கோவிலில் செய்ய கூடாத சிலவற்றைப் பற்றியத் தகவல்கள்

1.கோவிலில் தூங்க கூடாது..

2. தலையில் துணி, தொப்பி அணியகூடாது..

3. கொடிமரம், நந்தி, பலிபீடம் இவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது.

4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது ) வணங்கக் கூடாது.

5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.

6. குளிக்காமல் கோவிலுக்குள் போகக்கூடாது.

7. கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக்கூடாது.

8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..

9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.

10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.

11. படிகளில் உட்கார கூடாது.

12. சிவ பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.

13. வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்குத் தரக்கூடாது.

14. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.

15. கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது.

16. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது.

17. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

18. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

19. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

21. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
 
hi

nice words....many new things to learn......elders used to teach youngesters....now a days....many systems are

vanishing......these lines are very helpful....thanks a lot
 

Similar threads

Back
Top