குழந்தை பாக்கியம் தரும் சவுமிய தாமோதர பெ

Status
Not open for further replies.
குழந்தை பாக்கியம் தரும் சவுமிய தாமோதர பெ

குழந்தை பாக்கியம் தரும் சவுமிய தாமோதர பெருமாள் கோவில்

cd32c325-e0d7-4c4b-99ad-1bcab409686b_S_secvpf.gif




சென்னை வில்லிவாக்கத்தில் புகழ் பெற்ற அருள்மிகு சவுமிய தாமோதர பெருமாள் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த தலம் கண்ணனின் அவதார தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கண்ணன் குழந்தையாக இருந்தபோது, நிறைய குறும்பு செய்ததால், அவனை தாய் யசோதா ஒரு உரலில் கயிற்றால் கட்டிப் போட்டாள் என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

அந்த உரலையும் இழுத்து கொண்டு கண்ணன் சென்றான். இதனால் கண்ணனின் இடுப்பில் தழும்பு ஏற்பட்டது. இதுவே பெருமாளுக்கு தாமோதரன் என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று. "தாமம்'' என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு என்று அர்த்தம். அதாவது தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று அர்த்தமாகும்.

இதனால்தான் பகவான் கிருஷ்ணரின் 12 பெயர்களில் ஒரு பெயராக தாமோதரன் பெயர் உள்ளது. கிருஷ்ணருக்கு கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மது சூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷி கேசன், பத்மநாபன் ஆகிய பெயர்களுடன் 12-வது பெயராக தாமோதரன் உள்ளது. வில்லிவாக்கம் தலத்தில் உள்ள தாமோதரன் மிகவும் அழகாக இருப்பார்.

இதனால் பெருமாளுக்கு சவுமிய தாமோதர பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. ஆதி காலத்தில் இந்த தலம் உள்ள இடம் வில்வாரண்யம் என்றழைக்கப்பட்டது. அது வில்லிவாக்கமாக மாறியது எப்படி தெரியுமாப சப்தரிஷிகளில் அத்ரி மகரிஷியும் ஒருவர். இவர் சூரனின் தங்கை அஜமுகியை திருமணம் செய்தார்.

அவர்களுக்கு வில்லவன், வாதாபி என்ற 2 மகன்கள் பிறந்தனர். மகன்கள் இருவரையும் பெரிய ரிஷிகளாக்க வேண்டும் என்று அத்ரி மகரிஷி ஆசைப்பட்டார். ஆனால் அவரது மனைவி அஜமுகி, அவர்கள் இருவரையும் அசுரர்கள் பாதைக்கு திருப் பினாள். இதனால் கோபம் அடைந்த அத்ரி மகரிஷி குடும்பத்தை பிரிந்து சென்றார்.

இது அஜமுகிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எல்லா ரிஷிகளையும் கொல்லுமாறு அவள் தன் மகன்களிடம் கூறினாள். அதை ஏற்று வில்லவன், வாதாபி இருவரும் நூதன முறையில் ரிஷிகளை கொன்றனர். வாதாபியை ஏதாவது ஒரு உணவு பொருளாக மாற்றி ரிஷிகளுக்கு வில்லவன் சாப்பிட கொடுப்பான்.

அதை ரிஷி சாப்பிட்டதும், "வாதாபி வெளியே வா'' என்று வில்லவன் அழைப்பான். மறு நிமிடம் ரிஷியின் வயிற்றை கிழித்துக் கொண்டு வாதாபி வெளியில் வருவான். வில்லவன், வாதாபியின் இந்த அட்டகாசம் பற்றி ரிஷிகள் சிவனிடம் முறையிட்டனர். அந்த சமயத்தில் தான் பூமியை சமப்படுத்துவதற்காக அகத்தியரை தென்திசை நோக்கி சிவபெருமான் அனுப்பி இருந்தார்.

அவர் அகத்தியரிடம் இரு அசுரர்களையும் சம்ஹாரம் செய்யும்படி கூறினார். அதை ஏற்று இந்த பகுதிக்கு அகத்தியர் வந்தார். அவரை கொல்வதற்காக வாதாபியை ஒரு மாம்பழம் ஆக்கி அகத்தியரிடம் வில்ல வன் சாப்பிட கொடுத் தான். அகத்தியரும் அந்த மாம் பழத்தை தின்று வாதாபியை வயிற்றுக்குள் ஜீரணமாக்கி விட்டார்.

இதை அறியாத வில்லவன், வாதாபி வெளியில் வா என்றான். ஆனால் வாதாபி வெளியில் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த வில்லவன் அகத்தியரை கொல்ல முயன்றான். அப்போது சிவன், விஷ்ணு துணை கொண்டு, முருகன் அளித்த அருகம்புல்லை அஸ்திரமாகக் கொண்டு வில்லவனை கொன்றார்.

இதனால் இந்த பகுதி கொன்னூர் என்றும், சம்ஹாரபுரி என்றும் அழைக்கப்பட்டது. இதற்கிடையே அசுரர்கள் இருவரும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எங்கள் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். இதனால் வில்லவனில் உள்ள முதல் இரண்டு எழுத்தானவில் மற்றும் வாதாபியில் உள்ள முதல் எழுத்தான வா கொண்டு இத்தலம் வில்வா என்று கூறப்பட்டது.

அது வில்வாரண்யமாகி பிறகு மருவி வில்லிவாக்கம் ஆகியது. வில்லவன், வாதாபியை சம்ஹாரம் செய்ததால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டார். சிவனும், விஷ்ணுவும் தனக்கு காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படி சிவன் அகத்தி சுவரராகவும், விஷ்ணு சவுமிய தாமோதர பெருமாளாகவும் காட்சியளித்து ஆசீர்வதித்தனர்.

அப்போது அகத்தியர், எனக்கு அருளியது போல பக்தர்களுக்கும் இருவரும் எழுந்தருளி சேவை சாதிக்க வேண்டும் என்றார். அதன் நிமித்தமாக சிவபெருமான் அகத்தீசுவரராகவும், விஷ்ணு தாமோதர பெருமாளாகவும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். இதில் சவுமிய தாமோதர பெருமாள் ஆலயம் வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ளது.

3 நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடத்தை காணலாம். கருவறையில் சவுமிய தாமோதர பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் இருக்கிறாள். மகாலட்சுமியின் அம்சமான இவள் பாற்கடலில் தோன்றியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் விழாக்களின் போது பெருமாளுக்குத்தான் மோகினி அலங்காரம் செய்வார்கள். ஆனால் இத்தலத்தில் தை மாதம் உற்சவத்தின் போது 4-வது நாள் தாயாருக்கு மோகினி அலங்காரம் செய்கிறார்கள்.

தை மாதம் நான்கு வெள்ளிக்கிழமைகளும் தாயார் நந்தவனத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெறும். ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர் தனி தனி சன்னதியில் உள்ளனர். ஒரே ஒரு பிரகாரத்துடன் உள்ள இத்தலத்தில் ஆழ்வார்களுக்கும் தனி தனி சன்னதி அமைத்து வருகிறார்கள்.

ஆனால் அருகில் உள்ள தீர்த்த குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அங்கு உழவாரப் பணி நடந்த போதும், அந்த குளத்தை பலரும் தவறாக பயன்படுத்துகிறார்கள். அது தடுக்கப்பட்டு விட்டால் அகத்தியர் ஏற்படுத்திய அந்த அமிர்த புஷ்கரணியின் மாண்பு காக்கப்பட்டு விடும். வைகானசப்படி பூஜை நடந்து வரும் இத்தலம் மிகச் சிறந்த குழந்தை பேறு தலமாக திகழ்கிறது.

"ஓம் தாமோதராய வித்ம ஹே, ருக்மணி வல்ல பாய தீமஹி, தந்தோ கிருஷ்ண பிரசோதயாத்'' எனும் தாமோதர காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை தோறும் 108 தடவை சொல்லி, தாமோதர பெருமாளுக்கு பால் நைவேத்தியம் படைத்து வணங்கி அதை பக்தர்களுக்கு கொடுத்து வந்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.

முதல் வாரம் மட்டும் இந்த மந்திரத்தை கோவிலில் வைத்து ஜெபித்து விட்டு பிறகு தினமும் இதை வீட்டில் சொல்லி வந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். அதுவும் அந்த குழந்தையை தன்னைப் போலவே புத்திக் கூர்மையுடனும், நல்ல குணத்துடனும் தாமோதர பெருமாள் திகழ வைப்பார் என்று கோவில் நிர்வாகத் தினர் தெரிவித்தனர்.

இத்தலத்தில் புதன்கிழமை பெருமாளை வணங்கினால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 3 நேரமும் தீபம் ஏற்றி வழி பட்டால் சுமூகமான குடும்ப சூழல் உருவாகுமாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் 5 வாரம் புதன் கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து அர்ச்சனை செய்து, கோவிலை 5 முறை சுற்றி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

உத்திர நட்சத்திர நாள் புதன்கிழமை வரும் தினத்தன்று வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 5, 14, 23 எண்காரர்கள் இத்தலத்தில் வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். வெள்ளிக்கிழமை உத்திர நட்சத்திரம் வரும் நாட்களில் சகஸ்ர நாமம், அஷ்டோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் படைத்து வழிபட்டால் நீங்கள் நினைத்ததை எல்லாம் சவுமிய தாமோதர பெருமாள் நிச்சயம் தருவார்.

இத்தலத்தில் வைகாசியில் பிரமோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, மாசி மகம் தெப்பத் திரு விழா, பங்குனி உத்திர திருக் கல்யாணம் ஆகியவை சீரும் சிறப்புமாக நடத்தப்படுகிறது.

??????? ????????? ????? ?????? ?????? ???????? ?????? || perumal temple history
 
Dear PJ Sir,

I was wondering, how come having lived in Chennai for so many years, I did not know the story behind Villivakkam...I enjoy this portion..Please share more such temples associated with mythological stories
 
Status
Not open for further replies.
Back
Top