கேன்சர் .................உணவே மருந்து

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
கேன்சர் .................உணவே மருந்து


I would like to share an email received from one of my friends:

கேன்சர் .................உணவே மருந்து
[h=3]கேன்சர் கேன்சர் கேன்சர்[/h]
கடந்த ஐந்து வருட காலமாக என் காதில் மாதம் ஒருத்தருக்காவது கேன்சர் இருக்கு என்பது காதில் விழுந்து கொண்டே இருக்கு, அதில் சில பேர் சரியான சிகிச்சை, உணவு கட்டுபாடு, தொடர்ந்து கொடுத்த மாத்திரைகளை சரியாக உட்கொண்டு வருவதால் நன்றாக தேறி இருக்கிறார்கள். ஆனால் சில பேர் ( லிவர் மற்றும் தொண்டையில் கேன்சர் வந்தவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளனர்

நான் நேரில் கண்ட கேள்வி பட்ட , எனக்கு தெரிந்த கேன்சர் பற்றிய விஷயங்களை எல்லோருக்கும் தெரிய படுத்தனும் என்ற் நோக்குடன். இருந்தேன் அதை யாரும் படித்த மாதிரி தெரியல, கேன்சர் என்னும் கொடிய நோயாலா எங்க வீட்டிலேயே அவதி பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆகையால் அதை பற்றியே எழுதி விட்டேன்.

இன்னும் பல சொந்தஙக்ள், மற்றும் தோழமைகள் வீட்டிலும், இப்படி இந்த ஐந்து வருடத்தில் எனக்கு 25 பேருக்கு மேல் வந்துள்ளது. இன்னும் உலகத்தில் பல பேருக்கு இருக்கும்

இது பெண்களுக்கு தொண்டை, லிவர்,கர்ப்ப பை , மார்பக புற்றுநோயும்)வந்துள்ளது. (ஆண்களுக்கு குடல், பிரெயின், நாக்கு, லிவர் ,பிளட் கேன்சர் போன்றும் வந்துள்ளது.) (ஆண்களுக்கு, தொடர்ந்து சிக்ரேட் பிடிப்பதாலும், என்னோரமும் பான் பீடா போடுவதாலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பேச்சுலர்களுக்கு சாப்பாடு பிரச்சனையாலும் ,சாப்பாடு ஒத்துக்காமல் வாய் புண் அல்சர் பிறகு அதே கேன்சராகவும் மாறி இருக்கு


வாய் புண் மற்றும் அல்சர் வராமல் ஓரளவுக்கு பாதுக்காக்கும் டிப்ஸை பிற்கு போடுகிறேன். . இதற்கான உணவு முறைகள் சிலவற்றை பின்பு போடுகிறேன்.இப்போது பெருகிவரும் நோயில் இப்போது சாதரண ஜுரம் தலைவலி போல் புற்று நோயும் அதிகரித்து கொண்டே இருக்கு முன்பு இதற்கு மருந்தில்லை என்ற காலம் போய் இப்போது அதை கை தேர்ந்த டாக்டர்கள் குணபடுத்தவும் செய்கிறார்கள்.

பெண்கள் இருக்கிற அவசர உலகில் வேலை வேலை என குழந்தைகளையும், கணவரையும் , பெரியவர்களையும் கவனிக்கும் பிஸியில் தங்கள் உடல் நலத்தை சற்றும் கவனிப்பதில்லை நேரத்துக்கும் உணவும் உட்கொள்வதில்லை.இதனால் பிற்காலத்தில் உடல்நலம் இயலாமல் போவதை பற்றி சற்றும் நினைப்பதில்லை.


1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும் உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.


2.
அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன் படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.


3.
அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால் கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான் என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.


4.
அடுத்து புது துணிவாங்கும் போது கண்டிப்பாக கவணம் தேவை. வேவ்வேறு நாட்டில் இருந்து தயாரித்து வருகிறது, அதில் பல பேர்களிம் கை பட்டு தான் வந்து சேரும் அதனால் பல வியாதியை தரும் கிருமிகள் தொற்றி இருக்கும்.. இனி ஒரு முறை வீட்டில் அலசி அயர்ன் செய்து விட்டு போட்டு கொள்ளுங்கள்.


5 .
பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும்.பெண்கள் உள்ளாடைகளை வெண்ணீரில் அலசுங்கள். இப்படி செய்வதால் கிருமிகள் அழியும்.உள்ளாடைகளை 6 மாதத்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கு.கர்ப்ப பையில் கேன்சர் வந்தால் அது கிட்னி லிவரையும் பாதிக்கும்.
6. ஆண்கள் பான் பீடா போடுவதை தவிர்க்கவும். என்னேரும் பான் பீடா போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் க‌ண்ட‌து அந்த‌ ந‌ப‌ர் இப்போது உயிரோடு இல்லை.


7. எந்த‌ வியாதியும் த‌லைவ‌லியோ ம‌ற்ற‌வ‌லியோ தொட‌ர்ந்து ஒரு மாதத்திலிருந்து முன்று மாத‌ம் ஆறு மாத‌ம் என்று விடாம‌ல் வ‌ந்தால் உட‌னே முறையாக‌ டிரீட்மெண்ட் எடுக்க‌வும். நீங்களாக வீட்டு வைத்தியம் எடுக்க வேண்டாம்.


8. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர் 1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது


9. ஒரு 45 வ‌ய‌து பெண்ணிற்கு வாயில் புண்ணு இர‌ண்டு வ‌ருட‌மா இருந்திருக்கு அது வ‌லிக்க‌வும் இல்லையாம் க‌டைசியில் போய் காண்பிக்க‌ போன‌ அது கேன்ச‌ர் , லாஸ்ட் ஸ்டேஜ் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது என்று சொல்லிவிட்டார்க‌ள், இன்னும் அதிக‌மாகி பிற‌கு சாப்பிட‌ முழுங்க‌ முடியாம‌ல் இர‌ண்டு மாதமாக‌ அவ‌தி ப‌ட்டு அவ‌ர் இறைய‌டி சேர்ந்துவிட்டார்.

10. பெண்கள் எல்லோரும் 35., 40 வயதை கடக்கும் போது கண்டிப்பாக எண்டோஸ்கோபி டெஸ்டும், மேமோகிராம் டெஸ்டும் எடுத்து கொள்ளவேண்டும். நோய் இருக்கோ இல்லையோ ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜென‌ர‌ல் செக்க‌ப் செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.


எல்லாத்துக்கும் நம் உணவு முறை தான் காரணம் . சரியான உணவு முறையை எடுத்துக்கொண்டாலே நல்லது
உணவே மருந்து.

Source: Srirangachari Ji

http://samaiyalattakaasam.blogspot.in/2011/02/blog-post_19.html

 
Status
Not open for further replies.
Back
Top