஆஷாடம்-- சுக்ல --- பஞ்சமி--18-7-26. சமீ



--சிராவண--- சுக்ல------த்ருதியை--15-8-26. ஸ்வர்ண

-பாத்ரபத--சுக்ல--த்ருதியை--12-9-26. விபதாரா/ஹரிதாளி



--பாத்ரபத----சுக்ல-----சதுர்தசி--14-9-26.விபத்தார/ஹரி

-பாத்ரபத----க்ருஷ்ண---- த்ருதியை--29-9-26. ப்ரஹதீ

-பாத்ரபத---கிருஷ்ண---அமாவாசை10-10-26. மாஷா



ஆஶ்வயுஜ---சுக்ல--தசமி--21-10-26. தசரத லளித

-ஆஶ்வயுஜ—க்ருஷ்ண--த்ருதியை--28-10-26.சந்த்ரோதய

-ஆஶ்வயுஜ----க்ருஷ்ண--அமாவாசை--9-11-26.கேதார





கார்த்தீக---சுக்ல---த்ருதியை--12-11-26. த்ரிலோசனஜீரக

கார்த்தீக---சுக்ல---பெளர்ணமி--24-11-26. கார்த்தீக



மார்கசீர்ஷ-- சுக்ல--த்விதியை--10-12-26. திந்த்ரிணி



மார்கசீர்ஷ---சுக்ல--சதுர்த்தி ---13-12-26. பதரீ



பெளஷ-- கிருஷ்ண--தசமி-- 31-01-2027 த்ரைலோகிய கௌரி விரதம்.

கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.



ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்



ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.



குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.





அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.



ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.















கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.



சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.

விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.



அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்

தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்.

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில்.

ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அல்லது கெடுதலான இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷத்தை கொடுக்கும். இதனால் காலத்தில் திருமணம் நடக்காது.



அல்லது திருமணம் ஆனவர்களிடம், ஒற்றுமையின்மை , கருத்து வேறுபாடு, தம்பதிகள் பிறிவு ஏற்படும். இந்த குறைகள் நீங்க இந்த கெளரீ பூஜை தக்க பரிஹாரமாகும்.நோய்கள் நீங்கும், ஆரோக்யம் ஏற்படும்.. ஒற்றுமை ஏற்படும்.



ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி: 07-04-2027

இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.



ஸெளபாக்கிய கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ த்ருதீயை திதி ; இதை செய்வதனால் படிப்புக்குகந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும்.09-04-2027;

வைசாக மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி 20-04-2026 வார்த்தா கெளரி வ்ரதம்.

இதை செய்வதால் தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.



புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி 16-06-2026. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும்

.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.
 
Back
Top