• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"


'நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்... -கணவர்.

''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும். பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''-மனைவி

மே 06,2017,தினமலர்.-தேடி வந்த மாப்பிள்ளை-திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிப் பெரியவரைத் தரிசித்து, சென்னை திரும்பிய அந்த ஓவியர், வீடு வந்தார். சாய்வு நாய்காலியில் சோர்வோடு அமர்ந்தார். அவர் மனைவி ஆவலோடு கேட்டாள்:

'பெரியவாளை தரிசனம் செஞ்சேளா?

28 வயசாகியும் நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூடி வரலியேங்கற கவலையைச் சொன்னேளா? பொருளாதார பிரச்னை தான் நம்ம பெண் கல்யாணத்தைத் தாமதப் படுத்தறதுன்னு தெளிவாச் சொல்லச் சொன்னேனே? பெரியவர் ஆசீர்வாதம் பண்ணினாப் போதும். நம்ம பெண் கல்யாணம் வெகுசீக்கிரம் நடந்துடும்.''

மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் அமைதி காத்தார். அவருக்குச் சம்பளம் குறைவு. அன்றாடச் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கல்யாணத்திற்குப் பணம் சேர்ப்பது எப்படி?

மாப்பிள்ளை வீட்டார் கேட்கிற வரதட்சணையைப் பார்த்தால் மனம் மலைக்கிறது. வரதட்சணை வாங்கக் கூடாது என்று பெரியவர் ஓயாமல் சொன்னாலும் யார் கேட்கிறார்கள்?

ஓவியர் பெருமூச்சுடன், ''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன். வாய்திறந்து சொல்லத்தான் நெனச்சேன். அதுக்குள்ள பின்னாலிருந்து நகரச் சொல்லி நெருக்கினர். குங்குமப் பிரசாதத்தை வாங்கிண்டு வந்துட்டேன்...

இப்படி ஆயிடுத்தேன்னு மனசு கலங்கறது.' மனைவி தன்னைக் கோபித்துக் கொள்ளப் போகிறாள் என்று அவர் நினைத்தார். ஆனால் மனைவியின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது.

''எதுக்கு வாய்விட்டுச் சொல்லணும்? மனசில நெனச்சுண்டாலே போதும். பகவான்னா அவர்! பகவான் நம்ம கிட்டப் பேசறாரோ? ஆனால் நாம மனசுல வேண்டிண்டா நம்ம பிரார்த்தனையை நிறைவேத்தறார் இல்லையா? அது மாதிரிதான். சீக்கிரமே நல்லது நடக்கும்.''

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டினர். ஓவியரின் மனைவி கதவைத் திறந்தார். கணவனும் மனைவியுமாக இருவர் வீட்டினுள் நுழைந்தார்கள்.

வந்தவர்கள், ''நாங்க இதே வீதில குடிவந்து ஆறுமாசம் ஆச்சு. எங்க பையன் தினமும் உங்க பெண் போறப்போ வறப்போ பாத்திருக்கான். அவளோட அடக்கம் அவனைக் கவர்ந்திருக்கு. நீங்க சம்மதிச்சா உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான். அவன் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உறுதியா இருக்கான். கல்யாணத்தை எங்க செலவிலேயே நடத்துவோம். அவன் கிட்ட எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நிறையச் சம்பாதிக்கிறான். தான் நெனச்ச மாதிரிப் பெண் தனக்கு மனைவியா அமைஞ்சா, அவன் நம்பற ஒரே தெய்வமான பெரியவர் கிட்ட, தம்பதி சமேதரா ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னு மட்டும் சொல்றான்...'' அவர் பேசிக்கொண்டே போனார்.

ஓவியரின் மனைவி அளவற்ற மகிழ்ச்சியோடு தன் கணவரைப் பார்த்தாள். அவர் விழிகளில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

*ஏழு தலைமுறை"*

*பாவங்களைப் போக்கும் பச்சரிசி.*

ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு ;

*சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.*

அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.

இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும்.

இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.
இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .

(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்..

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

பெரியவா சரணம் !!

""உங்கள் காது நோய் குணமாகிவிட்டது. ஆபரேஷன் தேவையில்லை.”"

1978 ஏப்ரல் 13-ஆம் தேதி. மறுநாள் தமிழ் வருஷப் பிறப்பு. அன்றைய தினம் விடியற்காலையிலேயே பெரியவாளை தரிசித்துவிட வேண்டும் என்று உத்வேகம். முதல்நாளே தேனம்பாக்கம் சென்று, கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டோம். முதலில் கண் விழிப்பவர், மற்றவர்களை எழுப்பிவிட வேண்டும் என்று ஒப்பந்தம்.

காலை மணி மூன்று முப்பது.
மின்சாரம் பாய்ந்தது போல் உடலில் ஓர் ஓட்டம்.

சட்டென்று கண்விழித்து எழுந்தோம்.

எதிரே, மஹாஸ்வாமிகள்! விபூதி, ருத்ராட்சம்.. மங்கிய விளக்கொளியில் காஷாயம் பளபளக்கிறது. யாருக்கும், பக்கத்தில் இருப்பவர் யார் என்று தெரியவில்லை; கண்ணில் படவில்லை. ஒரே ஒருவரை, அருட்புன்னகையுடன் நிற்கும் பரமேஸ்வரனை மட்டுமே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹரிக்கேன் விளக்கொளி வழிகாட்ட, பெரியவாள் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார்கள். முந்தைய இரவு அவ்வளவு பேசிய அவர், இப்போது மௌனம். நாற்பது பேர் பின் தொடர்ந்து சென்றோம்.

வரதராஜர் கோயில் தெற்கு வாசல் வந்ததும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே, நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்தோம். வரும் வழியில் சாலையின் நடுவில், சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தது. “பெரியவா எப்படிக் கடந்து செல்வார்கள்?” என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, பெரியவாள் ஒரே தாண்டாகத் தாண்டி சென்றார்கள்! (அனுமான் அம்சமும் இருக்குமோ?)

பிறகு தேனம்பாக்கம் திரும்பினோம். காமாட்சியை தரிசித்துவிட்டு, ஊர் திரும்பினோம். அந்த ஆண்டு முழுவதும், எனக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம்தான்.

1985-ஆம் ஆண்டு எனக்குக் காதில் வலி ஏற்பட்டு, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படாமல் போய், பெரிய ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

பெரியவாளை தரிசனம் செய்யாமல், எப்படி ஆபரேஷனுக்குச் சம்மதிக்க முடியும்?

எண்கணிதத்தின்படி, என் பகை எண், ஏழு.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க ஏழு ஆரஞ்சுப் பழங்களும் வில்வமாலையும் வாங்கிச் சென்றேன். பிற்பகல் இரண்டு மணி. பெரியவாள் மேனாவில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். பொதுப்படையாகச் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, ஆரஞ்சுப் பழங்களை உரித்து உரித்து வைத்தார்கள். (என் தீவினைகளைத் தோலுரித்து விட்டார்கள் என்பதைப் பின்னால் புரிந்து கொண்டேன்).

ஆபரேஷனுக்கு முதல் நாள் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் என்னை நன்றாகப் பரிசோதித்தார்.

“உண்மையைச் சொல்லுங்கள். நான் கொடுத்த மருந்துகளைத் தவிர, வேறு எந்த மருந்துகளை உபயோகப்படுத்தினீர்கள்? வேறு எந்த டாக்டரிடம் போனீர்கள்?” என்று கேட்டார்.

“நான் வேறு எந்த டாக்டரிடமும் போகவில்லை; எந்த மருந்தும் போடவில்லை”.

“பயப்படாமல் சொல்லுங்கள். அந்த டாக்டர் கொடுத்த மருந்துகள் ரொம்ப effective-ஆக இருக்கின்றன. நான் அதைத் தெரிந்து கொண்டால், மற்றவர்களுக்கும் எழுதிக் கொடுப்பேனில்லையா?”

“டாக்டர்! உண்மையைத்தான் சொல்கிறேன். இரண்டு நாள் முன்னர் காஞ்சிபுரம் சென்று மஹாஸ்வாமிகளைத் தரிசித்து, பிரார்த்தித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.”

டாக்டரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“உங்கள் காது நோய் குணமாகிவிட்டது. ஆபரேஷன் தேவையில்லை.”

வீட்டுக்கு வந்ததும், மனைவி – குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

பெரியவா சரணம் !!

"கடவுளின் குரல்" - தொகுப்பு: ஆர். என். ஆர்

09 /10 /2019 குமுதம் இதழிலிருந்து...

""பிரதோஷ பூஜைக்கு உதவிய மகாபெரியவா!""

ஒரு பிரதோஷ நாள். தற்செயலாக கிராமத்து சிவாலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர்.

அங்கே நந்திக்கும் ஈசனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகங்கள் தொடங்கின. பால், தயிர், சந்தானம், தேன், இளநீர் என்று அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார், பரமாசார்யார். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அர்ச்சனை செய்து கொண்டிருந்த குருக்கள், ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

அவரது பார்வை, அபிஷேகத்துக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையே துழாவித் துருவிப் பார்த்தது. ஏதோ ஒரு பொருளை அவர் தேடுவதும், அது அங்கே இல்லை என்பதும் அவரது செய்கையைப் பார்க்கும்போதே புரிந்தது. மகாபெரியவர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே... என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிக்க, பக்தர்களோ என்ன பிரச்னை என்று புரியாமல் பார்க்க, வதனத்தில் புன்னகை தவழ அமைதியாக நின்றிருந்தார், மகான்.

அந்த சமயத்தில் மிகச் சரியாக உள்ளே வந்த பக்தர் ஒருவர், மகான் இருப்பதையோ பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருப்பதையோ எதையும் கவனிக்காமல் வேகவேகமாக அர்ச்சகர் முன்னால் சென்று நின்றார்.

"மன்னிக்கணும்...பூஜையெல்லாம் தொடங்கறதுக்கு முன்னாலயே வந்து இந்த அபிஷேக திரவியத்தை தரணும்னு நினைச்சேன். வண்டி கிடைச்சு வர்றதுக்கு நேரமாகிடுச்சு....அபிஷேகமெல்லாம் முடிஞ்சிடுச்சா...இதை சேர்த்துக்க முடியுமா?" பரபரப்பாகக் கேட்டார்.

"என்ன அது?" என்பது போல அர்ச்சகரின் பார்வை உயர.."நெல்லிப்பொடி (காய்ந்த நெல்லிக்காய்த்தூள்) பிரதோஷ அபிஷேகத்துக்குத் தந்தால் நல்லதுன்னு சொன்னாங்க..அதனால கொண்டு வந்தேன்..!"

கையில் இருந்த பொட்டலத்தை அர்ச்சகர் முன் நீட்டினார், அந்த பக்தர். நெல்லிப்பொடி என்று அவர் சொன்னதுதான் தாமதம், அர்ச்சகரின் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது.

இதுதான்....இதைத்தான் தேடினேன்..என்பது போல அவசர அவசரமாக அதை வாங்கியவர், சட்டென்று பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த நெல்லிப்பொடியை சிவலிங்கத் திருமேனியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினார். அப்படியே சிவலிங்கத் திருமேனி முழுவதுமாக நெல்லிப்பொடியால் நிறைந்தது. ஆர்த்தி காட்டினார் அர்ச்சகர்.

அபிஷேகத்துக்கான பொருட்களை எடுத்து வைத்த போது நெல்லிப் பொடியை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே..மகான் முன்னிலையில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யாமல் விட்டால் அது பெரும் குறையாகி விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருந்தது.

அபிஷேகங்கள், அலங்காரம் எல்லாம் முடிந்து, ஆர்த்தி காட்டினார், அர்ச்சகர். மகாபெரியவரிடம் பிரசாதங்களை கோயில் முறைப்படி கொடுத்தார்.

குறுநகை தவழ அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் மகாபெரியவர்.

மகான் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஏதோ நினைவு வந்தவராய், சரியான சமயத்தில் நெல்லிப்பொடி கொண்டு வந்த பக்தர் பெயரால் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்ய நினைத்து, அவரைத் தேடினார், அர்ச்சகர்.

ஊஹூம்..எங்கேயும் காணோம். அவர் ஈசனுக்கு ஆராதனை செய்தபோது நந்திக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், "என்ன நெல்லிப்பொடி கொண்டு வந்தவரைத் தேடறீங்களா? அவர் அப்பவே புறப்பட்டுவிட்டார். நீங்க அர்ச்சனை செய்யறதுக்காக தேடினா, சந்திரசேகரன், அனுஷ நட்சத்திரம்னு சொல்லச் சொன்னார்.!"

அதைக் கேட்டதும் அர்ச்சகருக்கு உடல் சிலிர்த்தது..."இது மகாபெரியவரோட பெயர், நட்சத்திரம் ஆச்சே...அப்படியானால் அதைக் கொண்டுவந்தவர்....?" அவர் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை சொல்லவும் வேண்டுமா என்ன?

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"குருவே சரணம்"

மகாபெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

செப்டம்பர் 29,2015, DINAMALAR-- ANMEEGAM SECTION

தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது, காஞ்சி பெரியவர் மிகுந்த கருணை கொள்வார். உதாரணத்துக்கு இரண்டு சம்பவங்கள்...!

ஒருநாள் பிரதோஷம்... சென்னையில் இருந்து ஒரு பக்தர் கூடைகள் நிறைய விதவிதமான பூக்களுடன் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பெரியவர் பிரதோஷ வேளையில் பூஜை செய்வார். அந்த பூஜைக்கு இந்தப் பூக்கள் பயன்படும் என்பது பக்தரின் ஆசை. ஆனால், மடத்திற்கு வந்ததும் அந்தப் பூக்களை பூஜைக்கு பயன்படுத்த முடியாது என சொல்லி விட்டார்கள். காரணம், பூக்களை நூல் கொண்டு கட்டியிருந்தது தான். நார் கொண்டு கட்டிய பூக்களை மட்டுமே சுவாமி பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அந்த பக்தர் மிகுந்த வருத்தமடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்தும், பூக்கள் பூஜைக்கு பயன்படாமல் போயிற்றே என்று...!
பூஜை முடிந்து பெரியவர் வெளியே வந்தார். பூக்கூடைகளைப் பார்த்தார். விஷயத்தை தெரிந்து கொண்டார்.
"எவ்வளவோ ஆசையாய் இந்த பூக்களை கொண்டு வந்திருக்கிறார். சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''
என்றவர் அமர்ந்தார்.

பெரியவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பக்தருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. கிட்டத்தட்ட புஷ்பாங்கி சாத்தியது போல பெரியவர் ஜொலித்தார். கூடியிருந்த எல்லா பக்தர்கள் முகத்திலும் ஆனந்த வெள்ளம்..

இப்படி ஒரு காட்சியைப் பார்க்க கொடுத்து வைக்க வேண்டுமே!

ஒருவர் மகாபெரியவரை "இவர் திருப்பதி வெங்கடாஜலபதி' என்றார். இன்னொருவர் திருச்செந்தூர் முருகன்' போல் காட்சி தருகிறார் என்றார். மற்றொருவர் இல்லை...இல்லை... இவர் தான் "காஞ்சி காமாட்சி' என்றார்.

இன்னொருவர் "தட்சிணாமூர்த்தி' என்றார். ஒவ்வொருவர் பார்வையிலும், அவரவர் இஷ்ட தெய்வமாய் தெரிந்தார் பெரியவர்.

இன்னொரு இனிய சம்பவம்.

மீரட்டில் இருந்து ஒரு ராணுவ அதிகாரி பெரியவரை தரிசிக்க வந்தார். சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்து சேர்வதற்குள், பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்ட தகவல் கிடைத்தது. அன்றே மீரட் திரும்ப அவர் டிக்கெட் புக் செய்திருந்ததால், ரயிலின் நேரம் கருதி பெரியவரை தரிசிக்காமலேயே சென்னை வந்து ரயில் ஏறி விட்டார். ரயில் போபாலை அடைந்து விட்டது.

ஒரு இடத்தில் கலவரம் என்பதால் அதற்கு மேல் ரயில் போகாது எனவும், சென்னை திரும்பப் போவதாகவும் அறிவித்து விட்டனர்.

அதிகாரி அந்த ரயிலிலேயே சென்னை வந்து விட்டார். காஞ்சிபுரம் சென்றார். பெரியவரின் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் மீரட் திரும்பினார்.
எந்தச் சூழலிலும் பெரியவர் தன் பக்தர்களை கைவிட்டதே இல்லை.இன்றும் வாழும் தெய்வமாய் அனைவருக்கும் ஆசியளித்துக் கொண்டிருக்கிறார்.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
காஞ்சிப்பெரியவரைத்தரிசிக்கதிருவண்ணாமலை யில் இருந்து ஒரு புரோகிதர் மாதம் தவறாமல் வந்து விடுவார். ஒருமுறை அவர் பெரியவரைத் தரிசிக்க வரிசையில் காத்து நின்றார். அப்போது பெரியவர் தன் சீடரை அழைத்து, “அந்த திருவண்ணா மலை புரோகிதரை வெளியே போகச் சொல்,” என்றார்.சீடருக்கு காரணம் புரியவில்லை. அவர் தகவலை புரோகிதரிடம் சொல்ல அதிர்ந்து போன அவர், தயங்கியபடியே வெளியேறி, ஆனால் மடத்து வாசலில் நின்று கொண்டே இருந்தார். விஷயம் பெரியவர் கவனத்துக்கு வரவே சீடரை அழைத்து, “அவன் ஊரிலிருந்து கிளம்பும்போது, ஒரு வீட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்து விட்டதாகக் கூறினர். காரியங்கள் செய்வதற்கு அழைத்தனர். அவனோ அதைச் செய்யாமல் மறுத்து விட்டு மடத்துக்கு போவதாக சொல்லி வந்து விட்டான். அவனை உடனே ஊருக்குப் போய் அந்தக் காரியங்களை உரிய நாட்களுக்குள் முடித்துக் கொடுத்து, ‘சுபநிகழ்வு’ முடிந்த பின் தரிசனத்துக்கு வர வேண்டும் என சொல்லி விடு,” என்றார்.இதை சீடர் அவரிடம் போய் சொல்லவே, ஊரில் நடந்த விஷயம் இந்த மகானுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியப் பட்டார் புரோகிதர். பெரியவரின் உத்தரவுப்படி ஊருக்குப் போய், நடந்ததை அவர்களிடம் சொல்லி, அந்த குடும்பத்திற்கு தேவையானதை செய்து முடித்த பிறகு ஒருநாள் மடத்துக்கு வந்தார்.அவரை அழைத்தபெரியவர், “சுபகாரியங்களைக் கூட நீ மறுக்கலாம். ஆனால் இதுபோன்ற துக்க நிகழ்வு களுக்கு வரமாட்டேன் என புரோகிதரான நீ மறுக்கக்கூடாது. மேலும் இந்நிகழ்வுகளுக்கு சம்பாவனையும் (பணம்)கேட்கக்கூடாது. அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கி யதிலும் ஒரு பகுதியை சிவன் கோவிலில் தீபம் ஏற்றும்செலவுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான்நீபடித்தவேதங்களுக்கு மரியாதை,” என அறிவுரை கூறி பிரசாதம் கொடுத்து அனுப்பி
வைத்தார்.புரோகிதர்கள் இனி துக்க நிகழ்வுகளை மறுக்கமாட்டீர்கள் தானே!
Source: ஜூன் 08,2016,தினமலர்
 
"குருவே சரணம்"

முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும் என்று வைத்துக்கொள்வோமே!
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.
பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்
கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவாள் கேட்டார்கள்:

“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?”

“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”

“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…”

“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”

“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”
“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”

“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”

“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?”

“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”

“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?”

“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”

“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தயே…நடக்கிறதா?"

“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருĪந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள& அப்போது பார்த்தது.., கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?
பாட்டி சொன்னாள்,

“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”
பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருநதவர்களை யெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்!

“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…?
ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”

மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?
கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"குருவே சரணம்"

முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும் என்று வைத்துக்கொள்வோமே!
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.
பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்
கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவாள் கேட்டார்கள்:

“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?”

“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”

“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…”

“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”

“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”
“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”

“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”

“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?”

“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”

“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?”

“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”

“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தயே…நடக்கிறதா?"

“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருĪந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள& அப்போது பார்த்தது.., கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?
பாட்டி சொன்னாள்,

“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”
பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருநதவர்களை யெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்!

“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…?
ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”

மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?
கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி "

"பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? ""

ஸ்ரீ மஹா பெரியவா யாரோடும் அதிகம் பேசாமல் ஜாடை மாடையாக இருந்த சமயம். எனது மாமியார் ஜெயலஷ்மி ( பொள்ளாச்சி ஜெயம் என்று ஸ்ரீ மடத்தில் அழைக்க பட்டவர் ) பெரியவா தரிசனத்திற்கு சென்று இருந்தார்கள் . நமஸ்கரித்து விட்டு சற்று ஒதுங்கி நின்று கொண்டு இருந்தார் .அப்போது பெரியவா கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த ஸ்ரீ மடம் பாலு (பிற் காலத்தில் பாலு ஸ்வாமிகள் ஆகி சமீபத்தில் சித்தி ஆனவர்.)
“ஜெயம் நீ பெரியவா பாதுகையே வாங்கிக்கவில்லையே நீ பெரியவாளிடம் கேள் . நிச்சியம் உனக்கு கொடுப்பார் என்று சொன்னார் .
உடனே அம்மா நான் போய் கேட்க மாட்டேன் . அவராக கொடுத்தால் கொடுக்கட்டும்” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார் தீவிர பக்தியோடு பிடிவாதமும் பெரியவாளிடம் ஸ்வாதீனமும் உடையவர் எங்கள் அம்மா.

சிறிது நேரம் கழித்து பெரியவா இருந்த இடத்திற்கு அம்மா வந்தாள். இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. மஹா பெரியவா அர்த்த புஷ்டி உடன் கைங்கரியம் பாலுவை பார்க்க , அவர் உடனே உள்ளே சென்று ஒரு ஜோடி பாதுகையை கொண்டு வந்து பெரியவா முன் வைத்தார். பெரியவா அந்த கால கட்டத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தரிசனம் கொடுப்பது வழக்கம். ஸ்ரீ பாலு கொண்டு வந்த பாதுகையை பெரியவா தன் பாதங்களில் மாட்டி கொண்டார்.

சிறிது நேரம் கழித்து பாலு மாமா பெரியவா பாதத்தில் இருந்து கழட்ட முயற்சி செய்தபோது பெரியவா அனுமதிக்க வில்லை .கால்களை உள்ளே இழுத்துக்கொண்டார்கள். இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் , கூட வே இருந்த தொண்டர் முயற்சித்த போதும் அனுமதிக்கவில்லை . ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பெரியவா பாதத்தை அந்த பாதுகை அலங்கரித்து கொண்டிருந்தது.

மஹா பெரியவாளுடன் பல ஆண்டுகள் இருந்ததால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பாலு மாமா போன்றவர்கள் ஊகிக்க கூடியவர்களாகவே இருந்தார்கள்.
பாலு மாமா அம்மாவிடம் வந்து
“ஜெயம் பாதுகை உனக்கு தான் . எங்களை கழட்ட விடவில்லை பெரியவா. நீயே போய் கழட்டி கொள்” என்றார்.

அம்மா நடுங்கி போய் விட்டாள்.

“ஐயய்யோ நான் மாட்டேன்” என்று சொல்லி விட்டார் .

“சரி நீ பெரியவா முன்னே போய் நில்லு . என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று பாலு மாமா சொல்ல , தைரியத்தை வரவழைத்து கொண்டு , அம்மா பெரியவா முன் பாேய் நின்றாள்.

என்ன ஆச்சரியம்!?

மஹா பெரியவா தன் பாதங்களை சற்றே தூக்கி அம்மாவின் முன் நீட்டினார்கள். இதனை பார்த்து கொண்டிருந்த பாலு மாமா, “கழற்றி கொள்” என்று அம்மாவை தூண்டி விட அம்மாவும் மிகுந்த பயத்துடன் , பெரியவா பாதங்களில் இருந்து பாதுகைகளை கழற்றி கொண்டு , நமஸ்கரித்து விட்டு , மெல்ல நகர்ந்தாள் .

நாலடி சென்ற பின் கையில் இருந்த பாதுகையை பார்த்த அம்மா, ஏதோ சந்தேகத்துடன் பெரியவாளை திரும்பி பார்க்க, தன மௌனத்தை கலைத்து கொண்டு

“இடது பாதம் தானே சின்னதா இருக்கு போ போ” என்று உரக்க சொன்னார்கள்.

அம்மாவிற்கு சுரீர் என்று அதற்க்கான விளக்கம், வெளிப்படையாக சொல்லாமலே புரிந்தது. கைகளில் இருந்த பாதுகைகளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றாள். நடந்து கொண்டிருந்த மௌன காட்சிகளை பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் அனைவரின் கண்களும் அம்மாவின் கைகளில் இருந்த மஹா பெரியவா பாதுகைகளிலேயே இருந்தது .

மகா பெரியவா ,விஸ்ராந்திக்கு (ஓய்வு ) சென்ற பின் , பாலு மாமா அம்மாவிடம் வந்து, “ஜெயம் என்ன விஷயம்” என கேட்க, அம்மா எதுவும் சொல்லாமல் தன் கைகளில் இருந்த பாதுகைகளை காண்பித்தாள். வலது பாதுகையை விட இடது பாதுகை அளவில் சற்று சிறியதாக இருந்தது ..

அதை பார்த்தவுடனே “அடடா வித்தியாசமாக இருக்கே, அவசரத்தில் நான் கவனிக்க வில்லை . வேணும்னா வேறு பாதுகை பெரியவா கிட்டே இருந்து வாங்கி தரட்டுமா?” என்று கேட்டார்.

உடனே அம்மா “என்னடா பாலு, இடது பாதம் தானே சின்னதா இருக்கு? என்று பெரியவா என்னிடம் கேட்டதை நீ கவனிக்கவில்லையா? தானே அர்த்தநாரீஸ்வரர் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டாரே , உனக்கு புரியலையா? அம்பாள் பாதம் ஸ்வாமியின் பாதத்தை விட சிறியது இல்லையா?” என்று அம்மா கேட்டதும் பாலு மாமா அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால், அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் இடது பாதுகை சிறியதாக இருந்தது மாத்திரம் இல்லை, பாதுகையில் கட்டை விரல் மாட்டி கொள்வதற்கு குமிழ்கள் இருக்கிறதல்லவா? அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாதுகையில் வலது பாதுகையின் குமிஸ் சற்று கடினமாக. பெரியதாக ஆண்மையுடன் இருக்கும். இடது பாதுகையின் குமிழ் சற்று நளினமாக சிறியதாக பெண்மையுடன் இருக்கும்.

இப்படி அமைந்தது , எங்கள் அம்மாவின் அசைக்க முடியாத பெரியவா பக்திக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். எங்கள் இல்லத்தில்( வெப்பத்துர் )பூஜையில் இருக்கிறது. கையில் கிடைத்ததை பாலு மாமா எடுத்து வந்திருந்தாலும் அவரை இவ்வாறு எடுத்துவர செய்தது அந்த பரப்ரம்மம் தானே!

சரணம் ! சரணம் ! குரு பாதுகா சரணம் ! மஹா பெரியவா சரணம்

திருமதி லலிதா சந்திரசேகர்,
ஜெயம் பாட்டியின் மாட்டு பெண்.
 
நமக்கெல்லாம் தெரியும் கைலாஷ் மானசரோவர் திபெத் பகுதியில் உள்ளது. ஒரு முறை டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி மஹாபெரியவாளை தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது மஹாபெரியவா ஸ்வாமியிடம் நீ சைனா நாட்டிடம் நம்முடைய பக்தர்கள் கைலாஷ் மனோராவேர் செல்ல அவாளை வழியை திறந்து விடும்படி கேளு என்றார்.
உடனே சுவாமி அது கஷ்டம் பெரியவா. அவா நம்ம நாட்டோட பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு நம்முடன் சண்டை போடுகிறார்கள். நம்முடைய அரசாங்கமும் அதற்கு சம்மதிக்காது என்றார்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ போய் நம்முடைய அரசாங்கத்திடம் பேசு. சீனாக்காரன் கிட்டயும் பேசு. எல்லாம் நல்ல படியா முடியும் என்றார்.
டாக்டர் சுவாமி அரைகுறை நம்பிக்கையுடன் அப்போதைய பாரத பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் இந்தவிஷயம் பற்றி பேசினார். ஆனால் மொரார்ஜி தேசாய் இதற்கு சம்மதிக்கவில்லை. ஏன் தெரியுமா சுவாமி சீனாவுக்கு சென்றால் உன்னை சரியாகக்கூட வரவேற்க மாட்டார்கள். அவமானப்படுவாய் என்றார்.
உடனே ஸ்வாமி சொன்னார் எனக்கு உத்திரவு கொடுத்தது காஞ்சி மஹாபெரியவா. அதனால் அவரது இறை அற்புதத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்லி சம்மதம் வாங்கி விட்டார்.

ஏனென்றால் மொரார்ஜி தேசாயும் மஹாபெரியவாளின் பக்தர்.
ஸ்வாமி சைனா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது .இரு நாட்டில் உள்ளவர்களும் ஸ்தம்பித்து போனார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று. அந்த பரமேஸ்வரனுக்கே வெளிச்சம். இது ஒன்றும் இல்லை.
சுவாமி சைனாவில் இருந்து கிளம்பி இந்தியா வருவதற்குள் சைனா அகில உலக அளவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதுதான் இந்தியாவின் பக்தர்களுக்காக தங்களுடையநாட்டின் எல்லையை திறந்து விட முடிவு செய்துள்ளது. டாக்டர் ஸ்வாமியின் முயற்சியை பாராட்டி வாசகங்களும் வெளி வந்துள்ளன.
சுவாமி திரும்ப இந்தியா வருவதற்கு கேட்காமலேயே இந்திய அரசாங்கம் ஹெலிகாப்டர் கொடுத்து ஸ்வாமியை அழைத்து வந்தது.

ஸ்வாமி திரும்ப இந்தியா வந்தவுடன் அவரிடம் அன்றைய பிரதமர் கேட்டாராம் “என்ன ஸ்வாமி சீனாக்காரர்களுக்கு மந்திரம் ஏதாவது செய்தாயா? எப்படி அவர்கள் எல்லையை திறந்து விட சம்மதித்தார்கள்.. ஸ்வாமி சொன்னாராம் மஹாபெரியவா சொன்னார் செய்தேன் என்றாராம்.. தனி மனித அற்புதங்கள் தவிர ஒரு நாட்டின் தலைவர்கள் மனதையே மாற்றி செய்த அற்புதத்தை என்னவென்று சொல்ல.

படைத்தவன் நினைக்கிறான்
படைத்தவன் கேட்கிறான்
நினைத்ததும் நடக்கும் கேட்டதும் கிடைக்கும்.
 
பெரியவாளை நினைச்சுட்டே இருக்கிறது ஒரு வித பக்தி. அவர் சொன்னதை செய்றது ஒரு விதமான பக்தி. அவர் சொன்னதை தானும் செய்து மற்றவங்களும் செய்யணும்னு எதிர்பார்க்கிறது வேற விதமான பக்தி.

பெரியவா எஜமான் தான். ஆனா எஜமானுக்கெல்லாம் எஜமான் தான் பெரியவா . ஆனா அவரை நாம் அப்படி பார்க்கலை. இப்படி ஒரு பிறவியான்னு ஆச்சர்யமா இன்னிக்கு வரைக்கும் பார்த்துட்டு தான் இருக்கிறோம்.

என்னிக்காவது வாயைத்திறந்து தனக்கு இது வேணும் அது வேணும்னு சொல்லியிருக்காரா? வாயைத் திறந்தா வேதபாடசாலை, பாடசாலை குழந்தைகள், கோவில் புனருத்ராணம், சாஸ்திரம் இப்படித்தான் வாயில் வரும். நிஜமாவே அவர் வாழ்ந்த காலம் பொற்காலம்.

அவர் என்ன கையை சுற்றி எலுமிச்சம்பழம் கொடுத்தாரா இல்லை வாட்ச் கொடுத்தாரா? இல்லை என்னை இத்தனை நாள் வணங்கு உன்னை கோடீஸ்வரன் ஆக்கி விடறேன்னு சொன்னாரா? எதுவுமே சொல்லலை. அம்பாளை போய் நமஸ்காரம் பண்ணு. பரமேஸ்வரனை நமஸ்காரம் பண்ணு. பித்ரு காரியம் ஒழுங்கா பண்ணு. சாஸ்திரத்தை அனுசரிச்சு நடந்துக்கோ. நித்ய கர்மானுஷ்டானத்தை விடாதே இப்படித்தானே யாரா இருந்தாலும் உபதேசிப்பார்.

யாரோ ஒருத்தருடைய உபன்யாஸத்தில் கேட்டேன். //டேய் நான் தப்பு பண்ணிடக் கூடாதுடா. நான் தப்பு பண்ணிட்டேன்னா என்னை திட்டுவா எல்லோரும். அப்படி திட்டினா அது ஆச்சார்யா பகவத்பாதாளை போய் சேரும். அது எத்தனை பெரிய துரோகம் தெரியுமா? குருவுக்கு கெட்ட பெயர் நான் வாங்கி கொடுக்கலாமா// கேட்கும் போதே கண்ணீர் வரும். அப்ப கூட தன்னை ஒரு குரு அப்படின்னு பெரியவா ஒத்துக்கலை. அப்படிப்பட்ட வினயம், குருபக்தி, தீர்க்கமான சிந்தனை யாருக்கு வரும்?
இது தான் பெரியவா.?
 
Sahasra bhojan- periyavaa
Once there was a devotee who wanted to perform Sahasra Bhojanam (samaradhanai for 1000 Veda Brahmins), but there was no way he could afford it.
He was going pale with the thought of being unable to fulfill his ambition.
One day Periyava enquires about this and said “can I suggest a way you can fulfill your ambition”. Devotee was exhilarated..
Periyava said “Take 2 or 3 kgs of rice, stove (குமிட்டி) and vessel to cook rice, go to Thirugokarnam (this is a great Shiva Kshetram near Pudukottai on way to Trichy).
In this temple there is a pool of water in between rocks (சுனை in Tamil) above the temple.
Do snanam in the pond, cool the rice and then take a small pinch of cooked rice and feed the fishes in the pond. When offering every pinch recite one name of Vishnu Sahasranama.
That way you will offer 1000 pinches of rice, which is Sahasra Bhojanam)”.
The devotee followed the instructions and came back to Periyava, with tears rolling down his cheeks and asked if he can understand the mystery behind this.
Periyava said that it is said in Thirugokarna kshetram Rishis are in the form of fishes in the pond and this devotee has performed Sahasra Bhojanam to the rishis.”
 
நீ பாவி இல்லை!

Thanks to Sri Mannargudi Sitaraman mama for the share.

” நீ பாவி இல்லை, நீ என்னை தொட்டு சேவை செய்ய முடியவில்லை என்று தாப படவேண்டாம். நானே உன்னை தொடுகிறேன்……..
….காஞ்சி மஹா சுவாமி……. இன்றும் பிரத்யக்ஷமாக இருக்கிறார்!
சத்தியம் சத்தியம் சத்தியம் !!

Sri. Sankar arumugam experience……..

Sankar Arumugam had a dream of Sri MahaPeriyava. Sankar Arumugam narrates in his own words…
வணக்கம் சாமி,
என் பெயர் சங்கர் ஆறுமுகம். காஞ்சி மஹா பெரியவர் மற்றும் சிவன் சாரின் பக்தன். தற்சமயம் நான் போலந்து நாட்டில் வசிக்கின்றேன்.
நேற்று இரவு ஒரு அதிசயம் நடந்தது. அதை உங்களோடு பகிர்ந்து விரும்புகிறேன். அனுஷ பூஜையை முடித்து விட்டு, மஹா பெரியவரின் புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்து கொண்டிருந்தேன்.
மஹா பெரியவரின் பாத தரிசனம் வீடியோ, சந்திரமௌலி மாமா பெரியவரின் பாதங்களுக்கு கடுக்காய் பூசிய அனுபவங்கள் வீடியோ .. இவற்றை எல்லா நண்பர்களுக்கும் whatsapp இல் அனுப்பி வைத்தேன்.
பிறகு , என் மனைவியிடம் ” நாம் எல்லாம் பாவிகள், பெரியவரின் பாதங்களுக்கு பணிவிடையும் செய்யவில்லை.. அந்த மகானை பார்க்கவும் குடுத்து வைக்கவில்லை ” என்று சொல்லி கொண்டிருந்தேன்.
நாங்கள் இருவரும் தூங்க சென்றோம். தரையில் தான் படுப்பது வழக்கம். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!
நான் படுத்த சில நிமிடங்களில், மஹா பெரியவர் என் தலைக்கு மிக அருகில் இருப்பதை உணர்ந்தேன். இது கனவு அல்ல ! பிரத்யக்ஷமாக நேரில் நடந்தது.
கண்களை திறக்க பயமாக இருந்தது. நான் கண்களை திறக்கவில்லை. இருதயம் மிக வேகமாக துடித்து கொண்டிருந்தது.
என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, இருதயம் வேகமாக துடித்து கொண்டிருந்தது.
என் தலைக்கு மேல், சுமார் 1000 தாமரை மலர்களுக்கு மேல் இருப்பதாய் உணர்ந்தேன். வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு மிக அற்புதமான உணர்வு. மகா பெரியவர் என்ன செய்தாலும் சரி, சத்தியமாக என்ன நடந்தாலும் சரி, கண்களை திறக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.
மஹா சுவாமி தனது வலது கைகளை மெதுவாக உயர்த்தி , அந்த தாமரை மலர்களை தொட்டார்…. தொட்ட அடுத்த வினாடி, என் தலை முழுவதும் சிலிர்த்து , உடலில் ஒவ்வொரு செல்களும் , ரோமங்களும் சிலிர்த்து …, மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
மீண்டும் சொல்கிறேன், இவை எதுவும் கனவு அல்ல! பிரத்யக்ஷமாக நேரில் நடந்த நிகழ்ச்சி.
கண்களை திறக்கவே கூடாது,.. இந்த நிலையிலேயே அப்படியே இருந்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்த நான்… ஏனோ தெரியாமல் , இடது கண்ணை மட்டும் மெதுவாக திறந்து பார்த்தேன்.
அவ்வளவுதான், படிப்படியாக, உணர்வுகள் குறைந்து.. இருதயம் சகஜ நிலைக்கு வந்துவிட்டது.
” நீ பாவி இல்லை, நீ என்னை தொட்டு சேவை செய்ய முடியவில்லை என்று தாப படவேண்டாம். நானே உன்னை தொடுகிறேன் ” என்று மஹா சுவாமி சொன்னது போல உணர்கிறேன்!
 
Many Jaya Jaya Sankara to Smt. Gayathri for the share. Ram Ram
Darshan after 15 years
Experiences of Maha Periyava: Darshan after 15 years
It was 2 pm in the afternoon. There was scorching heat everywhere.
An old man had come from Bengal.
“Where is Periyava?” he asked harshly.
“You can have His darshan in the evening”, said one of the shishya’s in the Matham.
The person seemed like an avatar of Sage Durvaasa himself!
“What? In the evening? Having asked me to come, where has He gone now? Let Him come whenever He wants. I am leaving”. Saying this, he started walking towards the railway station.
This really angered the attendant from the Matham!
“What? Are you threatening us? Who has asked you to come? Look at you – in the disguise of a sadhu – beard, matted hair and all that! It is simply not right to shout like this”.
As the shishya was speaking, Sri Maha Periyava was spotted in the sugarcane field. The shishya ran towards Periyava.
Periyava and the sadhu from Bengal were speaking for about an hour.
Later, Periyava called the shishya and told him to buy some food for the sadhu and send him off at the railway station.
The shishya did as he was told, and returned.
Looking at him, Periyava said, “When I went on a yatra to Kasi, we were returning via Bengal and Midnapur. At that time, this sadhu stayed at our camp for a few days. He is a Yoga Purusha; Siddhar, but just no one could win over his short-temperament!
While taking leave, he asked me when he could get my darshan again. I told him that he will get to see me after 15 years in South India.
Just like how Bharathan was awaiting Lord Rama’s return, this sadhu has also been counting the days all these years, and has reached here on the date and time stipulated!”
 
முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
("எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?)

கட்டுரை எஸ்.ரமணி அண்ணா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(இது 17-11-11 குருப்பில் போஸ்டானது

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,
இரண்டு ஆண் குழந்தைகள்.

இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு வாடகை பிரச்னை இல்லை.
கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்' தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.

ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.

அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரேமுகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,

மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.

"அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.
பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.
கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."

பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து
அனுப்பி விட்டார்கள்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே'
என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.
பெரியவாள்.

வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..

"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போபார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..

என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"

"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"

பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"

ராமஸ்வாமிஏழையேதவிர,ரொம்பவும்நல்லவர்;

பக்திமான்; அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"

"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
.
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்தங்கப்பூண்கட்டிய ருத்ராட்சமாலை,
நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்ஒரு டாலர்;
பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகுநேரம்பேசிக்கொண்டிருப்பார்கள்.

சாயங்காலத்தில்ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.

பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றக்கு என்ன,இப்படி?

அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக் காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து
சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது. பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.

"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,
ஏழெட்டு நாள்ரெஸ்ட்.புரோகிராம்இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி
ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா
அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."
பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று.

"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு.

"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.

"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...."
உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?

"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க, கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.

"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."

"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.

"சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."

"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு
கூட கண்டதில்லே...."

பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து
பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்
கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?"
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும்
என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமானசௌ.பத்மாவதியை.."விதேயன்;
மார்க்கபந்து சாஸ்திரி...

பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.

"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்..."

தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.

இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்காதருகில் மீண்டும் ஒலித்தன.

'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."

"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?

ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி'
என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.
மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு
வைத்துக் கொண்டால் போதும்.!

திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
("எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?)

கட்டுரை எஸ்.ரமணி அண்ணா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(இது 17-11-11 குருப்பில் போஸ்டானது

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,
இரண்டு ஆண் குழந்தைகள்.

இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு வாடகை பிரச்னை இல்லை.
கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்' தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.

ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.

அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரேமுகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,

மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.

"அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.
பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.
கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."

பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து
அனுப்பி விட்டார்கள்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே'
என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.
பெரியவாள்.

வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..

"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போபார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..

என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"

"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"

பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"

ராமஸ்வாமிஏழையேதவிர,ரொம்பவும்நல்லவர்;

பக்திமான்; அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"

"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
.
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்தங்கப்பூண்கட்டிய ருத்ராட்சமாலை,
நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்ஒரு டாலர்;
பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகுநேரம்பேசிக்கொண்டிருப்பார்கள்.

சாயங்காலத்தில்ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.

பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றக்கு என்ன,இப்படி?

அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக் காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து
சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது. பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.

"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,
ஏழெட்டு நாள்ரெஸ்ட்.புரோகிராம்இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி
ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா
அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."
பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று.

"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு.

"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.

"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...."
உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?

"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க, கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.

"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."

"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.

"சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."

"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு
கூட கண்டதில்லே...."

பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து
பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்
கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?"
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும்
என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமானசௌ.பத்மாவதியை.."விதேயன்;
மார்க்கபந்து சாஸ்திரி...

பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.

"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்..."

தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.

இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்காதருகில் மீண்டும் ஒலித்தன.

'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."

"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?

ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி'
என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.
மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு
வைத்துக் கொண்டால் போதும்.!

திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
sri periyava saranam
 
"குருவே சரணம்"

மகாபெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

நன்றி-குமுதம் பக்தி ஸ்பெஷல்

ஆசார அனுஷ்டானங்கள் தவறாத குடும்பத்துல பிறந்தவன் நான். என்னோட தாத்தா பிரம்மஸ்ரீ கூத்தூர் ராமநாத சாஸ்த்ரிகள் மகா பெரியவாளோட ரொம்ப நெருக்கமா பழகக் கூடிய பாக்கியம் செய்தவர். திருவையாறுக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கும் இடையில இருக்கற கூத்தூர் கிராமம் தான் எங்க பூர்வீகம். அதுக்கு முன்னால கொள்ளுத்தாத்தா காசி வைத்யநாத கனபாடிகள் காலத்துல காசியில இருந்ததா சொல்வாங்க. கனபாடிகள்னு சொன்னா, பலரும் கனமான சரீரம் உள்ளவங்கன்னு இன்னைக்கு நினைக்கிறாங்க. ஆனா வேதத்துக்கு கனம்னு ஒரு பேர் உண்டு. வேதத்தை பாட்டு மாதிரி பாடிப்பாடி தான் உருப்போடணும். கனம் அதாவது வேதத்தைப் பாடம் பண்றவங்க தான் கனபாடிகள்.

காஞ்சி மகா பெரியவர் முதல் முறையா காசிக்கு விஜயம் பண்ணினப்ப, எங்க கொள்ளுத்தாத்தா வைத்யநாத கனபாடிகள் தான் அங்கே சம்ஸ்கிருத வித்வத் சதஸ்- ஐ நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து குடுத்திருக்கார். அதோட, காசி க்ஷேத்திரம் முழுக்க பெரியவாளோட போய் வழி காட்டியிருக்கார். அதனால அவர்மேல மஹா பெரியவருக்கு ரொம்ப அபிமானம் உண்டு. இன்னொரு சமயம் பெரியவா காசிக்குப் போன போது, எங்க தாத்தா அவரைத் தரிசிக்கப் போயிருக்கார். அப்போ அவரை ஆசீர்வதித்த பெரியவா, “இங்கே வேத அத்யயனம் பண்றவா நிறையப் பேர் இருக்கா. நீ மதராஸுல இருக்கிற மயிலாப்பூருக்குப் போயேன்!” அப்படீன்னு சொல்லியிருக்கா.

ஆசார்யா வாக்கை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சென்னை மயிலாப்பூரில் வந்து எங்க முன்னோர்கள் குடியேறினாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எங்க வீட்டு வளாகத்துலேயே சின்னதா ஒரு கொட்டகை போட்டு அதுல ஆதி சங்கரரோட சிலையை வச்சு ஆராதனை பண்ண ஆரம்பிச்சாங்க. வருஷா வருஷம் சங்கர ஜெயந்தியும் நடத்தினாங்க. அந்த சமயத்துல மயிலாப்பூருக்கு வந்த பரமாசாரியார், “சங்கர மடம் ஒண்ணை மயிலாப்பூரில் ஆரம்பிக்கலாமே”ன்னு சொன்னதை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சித்திரைக் குளத்துக்குப் பக்கத்துல சங்கர மடத்தை நிறுவினார் எங்க தாத்தா. அதுக்கப்புறம் பரமாசார்யார் எப்போ சென்னைக்கு வந்தாலும் எங்க தாத்தாவும் அப்பாவும் அவரை அவசியம் தரிசனம் செய்திடுவாங்க. எங்க அப்பாவை “கூத்தூர் அம்பின்னு”தான் பெரியவர் கூப்பிடுவார்.

அந்தப் பழக்கத்தோட தொடர்ச்சியா என் காலத்துலேயும் இப்போ இருக்கற ஆசார்யார்கள், மயிலாப்பூர் பக்கம் வந்தா, “நம்ம ராமகிருஷ்ணன் இருந்தா அழைச்சுண்டு வா!” என்று என்னைக் கூப்பிட்டுண்டு அனுப்பற வரை தொடர்ந்துகிட்டு இருக்கறது நான் செய்த மகாபாக்கியம்னு தான் சொல்லணும்.

எனக்கு நினைவு தெரிஞ்சு மகா பெரியவரோட நெருங்கிப் பேசற அனுபவம் எனக்குக் கிடைச்சது, என்னோட உபநயனத்துக்கு சில நாட்கள் முன்னால தான். எங்க அப்பாவுக்கு வேத உபதேசம் பண்ணினவர், ப்ரும்மஸ்ரீ அனந்த நாராயண வாஜபேயி. எங்க குலகுருன்னே அவரைச் சொல்லலாம். அவர்தான் எனக்குப் பூணூல் போட்டுவிட நிச்சயம் பண்ணினார். உடனே எங்க குடும்ப வழக்கப்படி, மகா பெரியவாளோட ஆசீர்வாதம் வாங்க என்னைக் காஞ்சி மடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே நாங்க போயிருந்த சமயத்துல ஜகத்குரு ஆதிசங்கரர் சன்னதி வாசலில் அமர்ந்திருந்தார்.

என்னோட அப்பா என்னை பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துக்கச் சொன்னார். அப்படியே பண்ணினேன். அப்போ பெரியவா, “குழந்தை ஏதாவது ஸ்லோகம் சொல்லேன்’ னு சொன்னார்.

வழக்கமா குழந்தைகள் எல்லாம் குரு பிரம்மா, குரு விஷ்ணு ஸ்லோகத்தையோ இல்லைன்னா சரஸ்வதி நமஸ்துப்யம் மாதிரியான ஏதாவது சின்ன ஸ்லோகத்தையோ அவர் முன்னால சொல்றதை நான் பார்த்திருக்கேன்.

ஆனா, எனக்கு என்னவோ அன்னிக்கு பெரிசா ஏதாவது சொல்லணும்னு தோணிச்சு. உடனே, “முதாகராத்த மோதகம்…!” னு தொடங்கி கணேச பஞ்சரத்னத்தை பெரியவா முன்னால பாட ஆரம்பிச்சுட்டேன்.

எங்க அப்பா, என்னடா, இவன் பெரிய ஸ்லோகமா சொல்ல ஆரம்பிச்சுட்டானே, சரியா சொல்லணுமேன்னு ஒரு பக்கமும், பரமாச்சார்யா முழுசா கேட்பாராங்கற சந்தேகத்திலேயும் என்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

ஆனா நடந்தது என்ன தெரியுமா ?

அந்தத் துதியில நாலு வரிய நான் பாடிட்டு அஞ்சாவது வரியை, “நதேகராதி பீகரம்..” னு நான் பாட ஆரம்பிச்சதும், யாருமே எதிர்பார்க்காத வகையில பரமாச்சர்யாரும் என்கூட சேர்ந்து அந்தத் துதியைச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். அப்போ அவரோட கைகள்ல கொஞ்சம் உலர்ந்த திராட்சையையும், குங்குமத்தையும் வைச்சுக்கிட்டு இருந்தார். ஸ்லோகம் சொல்லி முடிச்சதும் ஆசீர்வாதம் பண்ணி, அந்த திராட்சையையும் குங்குமத்தையும் தந்தார். அதோட, “குழந்தையை ராமேஸ்வரத்துக்கும், மதுரைக்கும் அழைச்சுக்கிட்டுப் போய் சுவாமியை தரிசனம் செய்த பிறகு உபநயனம் நடத்துங்கோ” அப்படீன்னு சொன்னார். அப்படியே இரண்டு தலங்களுக்கும் போயிட்டு வந்து பூணூல் போட்டுக்கிட்டேன்.

பரமாசார்யாளை முதன் முதல்ல தரிசனம் செய்தப்ப நான் சொன்னது பிள்ளையார் துதி. பரமாசார்யாருக்கும் எனக்குமான தொடர்புக்கு பிள்ளையார் சுழி போட்டதும் அதுதான்.

இன்னைக்கு நினைச்சாலும் பிரமிப்பும், பெருமையுமா இருக்கு. அந்த மகான் நடத்தின அற்புதங்களை நான் நேரடியா பார்த்ததும், மடத்துல இருக்கறவங்க அப்பா கூட பேசுறபோது சொன்ன சிலிர்ப்பான விஷயங்களைக் கேட்டதும் என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

நல்லவங்களைப் பத்தி கேட்கறது, சொல்றது, படிக்கிறது எல்லாமே புண்ணியம் சேர்க்கும்னு சொல்வாங்க. அதுலயும் காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது, கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
நான் தூங்கி விட்டேன் என்று கேதார கௌளயை அவசர அவசரமாக முடித்து விட்டாயா? நிரவல், சுவரம் ஒண்ணும் வேண்டாம் என்று வைத்து விட்டாயாக்கும்? -பெரியவா.

( " மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். " - ஆலத்தூர் சகோதரர்கள்)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா

புத்தகம்-ஸங்கீத சங்கரர் காஞ்சி மகான்.

ஆலத்தூர் சகோதரர்கள் மஹா பெரியவாவிடம் பக்தி கொண்ட வித்வான்கள். அவர்கள் எப்போது ஸ்ரீ மடத்தில் வந்து பெரியவாவிடத்தில் பாடினாலும் பெரியவா தூங்கி விடுவார் என்ற குறை மட்டும் அவர்களுக்கு உண்டு.

இதை ஒரு முறை மகானிடமே தெரிவித்து விட்டனர். "அவ்வளவு தானே! இன்று இரவு பூஜை முடித்துக் கொண்டு வந்தவுடன், விடிய விடிய உங்கள் கச்சேரி தான். நீ எப்போ தூங்கு என்று சொல்கிறாயோ அப்போது தான் தூக்கம்."

சகோதரர்கள் இதைக் கேட்டு மயங்கி விழாத குறை தான். வித்வான்கள் மிகு‌ந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பூஜை முடிந்து மகானும் வந்தார். "சரி! கச்சேரி ஆரம்பமாகட்டும்." என்றார்.

'வாதாபி கணபதிம் ' பாதி பாடல் நடந்து கொண்டிருக்கும் போது ' மேனா'வை எடுத்து வரும் படி உத்தரவு. முனிவர் ஏறி அதில் அமர்ந்தார். பாடல் முடிந்து வித்வான்கள் கேதார கௌளை ராகம் பாடினர். கந்தவர்வ கானமாக இருந்தது பாடல்.

ஆனால் ராகம் தொடங்கிய சில நொடிகளிலேயே முனிவர் மேனாவிலேயே படுத்து, கதவையும் மூடிக் கொண்டு விட்டார். மேனாவைச் சுற்றி படுதாவை இறுக்கமாகப் போர்த்தவும் ஆணையிட்டார்.

எப்படி இருக்கும் சகோதரர்களுக்கு? கற்பனைக் கோட்டை தூள் தூளானது. அதற்கு மேல் வித்வான்களுக்கு உத்வேகம் இல்லை. சகோதரர்களில் ஸ்ரீனிவாச ஐயர், "பெரியவா இப்படி ஏமாற்றி இருக்க வேண்டாம். எங்களுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான்" என்று புலம்பினார். எடுத்த ராகத்தை சகோதரர்கள் அவசர அவசரமாக முடித்து விட்டு மீதிப் பாட்டையும் பேருக்குப் பாடிவிட்டு முடித்து விட்டனர். விடைபெற்றுக் கொள்ள காத்திருந்தனர்.
கதவு திறந்தால் அல்லவா விடைபெற முடியும். எப்போது 'விழித்துக் கொள்வார்?'
வித்வான்களுக்கு விடிய விடிய சிவராத்திரி தானா? என்ன சோதனை இது என்று அமர்ந்திருந்த போது உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது. படுதா விலகி கதவு திறந்தது.

"நான் தூங்கி விட்டேன் என்று கேதார கௌளயை அவசர அவசரமாக முடித்து விட்டாயா? நிரவல், சுவரம் ஒண்ணும் வேண்டாம் என்று வைத்து விட்டாயாக்கும்? " என்றவுடன் வித்வான்கள் அழுதே விட்டனர்.

" தப்பு , தப்பு மன்னிக்க வேண்டும். "

" சீனு நீ ரொம்ப நல்லவன் தான்டா. ஆனா உனக்கு அஞ்ஞானம். நான் நேரா கண்ணைத் திறந்து கொண்டு கேட்டாத் தான் கேட்டதா உனக்கு நினைப்பு " என்றதும் இருவரும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தனர்.

" மன்னிக்கணும். பெரியவா சர்வக்ஞன் ; சர்வ வியாபி. தெரியாம அஞ்ஞானப் பட்டுட்டோம். "

" சரி, சரி எங்கே விட்டாயோ அங்கிருந்தே கேதாரகௌளயை ஆரம்பி " என்றார். சகோதரர்களும் ராகம், நிரவல், சுவரம் எல்லாவற்றையும் பாட, மஹா பெரியவா முழுவதும் கேட்டு மகிழ்ந்து வித்வான்களை இன்பக் கடலில் ஆழ்த்தி, வாழ்த்தி அனுப்பினார்.

நாதப் பிரம்மம் நம் பெரியவா

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"

("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!")

சொன்ன்வர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர்குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!
பெரியவாள் சொன்னார்கள்:

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."

"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
பூஜைக்கு வில்வம் தந்த புரந்தரனும், மோட்சம் தந்த பெரியவாளும்

(தெலுங்கு சிறுவனின் ஆசையை பூர்த்தி பண்ணின பெரியவா)
கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா-2012 பதிவு
நன்றி-சக்தி விகடன்
.
மஹா பெரியவா ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். பெரியவா ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழியில், திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. மஹானுடன் சென்றவர்கள், ''பெரியவா, மழை பெய்யுது. பல்லக்கிலே ஏறிண்டுங்கோ பெரியவா'' என்றனர். அதற்கு மஹா பெரியவா,' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லிவிட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.
அருகில் இருந்த கிராம எல்லையில் ஒரு பழைய சிவன் கோயில் தெரிந்தது. ஸ்வாமிகள் அங்கே தங்கி மழையில் நனைந்த காவி வஸ்திரத்தை மாற்றிக்கொண்டார். ஸ்வாமிகள் அங்கே தங்கி இருக்கும் விஷயம் ஊரில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது. அனைவரும் ஸ்வாமிகளை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்று வணங்கினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு ஸ்வாமிகள் தம்முடைய யாத்திரையைத் தொடர்ந்தார்.
சுமார் எட்டு மைல்கள் சென்றதும் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தின் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய பிரார்த்தித்துக் கொண்டார்கள். பெரியவாளுக்கு என்ன தோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. பக்தர்களுக்காக விறு விறுவென்று கொட்டகையும் போடப்பட்டது.
.
மறுநாள் காலையில் பெரியவா ஸ்நானத்துக்குச் சென்றுவிட்டார். அவர் திரும்பியதும் பூஜைக்கு உட்கார்ந்துவிடுவார். ஆனால், பூஜைக்குத் தேவையான வில்வம் எங்குமே கிராமத்தில் எங்குமே கிடைக்கவில்லை. மடத்து காரியதரிசிக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. வில்வம் இருந்தால்தான் பூஜை நடக்கும். பூஜை முடிந்தால்தான் பெரியவா பிக்ஷை ஏற்பார். இதில் வேறு பெரியவா 21 நாள் இந்த கிராமத்தில் தங்கப்போவதாகச் சொல்லி இருக்கிறாரே என்ற கவலை வேறு அவருக்கு ஏற்பட்டது. பெரியவா பூஜைப் பொருட்களைப் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'பெரியவா, ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துவிட்டார்.
பதினொன்றரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. 'சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே' என்று காரியதரிசி பிரமை பிடித்தவர்போல் நின்றுகொண்டு இருந்தார்.
.
தியானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா ஒரு சிறு புன்னகை.. மடத்தில் பூஜா கைங்கர்யம் செய்துவரும் ஒரு பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலென்று நிறைய மூணு தள வில்வம்! பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா?. வில்வம்தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கிவிட்டார். ''யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்தக் கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'
'ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜை, பிரவசனம் எல்லாம் நடந்தது. ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். மறுநாள் காலை காரியதரிசி அந்தப் பையனிடம், ''அப்பனே, இன்னிக்கும் மண்டப மூலையில வில்வம் இருக்கா பாரேன்' என்றார். என்ன ஆச்சர்யம்? முந்தின தினம் போலவே அங்கே ஒரு கூடை நிறைய வில்வம் இருந்தது.
வில்வத்தைப் பார்த்த பெரியவா அர்த்தபுஷ்டியுடன் காரியதரிசியைப் பார்த்தார். 'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது. “யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிறான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு பிறப்பித்தார். மறுநாள் அதிகாலையிலயே காரியதரிசி மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்.
.
ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைந்தான்.
எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?
'புரந்தர கேசவலு''ங்கய்யா.
'தமிழ் பேசறியே எப்படி?'
'அய்யா, எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே போயிட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே போயிட்டாரு. நான்தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.
''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது?'
'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேய்க்கும்போது ஒருதடவை அப்பாரு ''ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு இலை மரம் அது தான் வில்வ மரம். சிவன் சாமிக்கு அத போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.
மூணு நாள் முன்னே .. சாமி மடத்துக்காரங்க கூட இலையைக் காட்டி கேட்டாங்க. மாடு மேய்க்கறவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''
மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு எதுவும் வேணுமா? ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.
'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதைக் கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.
'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தரதாசர், தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புளகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.
பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.
21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

'சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்.
.
பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .
காரியதரிசியிடம் பெரியவா சொன்னது இதுதான்:

''அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நா அவா ஊருல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னைக்கு, 'எனக்கு நீங்க மோட்சம் வாங்கி கொடுக்கணும்னு கேட்டான்.' "சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபையால உனக்கு அது கிடைக்கும்"னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காய்ச்சல் ஏற்பட்ருக்கு “”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்"

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"குருவே சரணம்"

மகாபெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது.

இளையாத்தங்குடியில் முதன் முறையாக

வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்தது.

அங்கே மகானும் எழுந்தருளி அனுக்கிரகம்

செய்து கொண்டு இருந்த சமயம் அது.

ஒருநாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள்,

தொல் பொருள் இலாகா அதிகாரிகள்

எல்லோரையும் மகான் கூப்பிட்டு அனுப்பினார்.

நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான

அறிவுரைகளை வழங்கினார்.பின்னர்,

"தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள்

மிக சிறப்பானவை" என்று அந்த பெரிய

மகாநாட்டில் பங்கு பெற்ற மேதாவிகளிடம்

மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக

இதைக் கேட்டார்.பதிலளிப்பது மிகவும் எளிதாக

இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில்,

"தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில்

செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே

மிக சிறப்பானவை" என்று உடனே பதில்

சொல்லிவிட்டனர்.

"சரி.அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது?

என்று ஸ்ரீபெரியவா அவர்களிடம் கேட்டார்.

"அர்ஜுனன் தபஸ்" என்றனர்."அந்த சிற்பத்தின்

போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீபெரியவா

கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்து

அதை மகானிடம் காட்டினர்.

அந்த பெரிய புகைப்படத்தினை அவர்கள்

ஸ்ரீபெரியவாள் முன் வைத்து நிற்க, அதை அவர்

சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தார்.பிறகு சொன்னார்.

"இந்த சிற்பத்திலே அர்ஜுனன் பஞ்சாக்னி நடுவிலே

தபஸ் பண்ற மாதிரி இருக்கு.இப்படி தபஸ் பண்ற

நேரம் உச்சிவேளைன்னு நமக்கு தெரியறது மாதிரி

சிற்பி செஞ்சிருக்கார்.அது எப்படின்னு யாராவது

சொல்ல முடியுமா" என்று ஸ்ரீபெரியவா கேட்டார்.

புதிர் போன்ற அக்கேள்விக்கு பதில் சொல்ல அங்கே

யாருக்குமே தெரியவில்லை.சென்னை தொல் பொருள்

ஆராய்ச்சி இயக்குனர் திரு நாகசாமி உட்பட அங்கு

வந்திருந்த அனைத்து ஸ்தபதிகளுக்கும் இதற்கான

விடை தெரியவில்லை.எல்லோரும் சிந்தித்தபடி நிற்க

ஸ்ரீபெரியவா, "நல்லா யோசனை செஞ்சி பார்த்துண்டு

நாளைக்கு வந்து சொல்லுங்களேன்" என்று அவர்களது

தர்ம சங்கடத்தை அந்த நேரம் விலக்கி அவர்களை

அனுப்பிவைத்தார்.

ஆனால் அதற்கான தக்க பதில் அவர்களின்

யோசனையில் உதிக்காததால் அதே தர்ம

சங்கடத்துடன் அடுத்த நாளும் ஸ்ரீபெரியவா

சன்னதியில் வந்து நின்றனர்."எங்களுக்கு நிச்சயமா

எதுவும் தெரியல்லே...ஸ்ரீபெரியவா தான் எங்களுக்கு

விளக்கம் தரணும்" என்றார்கள் பவ்யமாக.

ஸ்ரீபெரியவா சொன்னார்........

"சுத்திலும் நெருப்பா சூழ்ந்திருக்க பஞ்சாக்னி தபஸ்

சரியா பகல் 12 மணிக்கு மேலே ஒரு முகூர்த்தகாலம்.

அதாவது 1.30 மணி நேரம் செய்ய வேண்டிய தபஸ்,

இதை அர்ஜுனன் அந்த நேரத்திலே தான்

செஞ்சிருக்காருன்னு சிற்பத்திலே காட்ட முடியாது

இல்லையா? அதனாலே சிற்பத்தோட சம்பந்தப்படாம

ஒரு ஓரம் வெறும் எலும்புக் கூடாக ஒரு முனிவரை

சிற்பி செதுக்கியிருக்கார். அந்த முனிவர் சைகையால்

முத்திரை போட்டுண்டு சூரியனை தரிசிக்கிற மாதிரி

இருக்கு. எப்பவும் இது போல முத்திரை போட்டு

சூரியனை பார்க்கிற நேரம், சூரியன் நடுப்பகல்லே

தலைக்கு நேர்மேலே உச்சியிலே வர்ற போதுதான்.

இதைத்தான் சிற்பி சூரியனையா, அந்த முனிவரை

செதுக்கி அந்த நேரத்தை நாம தெரிஞ்சுக்கிற மாதிரி

பண்ணியிருக்கார்."

இப்படி சூட்சுமான விஷயங்களை ஸ்ரீபெரியவாளாலே

மட்டுந்தான் விளக்க முடியும்.எத்தனை படிச்சு

இருந்தாலும், எங்களால் இதைத் தெரிஞ்சுக்க முடியாது"

என்ற அவர்கள் ஸ்ரீபெரியவாளை பூர்ணமாக அன்று

உணர்ந்து வணங்கி எழுந்தனர்


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே காட்சி தந்த பரமாச்சார்யா"

(தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி
இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல
நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!)

1968-ம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீமடத்துல மகாபெரியவர்
இருந்த சமயத்துல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்ல
பிரும்மோற்சவம் நடந்துது.

அந்த சமயத்துல ஒரு நாள் உற்சவர் பெருமாள்,
வேணுகோபால
கிருஷ்ண அவதாரத்துல திருவீதி உலா வந்தார். பெருமாள்
எழுந்தருளக்கூடிய காலகட்டத்துல, ஸ்ரீமடத்து வாசலுக்கு வர்ற
சமயத்துல மடத்து ஆச்சார்யா வாசலுக்கு வந்து பெருமாளை
சேவிக்கறது வழக்கம்.

அந்த வழக்கப்படி அன்னிக்கு வரதராஜபெருமாள் ஸ்ரீமடம்
இருந்த திருவீதியில எழுந்தருளி சேவை சாதிக்க மடத்தோட
வாசலுக்கு வந்த சமயத்துல
மஹா பெரியவா வெளியில வந்து
பக்திப் பரவசத்தோட பெருமாளோட விக்ரஹத் திருமேனியைப்
பார்த்துண்டு இருந்தார்.

அதே சமயத்துல பெருமாளுக்கு ஆராதனை பண்ணறதுக்காக
அந்தக் கோயிலோட பிரதான பட்டாச்சாரியாரும்
கூடவே வந்திருந்தார்.

மஹாபெரியவா பெருமாளை தரிசனம் பண்ணிண்டு இருந்த
சமயத்துல, அந்த பட்டாச்சாரியார்கிட்டே திடீர்னு ஒரு மாற்றம்
தெரிஞ்சுது.
வைச்ச கண்ணைத் திருப்பாம நிலை குத்தினமாதிரி
மஹாபெரியவாளையே பார்த்துண்டு இருந்தார் அவர்.

யாரோ ஸ்தம்பனம் பண்ணி அவரைக் கட்டிட்ட மாதிரி,
ஆச்சார்யாளையே உத்துப் பார்த்துண்டு இருந்த பட்டாச்சார்யார்,
நெய்தீபத்தை ஏத்தி பகவானுக்கு ஆரத்தி காட்டறச்சே ஒரு
நிமிஷம் மஹா பெரியவாளுக்கு நேரா தீபத்தை நீட்டித்
தடுமாறிட்டு - சுதாரிச்சுண்டு பெருமாளுக்குக் காட்டினார்.

பார்த்துண்டு இருந்தவா எல்லாரும் என்ன ஆச்சு
பட்டாச்சாரியாருக்குன்னு யோசிக்கறச்சே, ' பரமாச்சார்யா
பெருமாளை சேவிக்கறச்சே....
சாட்சாத் அந்த
வேணுகோபாலனே வாகனத்துலேர்ந்து இறங்கி, தன்னைத்தானே சேவிக்கற மாதிரியான காட்சி கிடைச்சுது எனக்கு.
பரமாச்சார்யாளும், வேணுகோபாலனும்
ஒரே மாதிரியான
அலங்காரத்தோட ஒரே மாதிரி தென்பட்டா என் கண்ணுக்கு!"
பரவசத்துல நாக்கு தழுதழுக்க, உடம்பு சிலிர்க்கச் சொன்னார்,
பட்டாச்சாரியார்.

உற்சவத்துல கலந்துண்டு இருந்தவா பலரும் பெரியவாளோட
மகிமையை நினைச்சு பரமானந்தப்பட்டா.

அதே சமயம் சிலருக்கு மட்டும் பட்டாச்சாரியார் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசறாரோ..! அப்படின்னு தோணித்து.
அவாளுக்கு பதில் சொல்ற மாதிரி அடுத்த சில நாள்லயே இன்னொரு சம்பவம் நடந்தது.

அன்னிக்கு ஏகாதசிங்கறதால மஹாபெரியவா பூரண உபவாசத்துல இருந்தார். வழக்கத்தைவிட நிறையபேர் அன்னிக்கு தரிசனத்துக்கு வந்திருந்தா.
அப்போ திடீர்னு ஏதோ நினைச்சுண்டவர் மாதிரி
தன் பக்கத்துல இருந்த மடத்து சிப்பந்தியை அழைச்ச பெரியவா,
"நீ போய் பெருமாள் கோயில் பட்டாச்சாரியாரை அழைச்சுண்டு
வா" அப்படீன்னார்.

அந்த சிப்பந்தியும் வேகமாப்போய் பட்டாச்சாரியாரை
கூட்டிண்டு வந்தார்.

பெரியவா முன்னால வந்து பவ்யமா நின்னார் பட்டாச்சாரியார்.
அவர்கிட்டே, "இன்னிக்கு என்ன திதி?"ன்னு கேட்டார் பரமாச்சார்யா.

அன்னிக்கு ஏகாதசி திதின்னுட்டு பூரண உபவாசம் இருக்கிற
பெரியவா, இப்போ எதுக்கு இப்படி ஒரு கேள்வியை அவர்கிட்டே
கேட்கறார்னு எல்லாருக்கும் ஆச்சரியம்.

"ஏகாதசி திதி" மெதுவான குரல்ல சொன்னார் பட்டாச்சாரியார்.

"இன்னிக்கு உபவாசம் நமக்கெல்லாம் மட்டும்தானா?
இல்லை வரதனுக்குமா?" மஹாபெரியவா இந்தக் கேள்வியைக்
கேட்டதுதான் தாமதம், அப்படியே நடுங்கிப் போய்ட்டார்
பட்டாச்சாரியார்.

"பெரியவா...அது..!" பேசமுடியாம சங்கடம் தொண்டையை
அடைக்க திணறினார்.

"என்ன வார்த்தை வரலையா?
நித்ய ஆராதனை ப்ரகாரம்
இத்தனைநேரம் பெருமாளுக்கு திருவமுது படைச்சிருக்கணுமே?!
இன்னிக்கு ஏன் இன்னும் அதைப் பண்ணலை?"

"பெருமாளே..!" வாய்விட்டு அலறவே செய்துட்டார்
பட்டாச்சாரியார்.

பெருமாளுக்கு நித்ய ஆராதனை செய்ய இன்னிக்கு நான்
போகலை...
வேற ஒரு பட்டர்தான் போயிருக்கார்.
அதனால,
என்ன நடந்ததுதுன்னு எனக்குத் தெரியலை. இதோ ஒடனே
போய் விசாரிச்சுட்டு வரேன்....!"
பெரியவா உத்தரவுக்குக் கூட, காத்துண்டு இருக்காம ஓட்டமும், நடையுமா, கோயிலுக்குப்
போனார் பட்டாச்சாரியார்.

கொஞ்சநேரம் கழிச்சு திரும்பி வந்து பெரியவா முன்னால
பவ்யமா நின்னார் பட்டாச்சாரியார்.

"பெரியவா க்ஷமிக்கணும்.இன்னிக்கு கோயில் உள்கட்டுல
கவனக்குறைவால ஏதோ தப்பு நடந்திருக்கு. அதனால
பெருமாளுக்கு திருவமுது படைக்கறது தடைப்பட்டிருக்கு.
இதோ நான் போய்ப்பார்த்து அதை சரி பண்ணி,ப்ராயச்சித்தம்
பண்ணிட்டு, பெருமாளுக்கு திருவமுது படைச்சுட்டு வந்துட்டேன்.
பெரியவா இந்த பிரசாதத்தை ஏத்துக்கணும்."

வரதராஜ பெருமாள் பிரசாதமா, கொஞ்சம் துளசியை
மஹாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார், பட்டாச்சாரியார்.

"பெருமாளோட திருவடியிலேர்ந்து எடுத்துண்டு வந்தியா?"
அப்படினு கேட்டுண்டே அந்த துளசிப்பிரசாதத்தை
எடுத்து தன்னோட சிரசுல வைச்சுண்டார்
மஹாபெரியவா.

இப்பவும் பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே
காட்சி தந்தார் மஹாபெரியவா.
அந்த திருக்காட்சியைப்
பார்த்த அவர் அப்படியே உடம்பு நடுங்க..
கண்ணுலேர்ந்து
ஜலம் பெருக, பெருமாளே...பெருமாளே..! சொல்லிண்டே
பெரியவா திருவடியில சாஷ்டாங்கமா விழுந்து
சேவிச்சுட்டுப் புறப்பட்டார் பட்டாச்சாரியார்.

எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தவாளுக்கு என்ன
தோணித்து தெரியுமா? தினமும் பெருமாளைத் தொட்டு
ஆராதனை செய்யற பட்டாச்சாரியாருக்கு, அந்தப் பெருமாளே
பிரியப்பட்டு நேரடி தரிசனம் குடுத்த மாதிரி,பரமாச்சார்யா
சாட்சாத் பெருமாளாகவே அவருக்குக் காட்சி குடுத்தது அதிசயம்!

தானும், பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டினது
ஆச்சரியம்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்"

'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில் குருக்கள்.

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)

மகா பெரியவா காஞ்சிபுரத்துல இருந்த சமயம் அது. வழக்கமா அவரை தரிசனம் பண்ணவர்றவா கூட்டம் நிறைஞ்சிருந்த நாள் அது.

அந்தக் கூட்டத்துல இளம் வயசு உடைய ஒரு தம்பதியும் இருந்தா. ஆத்துக்காரர் கையில பிறந்துஆறு ஏழு மாச சிசு ஒண்ணு இருந்தது. குழந்தையைத் தூக்கிண்டு ஆத்துக்காரியையும் தாங்கிண்டு வரிசையில மெதுவா நடந்து வந்தார், அவர்.

அன்யோன்யமான தம்பதிகள் அவாங்கறது பார்த்தபோதே பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. இருந்தாலும் மகாபெரியவா இருக்கிற சன்னிதானத்துக்குள்ள இப்படி நெருக்கமா நடந்து வரணுமான்னு பலரும் நினைச்சா. ஆனா,அவா கிட்டே நெருங்கினதும்தான் தெரிஞ்சது, அந்தப் பெண்மணிக்கு பார்வை இல்லைங்கறது.

பலரும் உச் கொட்டி வருத்தப்பட்டதை அவர் கவனிச்ச மாதிரியே காட்டிக்கலை. நேரா பெரியவா முன்னால போய் நின்னா.

அவாளைப் பார்த்ததுமே,"என்ன மலையாள தேசத்துலேர்ந்து வரேளா? இந்த மடத்தோட ஆதி குரு அவதார க்ஷேத்ரம் அது" அப்படின்னார் மகாபெரியவா.

ரெண்டுபேரும், ஆமாம்.அங்கேர்ந்துதான் வரோம்கற மாதிரி தலையை அசைச்சா.

"என்ன விஷயம்?" கேட்டார் ஆசார்யா.

"இவ என்னோட ஆத்துக்காரி. இந்தக் குழந்தையை கருவுல தாங்கிண்டு இருக்கறச்சே நிறை மாசத்துல எதிர்பாராதவிதமா கால் வழுக்கி தவறி விழுந்துட்டா. தலையில பலமா அடிபட்டுடுத்து.பகவான்கிருபையில கர்ப்பத்துல இருந்த சிசுக்கு ஒண்ணும் ஆகலை. குழந்தையும் நார்மலா பொறந்தது. ஆனா, அதுக்கு அப்புறமாதான் பிரச்னை ஆரம்பிச்சுது. இவளுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சுடுத்து. போதாக் கொறைக்கு கொஞ்சம் கொஞ்சமா பார்வையும் பறிபோயிடுத்து.! நானும் பார்க்காத வைத்தியமில்லை. போகாத கோயிலும் இல்லை.

"ஒன் கஷ்டம் புரியறது. ஆமா, இங்கே என்னைப் பார்க்கறதுக்கு ஏன் வந்தே!" பரிவோட கேட்டார் ஆசார்யா.

"இவளுக்குப் பார்வை போனதுக்கு தெய்வ குத்தம் ஏதாவது காரணமா இருக்குமோன்னுட்டு எங்க ஊர் வழக்கப்படி குடும்பத்துக்குப் பரிச்சயமான நம்பூதிரி ஒருத்தர்கிட்டே பிரஸன்னம் பார்த்தோம் .க்ஷேத்ராடனம் செஞ்சா நிவர்த்தி ஆகிடும். இவளுக்குப் பார்வை வந்துடும்னு அவர் சொன்னார். அதான் குழந்தையையும்,இவளையும் கூட்டிண்டு க்ஷேத்ராடனம் பண்ணி, தீர்த்த ஸ்நானமும் சுவாமி தரிசனமும் பண்ணிண்டு வரேன்.

"கோயில்களுக்குப் போறே சரி. இங்கே எதுக்கு வந்தே? இது கோயில் இல்லையே!"-பெரியவா.

"நீங்க கோயில் இல்லைன்னு சொல்றேள். ஆனா, இதுதான் நடமாடும் தெய்வம் இருக்கிற இடம்னு, வைத்தீஸ்வரன் கோவில்ல இருக்கிற குருக்கள் ஒருத்தர் சொன்னார். 'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு. உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!'னு அவர்தான் சொன்னார். அதான் உங்களை தரிசனம் பண்ண வந்திருக்கோம்!" பவ்யமா அவர் சொல்ல,அவரோட ஆத்துக்காரியும் 'ஆமாம்'கற மாதிரி தலையை அசைச்சா.

மௌனமா அவாளை ஒரு நிமிஷம் பார்த்தார் மகாபெரியவா

.

"மொத மொதெல்லா உங்களைப் பார்க்க வர்றதால என்ன எடுத்துண்டு வரணும்கறதுகூட எங்களுக்குத் தெரியலை. அதனால இதை மட்டும் வாங்கிண்டு வந்தோம்!" கையில இருந்த கொஞ்சம் வாழைப் பழத்தை மகாபெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் செஞ்ச அவர், தன்னோட ஒய்ஃபையும் நமஸ்காரம் செய்யச் சொல்லி அதுக்கு ஒத்தாசையும் பண்ணினார். அப்புறம் குழந்தையையும் ஆசார்யா திருவடி முன்னால கீழே விட்டுட்டு எடுத்துண்டார். அப்புறம் பிரசாதம் வாங்கிண்டு புறப்படலாம்னு நினைச்சு கையை நீட்டினவர்கிட்டே ஆசார்யா, "ஒரு நிமிஷம் இருங்கோ!" அபடின்னார்.

தனக்குப் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தர்கிட்டே, "யார் கிட்டேயாவது டார்ச் லைட் இருக்கான்னு கேளு!" அப்படின்னார் -பெரியவா அதுக்காகவே கொண்டு வந்தவர் மாதிரி கூட்டத்துல ஒருத்தர் தன்னோட ஹேண்ட்பேக்ல வைச்சுண்டு இருந்த டார்ச்சை எடுத்து தொண்டர் கிட்டே குடுத்தார்.

டார்ச் லைட்டை அணுக்கத் தொண்டர் ஒரு மூங்கில் தட்டுல வைச்சுக் குடுத்தார். அதை எடுத்துண்ட ஆசார்யா,தன்னோட முகத்துக்கு நேரா,அதைத் திருப்பி,'ஆன்' பண்ணினார்.

டார்ச்ல இருந்து வெளிச்சம் பரவித்து மகானோட முகத்துல அதுபட்டு தனக்குப் பெரும் பாக்யம் கிடைச்சதா பூரிச்சு பிரகாசித்தது..மகான் முகத்துல படர்ந்த வெளிச்சம் தவிர மீதி அவர் தலைக்குப் பின்னால இருந்த சுவர்ல பட்டு அப்படியே பூரண ஒளிவட்டமா ஜொலிச்சுது. அங்கே இருந்த எல்லாரும் அந்தப் பரவசமான காட்சியைப் பார்த்துண்டு இருக்கறச்சே, ஆசார்யா அந்த நபரைக் கூப்பிட்டார்.

"ஒன்னோட பார்யாகிட்டே நான் தெரியறேனான்னு கேளு!" அப்படின்னார்.

வந்தவர் திரும்பி தன்னோட ஆத்துக்காரிகிட்டே அதைக் கேட்கறதுக்குள்ளே." ஆஹா என்ன ஒரு தேஜோமயமா சன்யாசி ஒருத்தர் உட்கார்ந்துண்டு இருக்கார்.அவரை எனக்கு நன்னா தெரியறதே!" அப்படின்னு பரவசமா,சந்தோஷமா குரல் எழுப்பினா அவரோட ஆத்துக்காரி.

ரெண்டுபேரும் பரம சந்தோஷமா மகாபெரியவாளை திரும்பவும் நமஸ்காரம் பண்ணினா.

" நான் பெத்த குழந்தையோட முகத்தைப் பார்க்கவே முடியாதோன்னு நினைச்சு தினம் தினம் ஏங்கினேன். உங்களாலதான் எனக்கு அந்த பாக்யம் கிடைச்சுது!"ன்னு தழுதழுக்கச் சொல்லி மகாபெரியவாளைக் கையெடுத்துக் கும்பிட்டார் அந்தப் பெண்மணி.

"அடடே ஒனக்குப் பார்வை என்னால வந்ததுன்னா சொல்றே? எனக்கு என்னவோ அப்படித் தோணலை. நீங்க இத்தனை நாளா தரிசனம் பண்ணிண்டு வந்தேளே, அந்த தெய்வங்களோட அனுகிரஹம்தான் நோக்கு நேத்ர தரிசனம் கிடைக்கப் பண்ணியிருக்கு. க்ஷேமமா ஒரு கொறையும் இல்லாம இருப்பேள். சௌக்யமா போயிட்டு வாங்கோ!" குங்குமப் ப்ரசாதமும் ஒரு ஆரஞ்சும் குடுத்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.

எல்லாத்தையும் பண்ணிட்டு, எதுவுமே தான் செய்யலைன்னு சொல்லிக்கிற மகாபெரியவாளோட மகத்துவத்தை நினைச்சு சிலிர்ப்போட பிரசாதத்தை வாங்கிண்டு புறாப்பட்டா அவா.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால்,எம்.எல்.ஏ,
மாதிரி காலக்கெடு ஏதுமில்லை;கவர்ன்மெண்ட்
சம்பளமும் கிடையாது-பெரியவா"

(கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு புண் படுத்தாத,நோக
வைக்காத ஓர் அறிவுரை)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-162
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பத்து,பன்னிரண்டு கம்யூனிஸ்டுகள் வந்தார்கள்.
பெரியவாள், தரிசனம் கொடுக்க இசைவார்களோ,
மாட்டார்களோ என்ற தயக்கம் இருந்தது.

பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும்,'வரச் சொல்'
என்று ஜாடை காட்டி விட்டார்கள்.

மெல்லப் பேச்சு தொடங்கியது.வந்திருந்தவர்களில்
ஒருவர், "நான் கம்யூனிஸ்ட் பார்ட்டி சார்பில்
அசெம்பிளிக்குப் போட்டியிடுகிறேன்.எனக்கு வெற்றி
கிடைக்கணும்." என்று கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்துப் பெரியவாள் சொன்னார்கள்;

"நீங்கள் மக்களுக்கும் தேசத்துக்கும் சேவை செய்யப்
பிறந்தவர்கள் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்
கொள்ள வேண்டும்.நீங்கள் ஜெயித்தால் எனக்குச்
சந்தோஷம்.விளையாட்டு, சண்டை, தேர்தல்களில்
வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியடைந்தால்
வருத்தப்படக் கூடாது. ஜெயம் ஏற்பட்டால் தன்னுடைய
கட்சி.தன்னுடைய தலைவர், தன்னுடைய குடும்பம்-
இவற்றின் சௌகரியத்துக்காக பதவியைப் பயன்படுத்தக்
கூடாது.

"உங்கள் கொள்கை,'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'
(தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட 'மகேசன்
தொண்டு' என்று பிரசாரம் செய்கிறீர்கள்)

"மக்கள் தேவையறிந்து தொண்டு செய்யணும்.
உங்களைச் சுற்றியுள்ள ஏழைகள்,பெண்கள்,குழந்தைகள்..
எல்லாருக்கும் சேவை செய்யணும்.சேவையில் ஜாதி -மதப்பிரிவே இல்லை.சங்கராச்சாரியராகச் சொல்லப்படும் நான்உங்கள் கொள்கைகளில் தலையிட மாட்டேன்.உங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ..அதைச் செய்யுங்கள்.

"நானும் ஒரு பப்ளிக் சர்வண்ட்தான்! ஆனால்,எம்.எல்.ஏ,
மாதிரி காலக்கெடு ஏதுமில்லை;கவர்ன்மெண்ட் சம்பளமும்கிடையாது.ஓர் ஓரத்திலே உட்கார்ந்து கொண்டு தேடி வருபவர்களுக்கு ஓரிரண்டு வார்த்தை ஆறுதல் சொல்கிறேன். அவ்வளவுதான்."

கம்யூனிஸ்ட் அன்பர்களுக்கு ஒரே திகைப்பாய் போய் விட்டது. முதலில் தரிசனம் கொடுப்பதற்கே இசைவார்களா? என்று சந்தேகத்துடன் வந்தவர்களுக்கு,இவ்வளவு பெரிய
உபந்யாஸம் செய்து விட்டார்கள் பெரியவாள்.

யாரையும் புண் படுத்தாத,நோக வைக்காத சொற்கள்!

பின்னர் ஒவ்வொருவராகக் கூப்பிட்டு ஊர்,பெயர்
விசாரித்து, பெரிய மாதுளம்பழம் கொடுத்தார்கள்.
(விபூதி-குங்குமம் கொடுத்தால் அவர்கள் சங்கடப்படுவார்கள்)

அவர்கள் சென்றபின். 'எல்லாரும் நாஸ்திகர்கள்' என்றார் ஒரு தொண்டர். அவர்களிடம் இத்தனை நேரம் பேசி உடலை வருத்திக் கொள்ள வேண்டுமா? என்ற ஆதங்கம்.

"ஈசுவரன் அவாள்கிட்டேயும் இருக்கான்,
ஸர்வே பவந்து ஸுகிந"(எல்லாரும் நன்றாக இருக்க வேணும்)

தொண்டர்களுக்கு, இந்த தத்துவம் எட்டாக்கனி.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP



 
அம்பாளிடம் சரணடையுங்கள் !

என் தந்தை சிமிழி ப்ரம்ம ஸ்ரீவெங்கடராம சாஸ்திரி ஸ்ரீமடத்தின் அபிமானத்துக்கு மிக்க உகந்தவர்.எனது பால்யத்திலேயே அவர் மறைந்தார். பகவத் சங்கல்பத்தில் இரு சன்னியாசிகள் மூலம் தேவி உபாசனை கிட்டியது. பல ஆண்டுகள் உபாஸித்த பிறகும் ,உபாஸனையில் உடலும் வாக்கும் ஈடுபடும் அளவுக்கு மனதும் ஈடுபடவில்லையோ என ஒரு தாபம்! சாந்தி கிடைக்கவில்லை என்ற எண்ணம் வலுத்தது.

பெரியவாளிடம் சென்றேன். என் மனக் குறைய அவரிடம் கொட்டினேன்.

”பூஜையில் வாக்கும் செயலும் ஈடுபடும் அளவுக்கு மனம் ஈடுபடவில்லை”

”அதற்கு நான் என்ன செய்யணும்?”

‘மனம் அலையாதிருக்கும் வழியைக் காட்டணும்”

”நீ என்ன படித்திருக்கிறாய்?”

படித்தது அனைத்தும் சொன்னேன்

”இத்தனை படித்தும் உனக்கு விவேகம் இல்லையென்றால் என்னால் உன்னைத் திருத்த
முடியாது.”

”என்னால் என்னைத் திருத்திக் கொள்ளமுடியவில்லை; அதனால்தான் பெரியவாளிடம் வந்தேன்.”

”என்னை என்ன செய்யச் சொல்றே?”

”மனம் அலைபாயாதிருக்க வழிகாட்ட வேண்டும்”

”நீ என்ன பூஜை பண்றே?”

”அம்பாளை படத்திலும், விக்ரஹத்திலும், யந்திரத்திலும் பூஜை செய்கிறேன்.”

”படத்தில், யந்த்ரத்தில் அம்பாள் இருப்பதாக நினைத்துத் தானே செய்கிறாய்?”

”ஆமாம், அப்படித்தான்.”

”அப்போது இந்தக் குறையையும் அவளிடத்திலேயே தெரிவித்திருக்கலாமே?”

”நிறையப் படித்திருக்கிறாய்..படம், விக்ரஹம், யந்த்ரம் எல்லாவற்றைலும் தேவி இருப்பதாக நினைத்து பூஜை செய்கிறாய்…ஆனால் ஒன்றிலும் உனக்கு நம்பிக்கை இல்லை.தேவி உன் வீட்டில் உன் அருகில் இருக்கும்போது என்னிடம் வந்து அழுகிறாய்
அவளிடம் உன் குறையைச் சொல்லத் தெரியவில்லை. இனி அங்கயே அழு.இங்கு வராதே” என கடுமையாகப் பேசி விட்டார்.

எனக்கு கண்களில் நீர் கோர்த்தது. மனதில் பேரிடி.. மறுபடி நமஸ்கரித்து விடை பெற நினைக்கும்போது,

”ரொம்ப கோவித்துக் கொண்டுவிட்டேனா? நீயே விரும்பி ச்ரத்தையாக தேவியை உபாஸிக்கிறாய்; மனம் ஈடுபடவில்லை என்ற குறையையும் உணர்கிறாய், உபாஸனை என்பதே அவள் அருகில் இருப்பதுதானே? உன் அருகில் இருப்பவளிடம் குறையைச் சொல்லாமல் நீட்டி முழக்கிக் கொண்டு இங்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு உறைக்கிறாற்போல் கடுமையாகச் சொன்னேன். இனி எதற்காகவும் , எந்தக் குறையானாலும் அவளைத் தவிர யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. அவளன்றி யாரும் உனக்கு உதவ மாட்டார்கள்”

அன்றிலிருந்து என் குறைகள் யாவையும் அவளுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். கடும் துயரிலும் அவளிடம் மட்டுமே அழுகிறேன்.

இப்படிச் சொல்வது ஸ்ரீரங்கம் எஸ். ராதாகிருஷ்ண சாஸ்திரிகள். இந்த அறிவுரை அவருக்கு மட்டுமல்ல! நம் யாவருக்கும் சேர்த்துத்தான்! அவள் பாதங்களை இறுகப் பிடித்துக் கொண்டால் அவள் தாயானவள் நம்மை எந்தக் காலத்திலும் உதற மாட்டாள்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 

Latest ads

Back
Top