குருவே சரணம்..

OM SRI GURUBHYO NAMAH

மொதல்ல கயாவுக்கு போ!...

ஒருவர், மந்த்ராலயம் செல்வதற்காக பாம்பே மெயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

ரயில் தாலாட்டிய ஸுகத்தில் தூங்கிவிட்டார்! இரவு... அகாலத்தில், தூக்கக் கலக்கத்தில், மந்த்ராலயம் வந்துவிட்டது என்றெண்ணி, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.

Train கிளம்பியதும் பார்த்தால்...

குண்டக்கல்!

தெலுங்கு, ஆங்கில எழுத்து கண்களில் பளிச்சென்று தெரிந்தது!

"அட, தேவுடா! எங்கியோ போய் எறங்கிட்டேனே!"

தன்னையே நொந்து கொண்டார். அதே platform-ல் மற்றொரு கோஷ்டி, தமிழ் பேசிக் கொண்டு நின்றது.

"ஸார்.... நீங்கள்ளாம் எங்க போறேள்?...... நா.... மந்த்ராலயம் போகணும். தப்பா குண்டக்கல்-ல எறங்கிட்டேன். அடுத்த train எப்போன்னு தெரியுமா?..."

"கவலப்படாதீங்கோ ஸார்! நாங்க.... பெரியவாளை தர்ஶனம் பண்றதுக்காக ஹகரி போறோம்.... பெரியவா ஸங்கல்பம்... ஒங்கள... இங்க எறக்கி விட்ருக்கு! எங்களோட வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு அப்றமா.... மந்த்ராலயம் போகலாமே!..."

பெரியவாளை.. இவர் தர்ஶிப்பது, இதுவே முதல் முறை!

எல்லோரும் வரிஸையாக நமஸ்காரம் பண்ணியதும், மந்த்ராலயத்தின் முறை வந்தது.

"இவர்..... இங்க வரதா இல்லியே? நீங்க அழைச்சிண்டு வந்தேளா?"

தூக்கிவாரிப் போட்டது!

"நா... பெரியவாளைப் பாக்காம.... மந்த்ராலயம் போகணும்னு நெனைச்சேன்...! அதான், நேர அங்க போக முடியாமப் போய்டுத்து"

பெரியவா அவரை அருகில் அழைத்து மெல்லிய குரலில் ஏதோ பேசினார்.

அவ்வளவுதான்! மயக்கம் போடாத குறையாய் அஸந்து போய் நின்றார் மந்த்ராலயம்...!

"என்ன ஸார்? என்னாச்சு? பெரியவா என்ன சொன்னா?..."

பெரியவா கேட்டது இதுதான்..............

"ஒங்கம்மா... கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டாளா?"

முதல் தடவை பார்த்து, முதல் முதலாக கேட்ட கேள்வியிலேயே மந்த்ராலயம் அதிர்ச்சி அடைந்தார்.

ஒப்புக்கொண்டார்.

"எவ்ளோ ஸீக்ரமா முடியுமோ, அவ்ளோ ஸீக்ரமா, கயா-க்குப் போயி... ஒங்கம்மாக்கு ஶ்ராத்தம் பண்ணு..! அவளுக்கு ஸத்கதி கெடைக்கும்"



என்ன ஒரு தீர்மானமான அனுக்ரஹம்!

"கெணத்துல விழுந்து உஸுரை விட்ட அவர் அம்மாவோட ஆவி, தான் நிர்கதியாத் தவிச்சுண்டு இருக்கறதை சொல்லி, தனக்கு விமோசனம் கேட்டுப் பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணியிருக்கும்.! அதான், மந்த்ராலயம் போக இருந்த பிள்ளையாண்டானை குண்டக்கல்-ல எறங்கப் பண்ணி, தங்கிட்ட வரவழைச்சிண்டா... பெரியவா"

ஒரு பரம பக்தர், நெகிழ்ச்சியோடு கூறினார்.

உண்மைதான். நாம் நம்புகிறோமோ இல்லையோ, நாம் காஶி, கயா யாத்திரை செல்லப்போவதாக ஸங்கல்பம் செய்து கொண்டதுமே, நம்முடைய பித்ருக்கள் ஸந்தோஷமடைந்து, கயாவில் நாம் தரப்போகும் பிண்டத்திற்காக காத்திருப்பார்கள்.

ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளுடைய பூர்வாஶ்ரம மனைவி, அவருடைய பிரிவைத் தாங்காமல் ப்ராணஹத்தி பண்ணிக்கொண்டு, ஸ்வாமிகள் முன்னால் ஆவி ரூபத்தில் வந்து அரற்றியதும், ஸ்வாமிகள் அவள் மேல் தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்து நல்ல கதியை அளித்தாரே!

வேறு வேறு காலங்களில், வேறு வேறு மஹான்களின் ரூபத்தில் தெய்வம் தோன்றினாலும், அந்த தெய்வத்தன்மை எக்காலத்திலும் மாறாது.

அந்த தெய்வத்தின் பலகோடி படைப்புகளில் ஒன்றான ஆறறிவு மனிதனுடைய அஹங்காரம் அழிந்தால், அனைத்தையும் அறிந்த அறிவுக்கறிவான தெய்வம், தெய்வமே! என்பதை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம் என்பதையும் உணர்வான்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”

(சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் --பவார் என்ற காவலாளிக்கு மஹான் அருளிய மகத்தான நிகழ்ச்சிகள்)

நன்றி-அமிர்தவாஹினி-2013

ஸ்ரீ மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்:

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வொருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?”என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான்.

மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேளைக்கு சோறு போட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார்.

நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.

காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?”

ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார்.

தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை.

மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா”என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்ச்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன் போகவில்லை” என்றான்.

சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பி கொண்டான், என்பதும் உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.

இடம் கிடைக்காத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்து விட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மலையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார்.

கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட்ட பெரியவா- மிருதங்கம் இல்லாத சமயத்தில் மதுரை மணி அய்யருக்கு
(மதுரை மணி அய்யருக்கு கிடைத்த பாக்கியம்)

(இன்று மணி அய்யர் பிறந்த நாள். நாள்-25-10-2019

17-11-2012 கல்கியில் வந்தது.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, "மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா" என்று சீடர்களிடம் விசாரித்தார்.அது காலை நேரம்.வீட்டில்தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்து விட்டார்.

மணி அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. மகா பெரியவரை பக்தியுடன் வரவேற்றார்.

"ம்....பாடு!" என்றார் மகா பெரியவர்.

"நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!" என்று சமாளித்தார் மணி அய்யர்.

"நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன். குளிக்காவிட்டாலும் பரவாயில்லை. .பாடலாம்!" என்றார். பெரியவா

"மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா...." என்று இழுத்தார் மணி அய்யர்.

"நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!"
என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்துவிட்டார் மகா பெரியவர்.

வேறு வழி இல்லை.காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.

Image may contain: 1 person, drawing



ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH


1572140474310.png


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH


1572140590616.png


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

26.10.2019, Saturday, மஹாபெரியவா, நாங்கள் உங்கள் உபதேசங்களை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம், உங்கள் பாதம் பணிகிறோம், உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும். கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரத்தில் சர்வதீர்த்தம் என்ற இடத்தில் பெரியவா ஒரு சமயம் இருந்தார்.கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஏழை விவசயி ஒருவர், எல்லோரையும் பார்க்கிறார். பெரிய
பெரிய தட்டுகளில் எதை எதையோ நிரப்பி வந்து சுவாமிகளுக்கு அர்ப்பணிக்க பக்தர்கள் காத்து நிற்கின்றனர். அவரோ பரம ஏழை

பஸ் செலவுக்குக் கூட போதிய பணம் இல்லை.

அதனால் பாதயாத்திரையாக நடந்தே பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்.
வெறுங்கையோடு எப்படிப் பெரியவரைப் பார்ப்பது!.

அதனால் எட்டணாவுக்கு வாழைப்பழம் இரண்டு வாங்கிக்கொண்டார்.

வெட்கம் பிடுங்கித் தின்கிறது."இதைக் கொண்டுபோய் எப்படிக் கொடுப்பது"என்று தயங்கினார்.

மேலும் நந்தனாரைப்போல தன் ஜாதியை நினைத்து வருந்தினார். சுவாமிகள் அருகில்போய் தரிசனம் செய்ய முடியாதே என்றும் ஏங்கினார்.ஒதுங்கி நின்றார்.
சுவாமிகள் வெளியே வந்தார். பெருஞ்செல்வர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நேரே விவசாயிடம் வந்தார். முதல் தரிசனமே அவருக்குத்தான்.இதை எதிர்பார்க்காததால் கைகாலெல்லாம்

அவருக்கு நடுங்கியது.

பெரியவாளோ ," நீ யார்? எங்கேருந்து வரே? எப்படி வந்தே?" என்றெல்லாம் கேட்டு அறிகிறார்.

பாத யாத்திரையாக வந்திருக்கிறார் என்பது தெரிந்துதான் காரில் வந்தவர்களை ஒதுக்கிவிட்டு நேரே அவரிடம் வந்தார்!.

"உனக்கு என்ன வேணுமப்பா?" என்று அன்பொழுகக் கேட்கிறார். ஆசார்யப் பெருமகன்.

"ஊரில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக்கு. ஊரார் தகராறு செய்து என் நிலத்துக்கு மட்டும் தண்ணீர் விடாமல் தடுக்கிறார்கள்.பயிர் பண்ண முடியவில்லை. குடும்பம் பட்டினியால் வாடுகிறது.சாமிதான் அனுக்கிரகம் பண்ணணும்!" என்று பணிந்து நிற்கிறார் அந்த ஏழை.
அதைக் கேட்டுக் கொண்ட பிறகு, "அது என்ன கையில்!" என்று கேட்டு தன் கையால் வாழைப் பழங்களை வாங்கிக்கொண்டார். பிரசாதம் எடுத்து வரச்சொன்னார்.பணமும் தரச் சொன்னார்.

"போய் வா! எல்லாம் சரியாகிவிடும்" என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

எந்தவித வேற்றுமையும் பாராட்டாத பெரியவா ,

"அன்பே சிவம்" என்று வாழ்ந்தது நிதர்சனமாகிறது. இப்படி இவர் எல்லோரிடமும் ஒரே விதமாக அன்பைப் பொழிவதாலேதான், யாரைக் கேட்டாலும் " பெரியவாளுக்கு என்னிடம் தனி அன்பு. என் பரம்பரை முழுவதும் அவருக்குத் தெரியும்" என்று சொல்வதைப் பார்க்கிறோம்.இன்னும் சிலர் எங்க தாத்தா,அசப்பிலே பெரியவா மாதிரியே இருப்பா என்று சொல்லி மகிழ்வார்கள்.அது ஓரளவு உண்மைதான்.

அவர் பரப்பிரம்மம்தானே! எல்லாமாக ,எவருமாக,

எங்குமாக இருப்பதில் ஆச்சரியமுண்டா!.

நாம் ஒருவரிடம் அன்பு காட்டலாம்.அதை அவர்களும்
புரிந்துகொண்டு அன்பை வெளிப்படுத்தினால்தான் வெற்றி.
அப்படிப்பட்ட அன்பை பெரியவாளிடம் பார்க்கலாம்.
MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP


https://www.facebook.com/photo.php?...Yfb-Uzdow8YD8D0LRc5VgNEOfSkRSxeV_UTWe_q&ifg=1
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு"

(பேத்தி கல்யாணத்திற்கு உதவி மற்றும் தலை தீபாவளிக்கு புதிய வேஷ்டி-புடவை, மோதிரம், ரிஸ்ட்-வாச்-அனுகிரஹம் செய்த பெரியவா)

தீபாவளி வார பெரியவா போஸ்ட்-

சொன்னவர்-ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1907-ல் மகா சுவாமிகள்,பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்கள். அப்போது ஸ்ரீமடம் கும்பகோணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது. ஸ்ரீமடத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.முறையான வருமானம் இல்லாததாலும், ஸ்ரீமடத்தின் பூஜைப் பணிகளின் திட்டத்தை குறைத்துக் கொள்ள முடியாததாலும், அவ்வப்போது சில செல்வந்தர்களிடம் கடன் வாங்கும் நிலை இருந்து வந்தது.

சிப்பந்திகளுக்கு, சம்பளம் என்ற பெருந்தொகை கொடுப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஜகத்குருவிடம் இருந்த பக்தி காரணமாகவே, பலர் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்.'இது ஒரு புண்ணிய கைங்கரியம்' என்ற மனப்பான்மை.

அந்தக் காலத்தில் வருமானத்தில் கண் வைக்காமல், 'புண்ணியப் பேறு' என்ற மனப்பக்குவத்துடன் கணேசய்யர் என்பவர் சமையல் துறையைக் கவனித்துக் கொண்டிருந்தார். சமைப்பதும், அடியார்களுக்கு சாப்பாடு போடுவதும் தான் அவாருக்குத் தெரிந்த வேலைகள்.

அப்போது நிகழ்ந்த ஒரு மகாமகத்தின்போது, தான் ஒன்றியாகவே ஆயிரம் பேர்களுக்குச் சமையல் செய்து போட்டிருக்கிறார் என்றால், அவருடைய தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் எவ்வாறு புகழ்வது?...

வருடங்கள் கழிந்தன.

ஸ்ரீமடம், காஞ்சிபுரத்துக்கு வந்தாயிற்று.மக்கள் ஆதரவும் கணிசமாகக் கிடைத்தது. நிர்வாகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

ஓர் அன்பர், பெரியவாளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்றார்.

"என் பெயர் நடேசன், கும்பகோணம் மடத்தில் சமையல்காரராக இருந்த கணேசய்யரின் பிள்ளை.

'பெரியவாள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

"நீ என்ன பண்றே?"

'பின்,ஏன் சிலவு பண்ணிண்டு இங்கே வந்தே?"

"பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. பெரியவா ஒத்தாசை பண்ணணும்.."

நாலைந்து நிமிடங்களுக்கு நிச்சப்தம். பெரியவா கண்களை மூடிக் கொண்டார்கள். சாம்பார் வாளியுடன் கணேசய்யர் தென்பட்டார்..!

'அப்பாடா...என்ன உழைப்பு!...அவர் வேலை செய்யும் போது உடலில் வழியும் வியர்வை, ஓர் அண்டா நிறைய இருக்கும். அவர் பேத்திக்குக் கல்யாணம்.

அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக ஒரு தனவந்தர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

"ஜகதீசா, உன் பிக்ஷாவந்தனம் இன்னொரு நாள் செய்து கொள்ளலாம்.இப்போ இந்தக் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்யேன்..."

ஜகதீசன்,பரமபாக்யம்'என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருடைய மனைவி உடன்வர, நடேசனை அழைத்துக் கொண்டு ஓர் ஓரமாகப் போனார். மணி பர்சைத் திறந்து நடேசன் மேல் துண்டில் கொட்டினார்.

'ஒரு ரூபாய் மட்டும் வெச்சுக்கிறேன் சரியா?"

அம்மையார்,தன் பங்காக,ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார்.

ஆவணி மாத ஆரம்பத்தில், கல்யாணம் புரட்டாசி கழித்து ஐப்பசி வந்தது.

நடேசனும் வந்தார்- பெரியவா தரிசனுத்துக்கு! வந்தனம் செய்துவிட்டுக் கை கட்டிக்கொண்டு ஓரமாக நின்றார். பெரியவாளிடம் எதுவும் பேசவில்லை.

பெரியவாள் எதிரில், புதிய வேஷ்டி-புடவை யாரோ ஒரு பக்தர்,காணிக்கையாக சமர்ப்பிந்திருந்தார். எதிரிலிருந்த மற்றப் புதிய துணிகளையும் 'அவனிடம் கொடு' என்று அணுக்கத் தொண்டருக்கு ஜாடை.

கண்களைச் சுழற்றி,எதிரே நின்றவர்களை நோக்கி ஒரு எக்ஸ்-ரே பார்வை.யாரோ ஒருவரிடம் பார்வை நிலைத்தது.

"நீ, மோதிரம் போட்டுண்டு இருக்கியோ?.."

"ஆமாம்"

"அதை, இவனுக்குக் கொடுத்துடேன்.."

அடுத்த விநாடி,ஆணை நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு பாக்கியசாலி பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

"அந்த ரிஸ்ட்-வாச்சை இவனிடம் கொடுத்துடு. நீ வேறே வாங்கிக்கோ.."

ரிஸ்ட் வாச், கை மாறிற்று.

உடனே,நடேசனுக்குப் பிரசாதமும் வழங்கி உத்தரவு கொடுத்தாயிற்று.

அவர் போன பின்னர் பெரியவா சொன்னார்கள்.

"இவன் பொண்ணுக்குத் தலை தீபாவளி. அதைச் சொல்லத்தான் வந்தான். இவன் அப்பா-கணேச அய்யர்- அந்தக் காலத்திலே,மடத்துக்கு ஏராளமா கைங்கரியம் செய்திருக்கார்.மாச சம்பளம் (தலைமை சமையல்காரரான இவருக்கு மூணு ரூபாயோ,நாலு ரூபாயோ சம்பளம்!..
இப்படி,வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே,புண்ணியம்.."

பக்தர்கள் நெகிழ்ந்தே போனார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா,என்ன?

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

பெரியவா கொடுத்த PRESCRIPTION

(பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்)

(அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?...)

17-01-2013 போஸ்ட்.

அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!

சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே ["அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"என்று ஆழ்வார் பாடியது போல்] பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான்.

"எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே... பெரியவாதான் காப்பாத்தணும்"அழுதான்.

"கொழந்தே! நா..... வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....."

பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை.

எனவே அவனிடம்,"சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!..."

"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!"

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.

"ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?..."

"கட்டாயம் நடக்கறேன்....."

"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே.... யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்....டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா..... ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு ஒரே சந்தோஷம் !"நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா"விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.

பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்... அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!

"பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"

அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.

உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP



 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"

(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)

தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-மே 2016 ஞான ஆலயம்

குடும்பத்தினரால் அலமேலு,சேலத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார் - மடத்துக் குடியிருப்பு ஒன்றில் தங்கி சமையல் வேலைக்குச் சென்றார். தினமும் காஞ்சிப்பெரியவரைத் தரிசனம் செய்வதைக் கடமையாகக் கொண்டார்.

ஐம்பது வயதில் காஞ்சிபுரம் வந்த அவருக்கு வய்து தற்போது எழுபது ஆனது. அதன் பின் வேலைக்கு செல்ல முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த வசந்தாவின் ஆதரவுடன் பொழுதைக் கழித்தார்.

ஒருமுறை வசந்தாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் திருச்சி செல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில் அலமேலு பாட்டிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. பசியால் வாடிய அவர் கவனிப்பார் இன்றி படுக்கையில் கிடந்தார். வாய் மட்டும், "பெரியவா...பெரியவா..." என்று அவரின் திரு நாமத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

திடீரென, "பாட்டி...பாட்டி..." என்று சத்தம் கேட்டது. தட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி கதவைத் திறந்தார்.

அங்கு வசந்தாவின் மகள் காமாட்சி நின்றாள். கையில் சாப்பாட்டுக் கூடை இருந்தது.

"என்ன பாட்டி,ஒடம்பு தேவலையா?" என்றாள் சிறுமி

தலை அசைத்தாள் பாட்டி. சிரித்தபடியே காமாட்சி, "பாட்டி...இந்தக் கூடையிலே ரசம் சாதம் இருக்கு. சாப்பிட்டு நிம்மதியா இருங்கோ...நான் பாட்டு கிளாஸ்க்குப் போயிட்டு வரேன் என்று சொல்லி ஓடினாள்.

கூடைக்குள் சாதத்துடன்,மிளகு ரசம், சுட்ட அப்பளம், உப்பு,நார்த்தங்காய்,வெந்நீர்,காய்ச்சல் மாத்திரை என அனைத்தும் இருந்தன. வசந்தாவின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்து விட்டார் பாட்டி.

நன்றாகச் சாப்பிட்டு மாத்திரையும் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் விட்டது.வசந்தாவைப் பார்க்க பாட்டி புறப்பட்டார். வீடு பூட்டி இருந்தது.

"திருச்சியில் இருந்து இன்னும் வசந்தா வரவில்லையே" என்றார் பக்கத்து வீட்டுப் பெண்

பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.'காமாட்சி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாளே! அது எப்படி?' என்ற கேள்வி மனதில் எழுந்தது.

அந்த சிந்தனையுடன் பாட்டி பெரியவரைத் தரிசிக்கச் சென்றார்.அவரது காலில் விழுந்தார்.

"எப்படி இருக்கேள்....காய்ச்சல் தேவலையா?" என்று கேட்டார் பெரியவர்.

"தான் காய்ச்சலில் அவதிப்பட்டது எப்படித் தெரிந்தது?" என்று புரியாமல் திகைத்தார்.

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?" என்று கேட்டு பாட்டியை மேலும் வியப்பில் ஆழ்த்தினார் பெரியவர்.

பாட்டி வாயடைத்து நின்றார்.

சிரித்த பெரியவர், "திருச்சிக்குப் போன காமாட்சி இன்னும் வரலை...இந்த காஞ்சிபுரத்தை ஆட்சி செய்யுற காமாட்சிதான் உன்னைத் தேடி வந்தா..." என்று கோவில் இருக்கும் திசையைக் காட்டினார்.

அலமேலு பாட்டி அப்படியே சிலையாகிப் போனார்.

உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP



 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

"பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"---மகாபெரியவா

(பித்ரு தேவதைகள்,பிண்டத்தை பாரத பூமியில,பரத கண்டத்துல மட்டும்தான் வந்து வாங்கிக்கறதா சாஸ்திரவிதி இருக்கு)

நன்றி- குமுதம் லைஃப் தொகுப்பு-ஸ்ரீகுமார். தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் பணக்காரர் ஒருத்தர் தன் குடும்பத்தோட, மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் மடத்துக்கு வந்திருந்தார்.

இந்தியாவுலேர்ந்து அமெரிக்கா போய் அங்கேயே செட்டில் ஆனவர் அவர். வருஷத்துக்குரெண்டு தரமோ மூணு தரமோ இந்தியாவுக்கு வந்துட்டுப் போவார். இதெல்லாம் அவர் பேசினதுலேர்ந்து தெரிந்தது. அதுக்கப்புறம் அவர் பேசினதுதான் விஷயம்,

"பெரியவா நான் வெளிநாட்டுலயே இருந்துட்டாலும் நம்ம சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் தவறாம அனுஷ்டிக்கறேன் பெத்தவாளோட ஸ்ராத்த கர்மாவை அங்கேயே பண்ணிடறேன் . அதுக்குத் தேவையான எல்லாத்தையும் இங்கேர்ந்து வரவழைச்சுடறேன்.ஒரு குறையும் வைக்கறதில்லை!" தான் சாஸ்திர சம்பிரதாயத்தை மீறாம நடந்துக்கறதை கொஞ்சம் கர்வமாக சொல்லிண்டார் அவர்.

அவர் சொன்னதைக் கேட்டு மௌனமா சிரிச்சார் மகாபெரியவா. வந்தவரே தொடர்ந்து பேச ஆரம்பிச்சார்.

"பெரியவா,இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா , வெளிநாட்டுக்குப் போயும் ஒருத்தன் இத்தனை சிரத்தையா இருக்கான்கறதைத் தெரிஞ்சுண்டு, மத்தவாளும் இதே மாதிரி எதையும் விடாம சிரத்தையா பண்ணணும்தான். நீங்களே சொல்லுங்கோ, நான் நினைக்கறது சரிதானே?"

சுய தம்பட்டம் அடிச்சுண்டு அவர் இப்படிப் பேசினது, அங்கே இருந்த பலருக்கும் பிடிக்கலை. இருந்தாலும் மகாபெரியவா முன்னால அசூயை எதையும் காட்டிக்கக்கூடாதுன்னு எல்லாரும் அமைதியா இருந்தா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டுண்ட மகாபெரியவா,

"ஸ்ராத்த சாமான்லாம் பெருஞ்செலவு பண்ணி இங்கேர்ந்து அங்கே வரவழைச்சுக்கறதா சொன்னே ..சரி, பண்ணிவைக்க வைதீக பிராமணா வேணுமே, அது எப்படி..?அமைதியாகக் கேட்டார்.

"அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை பெரியவா. எங்க குடும்ப வாத்யார் இங்கே ஒருதரம் சிராத்தம் செஞ்சு வைச்சப்போ சொன்ன மந்திரமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வைச்சிருக்கேன். அதைப் போட்டுக் கேட்டுண்டே செஞ்சுடறேன்! இங்கே வந்து வாத்யாரை வைச்சுண்டு செஞ்சுட்டுப் போறதுக்கான நேரமும் செலவும் மிச்சம் பாருங்கோ!" சொன்னார், வந்தவர்.

"வாஸ்தவம்தான், ஆமாம்..நீ இந்தியாவுக்கு எப்போல்லாம் வருவே?" மென்மையாகக் கேட்டார்,ஆசார்யா.

"எத்தனைதரம், எப்போ வருவேன்னு சொல்ல முடியாது பெரியவா,எப்படியும் ரெண்டு மூணுதரம் பிசினஸ் விஷயமா வருவேன்.அப்புறம் நவராத்திரிக்கு கண்டிப்பா குடும்பத்தோட வருவேன். ஏன்னா, நம்ம பாரம்பரியப் பழக்கத்தை விடமுடியாது பாருங்கோ...!

சொன்னவர்,மகாபெரியவா கேட்காமலே மேலும் சில விஷயத்தைச் சொன்னார். "நான் பணத்தை லட்சியம் பண்றதில்லை. எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல தான் வருவேன். ஏன்னா, சாதரண க்ளாஸ்ல வர்றவாள்ளாம் மட்டரகமா இருப்பா!"

பொறுமையாகக் கேட்டுண்டு இருந்த மகாபெரியவா பேச ஆரம்பிச்சார்,

" நீ சொல்றதெல்லாம் உன் வரைக்கும் சரிதான். ஆனா, அதெல்லாம் வாஸ்தவத்துல சரியான்னு நினைச்சுப்பார்த்தியோ? நெறைய பணம் இருக்கிறதால,மத்தவாளை மட்டரகம்னு சொல்றே.இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போய் அங்கேயே பித்ரு கார்யம் பண்றதா சொல்றே...! ஆனா, பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமியிலே எப்படி வந்து பிண்டம் வாங்கிக்குவா? எனக்குத் தெரிஞ்ச பித்ருக்களெல்லாம் அமாவாசை, மாச தர்ப்பணம்,மஹாளய தர்ப்பணம்,ஸ்ராத்த திதி இதுலே எல்லாம், இந்த பாரத பூமியில, பரத கண்டத்துல மட்டும் தான் வந்து வாங்கிக்கறதா சாஸ்திரவிதி இருக்கு. அது தெரியாம பாவம், நீ கடல் கடந்துபோய் எங்கேயோ இருந்துண்டு, டேப்ரெக்கார்டர்ல கேட்கறதை வைச்சுண்டு பித்ரு கார்யம் பண்ண்றதா சொல்றேஅவாள்ளாம் இங்கே வந்து பார்த்து நீ பிண்டம் தரலைன்னு நினைச்சு பட்னியோட, உன்னை சபிச்சுட்டுன்னா போயிண்டு இருப்பா?"

பெரியவா சொன்னதைக் கேட்டு பதறிப் போனார், அந்தப் பணக்காரர். "பெரியவா மன்னிகணும்... செய்யறது தப்புன்னே தெரியாம இருந்துட்டேன்..!" குரல் நடுங்க சொன்னார்.

"நவராத்திரிக்கு வர்றேன்னு சொல்ற ஒனக்கு, பித்ரு கார்யம் பண்ண அந்த திதியிலே இங்கே வர மனசில்லையே! உன் தோப்பனார்,தாயார் மேலே உண்மையா பக்தி இருந்தா இத்தனை வருஷம் பண்ணின தப்புக்கு ப்ராயச்சித்தமா உன் குடும்ப வாத்யார்கள்கிட்டே கலந்து பேசி, அவா சொல்ற திதியில பித்ரு கர்மாக்களைப் பண்ணிட்டு வா.... அப்புறம் ஆசிர்வாதம்பண்றேன்...

பித்ருக்களோட ஆசிர்வாதம் இருந்தாதான் மத்ததெல்லாம் ப்ரயோஜனப்படும்.புரியறதா?"

அந்தப் பணக்காரர் அப்படியே ஆடிப்போய்ட்டார். கண்லேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது!

"தெய்வமே,என் கண்ணைத் திறாந்துட்டேள். முட்டாள் நான் தப்பு பண்ணிட்டேன்.இப்பவே போய் எல்லாத்தையும் பூரணமா செஞ்சுட்டு, அப்புறம் உங்க சன்னதிக்கு வரேன்!" சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டார்.

கொஞ்சநாள் கழிச்சு, குடும்பத்தோடு வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார் அந்தப் பணக்காரர்.

"ஸ்ராத்தம்,பரிகாரம் எல்லாம் திவ்யமா பண்ணி முடிச்சியா? இப்போ என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமா உண்டு"ன்னு சொல்லி, ஒரு தாம்பாளத்துல கல்கண்டு, பழம், வில்வம், விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சுக் குடுத்து அவா எல்லாரையும் ஆசிர்வதித்தார் மகாபெரியவா

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

பூக்காரி காமாட்சி"

("அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?" என்று புலம்பினாள். கூடையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது").

(நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.)(பல முறை படித்த ஒரு அலுக்காத போஸ்ட்)

கட்டுரை-கணேச சர்மா

புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

06-02-2012ல் குருப்களில் போஸ்டானது

.காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் மஹா பெரியவாளை, ‘அப்பா’ என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள். பெரியவா, ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்குக் காசு கிடைக்குமே!" என்பார். காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள் பூக்காரி

.மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக்கூடாது. ஆனால், இதற்கு பூக்காரி காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். ஏனெனில், பெரியவாளே அவளிடம், நீ உன் வியாபாரத்தை முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு விட்டு வரக்கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார். அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை ஒன்பது மணி செய்தியைச் சொல்லச் சொல்லி, கேட்டுக் கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப்போக நெடு நாழிகை ஆகிவிடும்

.
அன்று, புதுக்கோட்டையிலிருந்து ‘ஜானா’ என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தாள். அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப்போகுமுன் கொட்டகை சென்று, தேக சுத்தி பண்ணிக் கொண்டு வரச்சென்றார். அப்போது செய்தி சொல்லும் நாகராஜன், இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக் கொள்வேன். என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று மகாபெரியவர் பாதுகையைக் கழட்டுவதற்குக் காத்திருந்தார்.

பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம் கொடுத்து, இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார் பெரியவர்.

நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார்.

அப்படிப்பட்ட அன்புக்கு, அந்த ஏழைப் பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபா தரோம், இந்தப் பாதுகையைக் கொடு" என்றனர். அவள் அசையவேயில்லை.

பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார். அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல், ஏதாவது பழம் போன்றவற்றை அதில் போட்டுத்தான் அனுப்புவார். அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?" என்று புலம்பினாள். கூடையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை,‘போயிடுத்து,போயிடுத்து’னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோல் பல நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரத்யட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",

"என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா,..சொல்லட்டுமே!"

(தரிசனம் பண்ண வரவாளெல்லாம், சொந்தக் குடும்பப் பிரச்சனைகளையெல்லாம் சொல்லுவா-"மாடு கன்னு போடணும். பிள்ளை ஊர் சுத்திண்டு இருக்கான், திருந்தி வரணும். குத்தகை கொடுக்க மாட்டேங்கிறான்')

(சொந்தக் குடும்பப் பிரச்சனை சொல்கிறர்களைப்பற்றி)

மெய் சிலிர்க்கும் பல அனுபவங்கள் இக்கட்டுரையில்.

சொன்னவர்-ஆர் ராமமூர்த்தி சாஸ்திரிகள்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பிரும்மஸ்ரீ ஆர். ராமமூர்த்தி சாஸ்திரிகள்

மகாதானபுரம்பாடசாலையில் அத்யயனம் செய்தவர். மந்தமான புத்தி,அத்துடன் திக்குவாய்! பேசும்போதுதான் திக்கும்.மந்திரம்சொல்லும் போது எவ்விதத் தடங்கலும் இருக்காது.

பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே?

வைதீகம்பண்ணி பிழைக்க முடியாது.இவரை யாரும் கூப்பிட்டுஆதரிக்க மாட்டார்கள்.

இருபத்தி நான்கு வயதானபோது 1957-ல் ஸ்ரீமடத்தில்சேர்ந்து விட்டார். தந்தை,'இவன் ஒண்ணுக்கும்பிரயோஜனமில்லே,புத்தி மந்தம்,மடத்திலே ஏதாவதுகைங்கர்யம் பண்ணிண்டிருக்கட்டும்' என்று, மகா சுவாமிகளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், தகப்பனார்.

:வஸ்திரம் தோய்த்து உலர்த்து' மூகபஞ்சசதி படி"என்று மகாஸ்வாமிகள் உத்திரவிட்டார்.

ஸ்ரீ சாஸ்திரிகளுடைய கைங்கர்யம் இன்றும் தொடர்கிறது.மகாப் பெரியவாளைப் பற்றிச் சொல்லும்போதே,முகம் மலர்ந்து போகிறது.

"ரொம்ப ஆனந்தமான காலம்!...ரொம்ப பாக்யம்! அவர்சொன்னபடி, அப்பப்போ, மூக பஞ்சசதீ படிப்பேன்.திக்குவாய் போன இடம் தெரியல்லே! அவா அனுக்ரஹம்.

ஒரு நாளைக்கு ஐந்தாறு தடவை குளிப்பார்.(பெரியவா)அப்போவெல்லாம், நாங்க காகிதத்தைத் தொட்டால் கூடவிழுப்பு! காகிதத்தைத் தொட்டுட்டா, நாங்க ஸ்நானம்பண்ணணும்!.

தரிசனம் பண்ண வரவாளெல்லாம், சொந்தக் குடும்பப்பிரச்சனைகளையெல்லாம் சொல்லுவா-

"மாடு கன்னு போடணும். பிள்ளை ஊர் சுத்திண்டு இருக்கான், திருந்தி வரணும். குத்தகை கொடுக்க மாட்டேங்கிறான்'

இப்படியெல்லாம் அவா சொல்றதை, மகாப் பெரியவாபொறுமையா கேட்டிண்டிருப்பா.

"என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா,..சொல்லட்டுமே!" என்றார்.

சில சந்தர்ப்பங்களிலே, தரிசனார்த்திகள் நிறையப் பேர்வந்துட்டா, பூஜைக்கு நேரமாயிடும். 'பூஜைக்குநாழியாகிறதே' என்றால், "ஆகட்டும், இவ்வளவு பேரும்எங்கிருந்தோ வந்திருக்கா. அவாளுக்குத் திருப்திஏற்பட வேண்டாமா?" என்பார்.

1980லேர்ந்து எனக்கு வயிற்றுவலி."இப்படியே ஓட்டு"ன்னார் மகா பெரியவா.89லே, வயிற்று வலி தாங்க முடியல்லே.டாக்டர் பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணிக்கோன்னார்.பெரியாவாகிட்ட சொன்னேன்

."ஆபரேஷன் பண்ணிக்க வேண்டாம்-னுட்டார்.

'பெரியவா உச்சிஷ்டத்தைச் சாப்பிடு';ன்னு ஒரு சிஷ்யர் சொன்னார்.

அதன்படி, ஒரு நாள் பெரியவா பிக்ஷை ஆனதும்அவா சாப்பிட்ட இலையிலே மிச்சமிருந்ததை எடுத்துச்சாப்பிட்டேன்.அதைப் பார்த்துட்டு பெரியவா சிரிச்சா!...அப்புறம் வலியே இல்லே!......

தரிசனத்துக்கு வருபவர்களில் யாராவது, 'தொண்டை ,மூக்கு,காது,கண்-இப்படி, ஏதாவது'ஆபரேஷன் பண்ணிக்கணும்.நல்லபடியா நடக்கணும்னு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்'னு கேட்டால்."ஆபரேஷன் வேண்டாம்"னு பெரியவா சொல்லுவா.நோய் தானே சரியாய் போயிடும்! இப்படி ஏராளமானபேர்களுக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கா.

என் வீட்டுப் பெண்-பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்ததே பெரியவா தான்.என்ன செலவாச்சுன்னுஇன்றுவரை எனக்குத் தெரியாது.கன்னிகா தானமாஏற்பாடு பண்ணினார். கோத்ரம் மட்டும் கேட்பார்.நக்ஷத்திரம் கூடக் கேட்கிறதில்லே. ஜாதகமே இருக்காது!

பெரியவா வாக்கே, அருள் வாக்கு.

"உன் பொண்ணைக் கொடு; புள்ளையைக் கொடு"ன்னுசொல்றது மட்டுமில்லே, கல்யாணத் தேதியைக் கூடக்கொடுத்துடவா. ஸ்மார்த்தா-வடமா-பிரஹசரணம்இதுகளிலே என்ன பிரிவுன்னு கேட்டுப்பா.

ரொம்ப ஆனந்தமான காலம்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",


மழையே வா!"

ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கான எல்லா விஷயங்களையும் காஞ்சி மகானின் ஆலோசனை கேட்டுக் கேட்டே செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்த ஸ்தபதிகள்.

அந்த சமயத்தில் ஒரு நாள், அந்தக் கோயிலின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்யலாமா? என்று கேட்டுச் செல்வதற்காக வந்திருந்தார், தலைமை ஸ்தபதி. அவர் செய்யலாம் என்று சொன்ன மாற்றங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்ட மகாபெரியவா, "நீ சொல்றதையெல்லாம் இப்படி வார்த்தைகளா இருக்கறதைவிட படமா இருந்தா தீர்மானம் செய்யறதுக்கு சுலபமா இருக்கும். நீ ஒண்ணு செய். அந்தக் கோயிலோட புராதன அமைப்பு எப்படி இருக்கு என்பதை ஒரு வரைபடமா வரைஞ்சு எடுத்துக்கோ. அதோட, இப்போ நீ சொல்ற மாற்றங்களை எப்படிச் செய்யப் போறே? அதை செய்த பிறகு அமைப்பு எப்படி இருக்கும்? என்பதை இன்னொரு படமா வரைஞ்சுக்கோ. ரெண்டு படத்தையும் பார்த்து மாற்றம் செய்யலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது சுலபமா இருக்கும்!" என்று சொன்னார்.

அப்படியே வரைந்து எடுத்து வருவதாகச் சொன்ன ஸ்தபதி, நாலைந்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வந்தார்.

அவர் வந்த நேரம், மகாபெரியவா புனரமைப்புப் பணி நடந்துகொண்டிருந்த கோயிலுக்குப் பக்கத்தில், ஒரு அரசமரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.

வரைபடங்களை எடுத்து வந்த ஸ்தபதி, அதை மகாபெரியவாளிடம் கொடுத்தார். தமக்கு முன்னால் ஒரு வஸ்திரத்தை விரித்துப் போடச் சொல்லி, அதில் அந்தப் படங்களை விரித்து வைக்கச் சொன்னார், மகான்.

அப்படியே ஒரு தூய்மையான துணி விரிக்கப்பட்டு, அதன் மேல், வரைபடத்தைப் பிரித்து வைத்தார், ஸ்தபதி. சரியாக அதே நேரம், பொட் என்று ஒரு நீர்த்துளி ஸ்தபதி மேல் விழுந்தது. மேலே நிமிர்ந்து பார்த்த ஸ்தபதி, மழைத் தூறல் அது என்பதை புரிந்து கொண்டார். அதற்குள் மேலும் இரண்டு மூன்று துளிகள் மழை விழுந்தது. சட்டென்று வரைபடத்தைச் சுருட்ட ஆரம்பித்தார், ஸ்தபதி. அதற்குள் இன்னும் கொஞ்சம் வேகமாக மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன.

"என்ன, ஏன் வரை படத்தைச் சுருட்டறே. பிரிச்சு வை!" ஒன்றுமே தெரியாதவர்போல் சொன்னார், பெரியவா.

"இல்லை...சுவாமி...மழை வருது...படம் நனைஞ்சுட்டா, வீணாகிடும். அதான்...இதை உள்ளே கொண்டுபோய்ப் பார்க்கலாம்னு...!" இழுத்தார், ஸ்தபதி. இப்போது மழை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது.

"ஓ...அப்படியா சொல்றே? இப்போ இங்கே இந்த வரைபடத்தைப் பார்க்க முடியாதபடி மழை தடுக்கறதாச் சொல்றே...ஆனா, சுவாமியோட திருப்பணிக்கான காரியங்கள் எதுவும் இயற்கையால எந்தத் தடையும் வராதுன்னுதான் எனக்குத் தோணறது!" சொன்ன மகாபெரியவா, மெதுவாகத் தலையை உயர்த்தி, வானத்தைப் பார்த்தார். திருக்கரத்தை உயர்த்தி ஒருமுறை அசைத்தார்.

அவ்வளவுதான் சட்டென்று நின்று போனது மழை. "இப்போ வரைபடத்தைப் பார்க்கறதுல எதுவும் பிரச்னை இல்லையே...!" மென்மையாகப் புன்னகைத்தார், மகான்.

அடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக, அந்த வரைபடங்களைப் பார்த்து, என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம், எவையெல்லாம் வேண்டாம் என்றெல்லாம் அறிவுரைகள் தந்த மகான், ஒரு கனியைக் கொடுத்து ஸ்தபதியை ஆசிர்வதித்தார். பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, வரைபடங்களை பாத்திரமாகப் பையில் வைத்துக்கொண்டு ஸ்தபதி புறப்பட்டார். அவர் சென்ற கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, இதுவரை தடுத்து நிறுத்தியதுபோல் நின்றிருந்த மழை, சரசர என்று பெய்யத் தொடங்கியது.

வேகமாக தண்ணீர் வரும் குழாயை, அழுத்தமாகத் திருகி மூடினால்கூட இரண்டொரு துளி நீராவது வந்து பிறகுதான் நிற்கும். ஆனால், இங்கே இயற்கையாகப் பெய்து கொண்டிருந்த மழையை, ஒரே ஒரு கை அசைவில் நிறுத்திவிட்டார், மகான். அதுபோலவே ஸ்தபதி வரைபடத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், தடுத்து நிறுத்திய மழையை மறுபடியும் பெய்ய வைத்திருக்கிறார்.

இயற்கையைக் கட்டுப்படுத்துபவன் இறைவன் என்றால், அந்த இறைவனுக்குச் சமமாக இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்த (செய்கிற) மகாபெரியவாளை அந்த தெய்வத்தின் அம்சம் என்றே பக்தர்கள் கொண்டாடுவதில் சந்தேகத்திற்கு இடமே இல்லைதானே!

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்! குருவே சரணம்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்",


“பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை."

( "எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது....ஈசுவராக்ஞை" )

(கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது.

"என்ன சமாசாரம்னு கேளு" என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.

கூர்கா சொன்னார்.

"நான் பிறந்ததிலிருந்தே கஷ்டங்களைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ஏதோ புண்ணிய வசத்தால் தெய்வ ஸ்வரூபமான பெரியவா தரிசனம் கிடைச்சிருக்கு....இனி எனக்கு ஜன்மாவே வரக் கூடாது என்று அனுக்ரஹம் பண்ணணும்..."

"ஆகா,அப்படியே ஆகுக! உனக்கு இனி ஜன்மாவே கிடையாது!"என்று பெரியவாள் சொல்லி விடவில்லை.

பின் மெதுவாகச் சொன்னார்கள்.

"அந்த மாதிரி வரம் கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை. நான் தினந்தோறும் பூஜை செய்யும் சந்த்ரமௌளீஸ்வரரையும் த்ரிபுர சுந்தரியையும் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...."

கூர்காவுக்கு இந்தப் பதில் நியாயமாகப்பட்டது போலும். ஒரே குதூகலம் அவருக்கு.

பிரசாதம் பெற்றுக் கொண்டு;, "எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது....ஈசுவராக்ஞை" என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே போனார்.

"ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி, எனக்கு ஜன்மா வரக் கூடாதுன்னு கேட்டு, இவன் ஒருத்தன் தான் வந்திருக்கான்!" என்று கண்களில் ஞானஒளி வீசக் கூறினார்கள் பெரியவா.

"மனுஷ்யனாக அவதாரம் பண்ணிய ராமன், எந்தத் தைரியத்தில் ஜடாயுவுக்கு ஸ்வர்க்க லோகத்தைக் கொடுத்தான்? அவனறியாமல் நாராயணத்வம் வெளிப்பட்டு விட்டது" என்று ஒரு பௌராணிகர் கூறியது நினைவுக்கு வந்தது.

பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை.

கூர்காவுக்குத் தெரிந்திருந்தது

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்" (02.11.2019)

Saturday, மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

11-12-2012 போஸ்ட்.

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக் கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்..

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.

அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு

பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் "கலிஃபோர்னியா" என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து

பெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROU
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம். பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல் வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்து ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?" போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான். தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள் என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம் மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச் சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல் வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொன்னவர், அதற்கேற்ற விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப் புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!" என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல் எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார். அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாகஇருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி, புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம் குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால் தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம் எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROU







To:
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

கண் திறந்த கணபதி.

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....

தஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார். ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.
சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?" என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு. வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார்.

கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,

"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.

"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; "எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே.. இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார்.

சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று கூறினார். குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது.

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் சதுக்கின நான்தானே தொறக்கணும் ..இன்னும் அது ஆவுலீங்க.."

மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் "மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டு விட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை' கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.

"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும். இருந்தாலும் எங்கையால் நான்இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க.... இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலைபத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்.. சொல்லலாங்களா?" என்று கேட்டான் பவ்யமாக.

"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க!

எப்படீன்னா ஒரு பத்துநாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில்நேரமுங்க. இதோ ஒக்காந்துருக்காரே புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலைபண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும், சுத்தியையும் எடுத்துக்கிட்டு, எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

"இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே

'புள்ளையாரே,கண்ணத்தொற..புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.

."புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரைவிழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.

மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.

அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது;

"புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமாதெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ? போங்கோ....போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"வாரியாரும் பெரியவரும்"

(""நீ மார்பில் சிவலிங்கம் தரித்துக் கொண்டிருக்கிற சைவன். விழுந்து வணங்கினால் சிவலிங்கமும் கீழே விழும். அதனால், விழுந்து வணங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே?-பெரியவா)

இன்று வாரியார் முக்தி நாள்.

(2010-ல் தினமலரில் வந்த கட்டுரை)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார் மீது தனிப்பட்ட கருணை ஏற்பட்டது. அங்கு ராமாயண விரிவுரையும் செய்தார். அதன் நிறைவு விழாவன்று, சுவாமி நானூறு ரூபாய் மதிப்புள்ள சாதராவை அனுப்பி ஆசியளித்தார். ஒருமுறை பெரியவர் சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தார். வாரியார் அவரைக் காண விரும்பினார். மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ராஜகோபுரத் திருப்பணிக்காக இருமுறை தொடர் விரிவுரை செய்து உதவியதால், அக்கோயிலின் அறங்காவலர் துரைசாமி ஐயங்கார், வாரியாருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். அவரிடம் பெரியவரை எப்போது தரிசிக்க முடியும் என்று அறிந்து வருமாறு ஆள்அனுப்பினார் வாரியார். அவர் போய், மறுநாள் மாலை மூன்று மணிக்கு பெரியவரைத் தரிசிக்க நேரம் கிடைத்துள்ளதாக தகவல் கேட்டு வந்தார். மறுநாள் மாலை மூன்று மணிக்குச் சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார் வாரியார். அங்கிருந்த மடத்து காரியஸ்தர்,"" நீங்கள் வந்திருக்கின்றீர்களா என்று பெரியவாள், இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டார்கள். சீக்கிரமாகப் போங்கள்,'' என்றார். வாரியார் விரைந்து சென்றார். அங்கே காஞ்சிபெரியவர் மணல் கேணி (சுவாமிகள் குளிப்பதற்கான கிணறு)அருகே அமர்ந்திருந்தார்.

""நீங்கள் விழுந்து வணங்கக் கூடாதாம். இது சுவாமிகளின் கட்டளை!'' என்று மடத்துக் காரியஸ்தர் வாரியாரிடம் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், வாரியார் பெரியவரைக் கண்டதும், அடியற்ற மரம் போல வீழ்ந்து நமஸ்காரம் செய்தார். பெரியவர் வாரியாரிடம்,""நீ மார்பில் சிவலிங்கம் தரித்துக் கொண்டிருக்கிற சைவன். விழுந்து வணங்கினால் சிவலிங்கமும் கீழே விழும். அதனால், விழுந்து வணங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே? அவர்கள் சொல்லவில்லையா?'' என்று கேட்டார். வாரியார் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றார்.

பெரியவர் வாரியாரிடம், ""உன் தம்பி திருமாமணாளன் சவுக்கியமா?'' என்று கேட்டார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார் வாரியார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் என்னும் ஊரில், வாரியாரின் தம்பி திருமாமணாளன், மாணவர்களுக்கு தேவாரம், திருப்புகழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெரியவர் அந்த ஊரில் தங்கியிருந்தார். அவருடைய பூஜையில் திருமாமணாளன் தேவாரம், திருப்புகழ் பாடினார். அங்கிருந்தவர்கள், ""இவர் வாரியார் தம்பி திருமாமணாளன்'' என்று பெரியவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த ஒருமுறை தான் காஞ்சிப்பெரியவர்வாரியாரின் தம்பியைச் சந்திருந்தார். அதன்பிறகு சந்திக்கவே இல்லை. அவரது பெயரும் பத்திரிகையில் வரக்கூடிய அளவுக்கு பிரபலமானது அல்ல. அவரிடம் பழகியவர்கள் கூட "திரு' என்ற சொல்லை அடைமொழி என்று எண்ணிக் கொண்டு "மாமணவாளன்' என்று தான் சொல்வார்கள். ஆனால், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வாரியாரிடம் ""தம்பி திருமாமணாளன் சுகமா?'' என்று கேட்ட பெரியவரின் நினைவாற்றலை எண்ணி வியப்படைந்தார்

.இந்த சமயத்தில், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அங்கு வந்தார். பெரியவரிடம், ""இவர் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணி செய்தார்,'' என்று சொல்ல ஆரம்பித்ததுமே, பெரியவர் சிரித்துக் கொண்டே, ""அதெல்லாம் சரி. உங்கள் ஊரில் செய்த திருப்பணியைச் சொல்லவில்லையே?'' என்று கேட்டு அவரை மடக்கினார். அவருடைய ஊர் மோகனூர். அங்குஅருணகிரிநாதருக்கு அறச்சாலைத் திருப்பணி செய்திருந்தார் வாரியார். அவ்வழியாகச் சென்ற பெரியவர் ஒருமுறை அங்கு தங்கி பூஜை செய்தார். அதைத் தான் அப்படி குறிப்பிட்டு,

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' என்று சொல்லாமல் சொன்னார்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

(ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)

நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)

தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.

அந்த வரிசையில நிற்கற சமயத்துலயே அவரோட கண்ணுலேர்ந்து வழிஞ்சுண்டு இருந்த நீர், அவர் ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கார்ங்கறதை உணர்த்தித்து. வழக்கமா, யாராவது பெரிய சங்கடத்தோட வந்திருக்கான்னு தெரிஞ்சா, மகாபெரியவா அதை தானாவே உணர்ந்து, அவாளைக் கூப்பிடச் சொல்லி முன்கூட்டியே தரிசனம் தந்து அவாளுக்கு ஆறுதலோ, ஆலோசனையோ சொல்லி அனுப்புவார்.அதே மாதிரி, இவரையும் ஆசார்யா கூப்பிடுவார்னு வழக்கமா வர்றவா பலரும் நினைச்சா. ஆனா,அப்படி எதுவும் நடக்கலை.

வரிசை நகர்ந்து தன்னோட முறை வந்து மகாபெரியவா முன்னால போய் நின்னதும், அதுவரைக்கும் சத்தம் இல்லாம அழுதுண்டு இருந்தவர்,வாய்விட்டுக் கதறி, 'ஓ'வென்னு அழ ஆரம்பிச்சுட்டார்.,சில நிமிஷத்துக்கு அப்புறம்.

"பெரியவா...நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்.. என்னோட கிட்னி ரெண்டும் சரியா வேலை செய்யலைன்னு டாக்டரெல்லாம் சொல்றா. ஆறேழு மாசமா மருந்தெல்லாம் எடுத்துக்கறேன்.ஆனா, ஒரு துளி முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகிண்டுதான் இருக்குன்னு சொல்றா.. எனக்கு என்ன பண்ண்றதுன்னே தெரியலை.. அதான் இங்கே ஓடி வந்திருக்கேன்...!" தழுதழுப்பா சொன்னார்.

"ஓஹோ...ஒனக்குப் பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் நல்லதெல்லாம் ஞாபகத்துக்கு வருதோ?" வழக்கமா கஷ்டம் பிரச்னைன்னு வர்றவாகிட்டே கொஞ்சம் ஆறுதலா பேசக் கூடிய மகாபெரியவா, அவர்கிட்டே ஏதோ கொஞ்சம் கடுமையாவே பேசினார்

வந்தவர்,கையைப் பிசைஞ்சுண்டு எதுவும் பேசாம தலைகுனிஞ்சு நிற்க ஆசார்யாளே பேசத் தொடங்கினார்.

"தானம்,தர்மம்,நல்ல காரியங்கள். இதெல்லாம் அந்தக் காலத்துல பலரும் பண்ணிண்டு இருந்தா. நாடும்,அவா அவா குடும்பமும் செழிப்பா இருந்தது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சுது.சுபிட்சமும் நிலவித்து. ஆனா இப்போ,முன்னோர்கள் என்ன்வோ முட்டாள்தனமா செலவு பண்ணிட்டதா நெனைச்சுண்டு அவா செஞ்ச தர்மகாரியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டா இந்தத் தலைமுறைக்காரா.

எப்போ தர்ம காரியங்களைத் தடுத்து நிறுத்தறோமோ அப்பவே இந்த மாதிரி சங்கடமெல்லாம் தலைதூக்கறதுக்கு நாமளே வழி செஞ்சு விட்டுடறோம். அதெல்லாம் வந்ததுக்கு அப்புறம் வந்துடுத்தே வந்துடுத்தேன்னு பிராயச்சித்தம் தேடறோம்!" கொஞ்சம் கடுமையாகவே சொன்னார்,மகாபெரியவா

வந்தவர் அப்படியே மகாபெரியவர் திருவடியில விழுந்தார்.

".என்னை மன்னிச்சுடுங்கோப்பெரியவா. என்னோட முன்னோர்கள் மாசத்துக்கு ஒருதரம் அன்னதானம் செய்யறதையும்,நிரந்தரமா தண்ணீர்ப் பந்தல் வைக்கறதையும் வழக்கமா வைச்சிருந்தா. அதுக்காக தனியா இடமெல்லாம் கூட இருந்தது. நான் பாவீ! அதெல்லாம் வீண் விரயம்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு,அந்த இடத்தையும் வித்துட்டேன்..! அந்தப் பாவம்தான் போல இருக்கு எனக்கு. இப்படி ஒரு தீராக் கஷ்டம் வந்துடுத்து...!" சொன்னவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.

ஒரு சில நிமிஷத்துக்கு அப்புறம்,"பெரியவா, நான் நிறுத்தின எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிச்சுடறேன். எனக்கு நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணினாலே போதும்.இந்த கிட்னி பிரச்னையை எனக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்கறேன்!: தழுதழுக்கச் சொன்னார்

அன்பே வடிவான தெய்வம் யாரையாவது தண்டிக்க நினைக்குமா என்ன? அது நினைப்பதெல்லாம் தவறை உணரணும் என்பதைத்தானே..! தவறை உணர்ந்தாலே மன்னிப்பு அருளும் மகத்தானது அல்லவா தெய்வம்! வந்தவரை மன்னிச்சுட்டதுக்கு அடையாளமா வாத்ஸல்யமா பார்த்தார் மகாபெரியவா.

"நாட்டு மருந்துக் கடையில வசம்புன்னு ஒரு மருந்து விற்பா... பிள்ளைவளர்ப்பான்னு அதுக்கு சூசகமான பேரு உண்டு. சந்தனக் கல்லுல உரைச்சு, தினமும் உன் தொப்புளைச் சுத்திப் போட்டுக்கோ..!" சொன்ன பெரியவா, ஆசிர்வதிச்சு அவரை அனுப்பினார்.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிஞ்சிருக்கும்.ரொம்ப சந்தோஷமா வந்தார் அந்த பக்தர்.ஆசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

"பெரியவா,நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன்.நேத்திக்கு என்னை பரிசோதிச்ச டாக்டர்கள், 'சிறுநீரகத்துல எந்தக் குறையுமே இல்லை.இது என்ன அதிசயம்!'னு கேட்கறா...

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"

(பிக்ஷைக்கு நேரமாவதால் கடிகார நேரத்தை மாற்றிய தொண்டரின் குட்டு வெளிப்பட்ட சம்பவம்)

(08-11-2018 சாய் டி.வி.யிலும் கணேச சர்மா சொன்னார்)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-147
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம் என்பதற்கெல்லாம் நேர ஒதுக்கீடு கிடையாது. பிக்ஷை' பண்ண வேண்டியிருக்கிறதே!' என்பது போல விட்டேற்றியாகப் பிக்ஷை செய்வார்கள்.

ஆனால், அவருக்குத் தொண்டு செய்யும் பக்தர்களுக்கு அப்படி இருக்க முடியுமா?

காலம் கடந்து கொண்டு இருப்பதை, வயிறு நினைவூட்டுகிறது. பெரியவாள் பிக்ஷை செய்யாதிருக்கும்போது, இவர்கள் உணவு கொள்ள முடியாதே? அப்படி ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.

சாயங்காலம் மணி நாலு ஆனாலும், உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்

.அணுக்கத் தொண்டர்களுக்கு ஆத்திரமாக வரும். என்ன செய்ய? பெரியவாளுக்கு நினைவுபடுத்த முடியுமா? அல்லது பக்தர்களைத்தான் விரட்ட முடியுமா?

துணிச்சலான ஒரு தொண்டர்,ஓர் உபாயம் கூறினார்.

பெரியவாள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி ஒரு டைம் - பீஸ் இருக்கும். அதை அவ்வப்போது பார்க்கவும் செய்வார்கள்."இதைப் பாருங்கோடா...மணி மூணரை ஆகியிருக்கும் .போதே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி நாலரை ஆக்கி விடுகிறேன்..சரியா?- துணிச்சல் தொண்டர். உடன் உழைக்கும் நாலைந்து பேரும் 'சரி' என்று தலையாட்டினார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அன்றைக்கு கடிகாரத்தையே பார்க்கவில்லை பெரியவாள்.ஒரு மணி நேரம் தள்ளி வைத்து மணி ஐந்தைக் காட்டியதும் சாவகாசமாக எழுந்தார்கள், பிக்ஷைக்கு.

நாலைந்து நாள்கள் இப்படியே கழிந்தன.பெரியவாளை, கொஞ்சம் ஏமாற்றிவிட்ட அசட்டுத் திருப்தி தொண்டர்களுக்கு

ஒரு பக்தர் வந்தார்.பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி.

"பெரியவாள்...சாட்சாத் பரமேஸ்வரன் அவதாரம்..சுத்தஸத்வஸ்வரூபம்..ஸ்படிகம் மாதிரி.. சச்சிதானந்தம்... ஞானத் திருவுரு..." என்றெல்லாம் மனமுருகித் தோத்திரம் .செய்தார்.

அவர் பேசி முடித்ததும், பெரியவாள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.;

" நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. எங்கிட்ட என்னசக்தி இருக்கு? இதோ இருக்கிற இந்தக் கடிகாரம் கூட சரியான நேரம் காட்றதில்லே ..ரொம்ப வேகமாப் போறது! எங்கிட்ட ஏதாவது அபூர்வ சக்தி இருந்தா, அந்த முள்ளைப் பின்னுக்குத் தள்ளி வைக்க மாட்டேனா?"

துணிச்சல்காரத் தொண்டர் தடாலென்று விழுந்து தேம்பினார்.

"சரி...சரி...எழுந்திரு. எனக்குக் கடிகாரம் வேண்டாம். காலண்டர் போதும். உங்களுக்குப் பசிக்கும் என்கிற எண்ணம் எனக்குத் தெரியாமல் போயிடுத்தே!"

அத்தனை தொண்டர்களும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்புக் கோரினார்கள்.

பெரியவாளை ஏமாற்றவும் முடியாது;(தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

சாப்பாடு போஜனம்பத்தி காஞ்சி பெரியவர் விளக்கம்

கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.

வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''

அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"

''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,

பட்சணம்,கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று.

இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணியதெளிக்கிறா

அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா

பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும் தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காக த்தான்

"மொதல்ல குழம்பு.

இதுல, 'தான்' இருக்கு.

தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா.

நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம்.

அந்தத் ''தானை'' கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா.

அதாவது ''ரச'' மான மன நிலை.அதுதான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாக வும், பட்சணமாகவும் ஆயிடறது..

கடோசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது?

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்

வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?

நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை.

அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும்.

ஒவ்வொரு நாளும் போஜனம்

பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும்.

அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சார் ஸ்ரீமகாபெரியவா.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்"

(அவர் தவறு செய்தார்' என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன்.
(வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கியிருந்து வேதம் கற்றுக்கொள்ளும் மாணவன்)

அவன் பயின்ற வேதத்தில் ஒரு பகுதியை சொல்லச் சொன்னார்கள் பெரியவாள். ஒரு சிறு பகுதியை மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார்கள். அருகிலிருந்தவர்களுக்கெல்லாம் விநோதமாக இருந்தது .அந்த வேத வாக்கியங்களில் தனிச் சிறப்பாக ஏதுமில்லை .பின், ஏன் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்கிறார்கள்?

அந்த பையனுடைய தகப்பனாரேதான் அவனுக்கு ஆசிரியர். அந்த ஆசிரியரையும் அதே பகுதியைசொல்லச் சொன்னார்கள் பெரியவா.

அவரையும்,பல தடவை,அந்தப் பகுதியை சொல்லச் சொன்னார்கள்.

திகைப்பு.மௌனம்.

"அந்த மந்திரத்தில் (வாக்கியத்தில்) 'த்' என்று ஒரு எழுத்து தொக்கி நிற்குமே? அதைப் பையன்சொல்லவில்லையே? நீங்களும் கவனிக்கவில்லை போலிருக்கு...."

ஆசிரியர் (கொஞ்சம் வெட்கத்துடன்) நெளிந்தார். ஏனென்றால்,அவருக்கும் அந்த 'த்' மனப்பாடம்ஆகவில்லை!.

பெரியவாள், 'அவர் தவறு செய்தார்' என்று சுட்டிக் காட்டி,அவர் மனத்தை புண்படுத்தவில்லை.

அத்துடன் 'த்' என்ற தொக்கி நிற்கும் சொல் இல்லாமலே,பரம்பரையாக பாடம் ஏற்பட்டு விட்டால் பின்னால், கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். மேலும்,வேத வாக்கியத்தை சரியாக உச்சரிக்காத குற்றமும் (பாவமும்) வந்து சேரும்.

இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி - அவன் கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சு போகும்னு என்று உணர்த்தின சம்பவம்*?

"பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?" ஜமீன்தார்.

ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம். எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர். எதிர்பாராத விதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார். தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர் சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார். அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல முகாமிட்டிருந்தா. அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும் மஹா பெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.

வெறும் கையோட வந்திருந்ததுலயே விரக்தி பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. வழக்கம் போல் இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார். பெரியவா நான் பண்ணாத தர்மம் இல்லை. செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை. அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.

அமைதியா கேட்டு கொண்ட மஹா பெரியவா நீ இப்ப ரொம்ப விரக்தில இருக்கே. உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை சொல்றேன் அப்படின்னார். உப்பு விக்கறவனுக்கு உப்புக் கொறவன்னு பேர். அப்படி ஒரு உப்புக் கொறவன் இருந்தான். காமாட்சியோட பரம பக்தன் அவன். கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷி தான் எழுந்திருப்பான். தூங்கப் போறச்சேயும்
அம்பாள் பேரைச் சொல்லிட்டு தான் படுத்துக்குவான். உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு கொண்டு வருவான். பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமே வாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும் அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை வசதி எல்லாம் கிடையாது. ஒத்தையடிப் பாதை தான். அதனால் திருடாளும் நிறைய இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு வர்ஷிச்சுது. உப்புக் கொறவனும் பரபரப்பா உப்பு மூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து. அவ்வளவு தான் அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன் லாபம் இல்லா விட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து. அவனோட விரக்தி அப்படியே கோபமா மாறித்து. அது அப்படியே காமாக்ஷி மேல திரும்பித்து. காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாது என்கிறதுக்காக வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே
அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும். ஏன்னா தாயாரான உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!" அப்படின்னு வெறுப்பா கத்தினான். கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு
வெறுங்கையோட பொறப்பட்டான். அப்படியே போயிண்டு இருந்தவன்... டேய் பிடிங்கடா அவனை...க்ஷஅவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!" அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கி போய் நின்னான். அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.

"மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே அவன் மடியில, இடுப்புல, கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை. ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை. பணமா? ஏது பணம்? அதான் கொண்டு போன உப்பு மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே... அப்புறம் ஏது வியாபாரம் ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.

"இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால பிழைச்சே போ!" அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள். மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது. இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம வந்திருந்தா உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான். நாம கும்பிடற காமாக்ஷி தான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச் சொல்லி வேண்டிண்டான்.

மஹா பெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது. தனக்கு ஏதோ ஒரு காரணத்துனால தான் இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.

கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க வந்தார். பெரியவா நமஸ்காரம் போன தரம் நான் வர்றச்சே என்னோட சொத்து மொத்தமும் பறிபோக போறது மாதிரியான சூழல் இருந்தது. ஆனா இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன். உங்களை சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு நமஸ்காரம் பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ"

உப்பு கரைஞ்சு போன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே உன்னோட கஷ்டமும் ஒரு நாள் மொத்தமா கரைஞ்சஉணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்தபொழுது அந்த மஹான் இரண்டு வெளிநாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை.

அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே தெரியாது. நான் மிகவும் பொறுமை இழந்துவிட்டேன். வழக்கம்போல் அப்பொழுதே மாலை 5 மணியாகி விட்டது. பெரியவாள் தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீகாமாட்சி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பஸ் பிடித்து விழுப்புரம் திரும்ப வேண்டும். என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.

அப்பொழுது அங்கு வந்த ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகளை சந்தித்துப் பேசினேன். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் கடந்த 60 ஆண்டுகளாக மஹாபெரியவாளிடம் சேவை செய்து வருபவர். அவருக்கு பெரியவாளைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது. அவரை மஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் உள்ள அனைவரையும் அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடக் கூடாது. அவரை ப்ரம்மஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருந்தார்கள்.

‘இப்படி வருகின்ற வெளிநாட்டுக்காரர்களை பெரியவாள் வேறு ஒரு நேரத்தில் அழைத்து பேசக் கூடாதா? என்னைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணியாக காத்துக் கொண்டிருக்கிறோமே! எப்பொழுது நாங்கள் ஊர் திரும்புவது’ என்று அவரிடம் நான் குறைபட்டுக் கொண்டிருந்தேன். ப்ரம்மஸ்ரீ அவர்கள் என்னை பார்த்து ‘நீங்கள் ஒரு மணி நேரமாகத்தானே வெயிட் பண்ணுகிறீர்கள். அந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் பெரியவாளிடம் பேச கடந்த மூன்று நாட்களாக காத்துக் கொண்டிருந்துவிட்டு இன்றுதான் அதுவும் இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்கள்.

‘அவர்கள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறார்கள்? ஸ்ரீமடத்தில் நீங்கள் அவர்களுக்கு மஹாபெரியவாளின் தரிசனத்திற்கு ஏன் ஏற்பாடுகள் செய்யவில்லை’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் நிதானமாக சொன்ன விஷயம் இதுதான். அவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் நம்முடைய வேதசாஸ்திரம் மற்றும் வேதாந்தம் பற்றி படித்து டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கிறார்கள். அவர்கள் படித்தது போதுமா இல்லை இன்னும் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்தை அவர்களுடைய பேராசிரியரிடம் அங்கு கேட்டார்களாம். அதற்கு அந்த அமெரிக்கர் இவர்களை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிப் பெரியவரை சந்தித்து உங்கள் சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஒருவரால்தான் உங்கள் சந்தேகங்களை தீர்க்க முடியும் என்று இங்கு அனுப்பிவிட்டாராம்.

அவர்கள் 3 நாட்களுக்கு முன்னால் அவர்களுடைய இந்த பெரிய சந்தேகத்தை மஹாபெரியவாளிடம் கேட்டார்களாம். அந்த மஹான் அதற்கு அவர்களை கூர்ந்து பார்த்து “Just Wait” (கொஞ்சம் பொறுங்கள்) என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம். பிறகு அந்த இரண்டு ஜெர்மனியப் பெண்களும் பெரியவாளின் அருகில் உள்ள மேடையில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். மஹாபெரியவாளோ அந்த திக்குகூட திரும்பவே இல்லையாம்.

வெகுநேரம் கழித்தும் பெரியவாள் அவர்களை அழைக்கவே இல்லையாம். ஸ்ரீமடத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை சந்தித்து ‘நாங்கள் வேண்டுமானால் ஸ்வாமிகளிடம் போய் ஞாபக படுத்துகிறோம். ஒருவேளை அவர் மறந்து விட்டார்களோ தெரியவில்லை’ என்று கேட்டார்களாம்.

“No, No” என்ற அந்த இரு பெண்களும் படபடப்போடு துடித்தார்களாம். தயவுசெய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எங்களை எப்பொழுது கூப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். “His Holiness is a great Saint“ (அந்த மஹாப்பெரியவாள் ஒரு புனிதமான, பெரிய சன்யாசி) அவராக எங்களை அழைக்கும் வரையில் நாங்கள் இங்கேயே தங்கி தியானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீமடத்திலேயே தங்கி பழம்-பால் மட்டும் சாப்பிட்டுவிட்டு தியானமே செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் மஹாப்பெரியவாள் அவர்களை அழைத்துவரச் செய்து போதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிக்குள் இப்படி சலித்துக் கொள்கிறீர்களே, அவர்கள் ஒரு சிறிய குறையைகூடச் சொல்லாமல் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் தெரியுமா என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். யாரோ என்னை ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு வருஷங்களாக மஹாப்பெரியவாளுடன் இருந்துவிட்டு இப்படி கேவலமாக நடந்து கொண்டேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ள நான் இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லையே என்று ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

அப்பொழுது மஹாப்பெரியவாள் சட்டென்று எங்கள் பக்கம் வந்து தரிசனம் தந்தார்கள். அந்த மஹானை தரிசித்து நான் செய்த தவறுக்காக அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அந்த இரண்டு ஜெர்மனிய பெண்களை சந்தித்து பேசினேன்.

அப்பொழுது அவர்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. மஹாப்பெரியவாள் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த பொழுதே அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்ததை நாங்கள் பார்த்தோம்.

‘தயவுசெய்து மன்னியுங்கள். நீங்கள் இருவரும் வந்த காரணத்தை நாங்கள் அறிந்துகொண்டோம். நீங்கள் என்ன கேட்டீர்கள், அந்த மஹாஸ்வாமிகள் என்ன கூறினார்? உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கொஞ்சநேரம் பேசவேயில்லை. அவர்கள் இந்த உலகத்திற்கு வருவதற்கே கொஞ்சம் நேரமாகிவிட்டது.

‘ஐயா! நாங்கள் இப்பொழுது ஆனந்த வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி எங்கள் சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்று தெரியவில்லை. அந்த மஹா ஸ்வாமிகளை உணரத்தான் முடியுமே தவிர அவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஸ்வாமிகளை சந்திக்காமல் இவ்வளவு நாட்களை வீணே கழித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறோம்.

நாங்கள் இத்தனை வருடங்கள் வேதாந்தங்களைப் பற்றியும் சாஸ்திரங்களைப் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து வந்தோம். ஆனால் இன்றுதான் எங்கள் ஜென்மா ஆனந்தம் அடைந்தது. இங்கே வருவதற்கு முன்னால், இந்த மஹானை தரிசித்து அருளுரை பெறுவதற்கு முன்னால் நாங்கள் இருவரும் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இந்த பெரியவாளை தரிசித்த பிறகு நாங்கள் இன்னும் எங்கள் படிப்பை ஆரம்பிக்கவேயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம்.

(Before meeting His Holiness Sankaracharriar, we thought that we finished reading everthing. But after this meeting with His Holiness, we have come to a conclusion that we have not yet started the subject at all. He is really very great) என்று அனுபவித்து சொன்னார்கள்.

நம் ஸ்வாமிகளைப் பற்றி அன்னிய நாட்டவர்கள் சொன்னால்தான் நமக்கே அந்தப் பெரியவாளின் அருமையே புரிகிறது. அந்த வெளிநாட்டு பெண்களுக்கு இருந்த பொறுமை நம்மவர்களுக்க வருமா? நிச்சயமாக எனக்கு வராது. தாங்கள் இதுவரை கற்றதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன்னை தாழ்த்திக்கொண்டு சொல்லக்கூடிய பக்குவம் நமக்கு வருமா? அல்லது அவர்களை போல் மூன்று நாட்கள் காத்திருந்து அதுவும் மஹாப்பெரியவாளின் உத்திரவு வரும்வரை நாம் காத்து கொண்டிருப்போமா?

ஆகவே என்னைவிட மஹாப்பெரியவாளை அந்த வெளிநாட்டவர்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பிலேயே! நமக்கும் அப்படி ஒரு உன்னதமான குணம் வர வேண்டுமானால் ‘கொஞ்சம் பொறுங்கள்’ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்."

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!" -- திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா.

( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!" அப்படின்னு உணர்த்தறவிதமா, 'குளிப்பாட்டினுட்டேன்!' என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது)

நன்றி- குமுதம்.லைஃப்

தொகுப்பு-ரா.வேங்கடசாமி

28-03-2018 தேதியிட்ட இதழ்(21-03-2018 வெளியானது).

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கணேசன் கனபாடிகள் என்பவர்,வேத பாட சாலையில் படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது

அந்தக் காலத்து மாணவர்கள் விடுமுறையில் தங்கள் ஊருக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், தங்கள் குருவிற்கு காணிக்கையாக அன்போடு ஏதாவது பொருளை வாங்கி வருவது உண்டாம்.

அப்படி ஒரு சமயம் மாணவனாக இருந்த கணேசன், தன் குருவுக்குத் தருவதற்காக காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டான். அதோடு தங்கள் ஊரில் மட்டும் கிடைக்கும், ஒரு விசேஷரக வாழைப்பழத்தையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்தான்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கி வந்ததை வாத்தியாரிடம் சமர்ப்பிக்க, கணேசனும் தான் கொண்டு வந்தவற்றை தனது வாத்தியாரிடம் சமர்ப்பித்துப் பணிந்து நின்றான். அனைத்தையும் பார்த்து மகிழ்ந்த குரு, "நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணு.எல்லா காய்கறி, பழங்களையும் அப்படியே எடுத்துண்டுபோய், காஞ்சி மகா பெரியவா சன்னதியில் கொண்டுபோய் சேர்த்துடு! உனக்கு பரம க்ஷேமம் உண்டாகும்!" என்று சொன்னார்.

மாணவன் சற்று தயங்க, "இதோ பாருப்பா, அந்த நடமாடும் தெய்வம், நமக்கு எத்தனையோ வழிகள்ல அனுகிரஹம் பொழியறது. அதுக்கெல்லாம் நாம பிரதிபலனா என்ன செய்ய முடியும்? அவர் ஒரு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தைக் குளிப்பாட்ட நம்மாலே முடியாது இல்லையா> ஒருவாளித் தண்ணி இல்லேன்னாலும் ஒரு உத்தரணி ஜலமாவது ஊத்தினோம்கற மனசு திருப்தியோட நாம இப்படி அப்பப்ப சின்னதா எதையாவது அவாளுக்கு சமர்ப்பிச்சுக்கலாம். அவ்வளவுதான் ,புரிஞ்சுதா? தயங்காம எடுத்துண்டுபோய் சேர்ப்பிச்சுட்டு வா!"

குரு சொல்ல,உடனே காய்கறி,பழம் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு,மகாபெரியவாளை தரிசிக்கப் புறப்பட்டான்.

அங்கே இந்த மாணவன் சென்ற நேரத்துல மகாபெரியவா உள்ளே இருந்தார். அதனால வெளியில நின்னுண்டு இருந்தான். வேதம் கற்கும் மாணவன் என்பதால், வேதமானவரை தரிசிக்கக் காத்துண்டு இருந்த நேரத்தை வீணாக்காம வேத மந்திரம் சொல்லலாம்னு நினைச்சுண்டு தான் கத்துண்ட மந்திரங்கள் சிலதை சொல்லிண்டு இருந்தான். அந்த வேத சத்தம் கேட்டதும்,உள்ளே இருந்து வெளியில வந்தார், மகாபெரியவா.

கணேசன் அவரை விழுந்து வணங்கியபின், தான் கொண்டுவந்த காய்,கனிகளை ஒரு பெரிய மூங்கில் தட்டில் வைத்து அவர் முன் சமர்ப்பித்து பக்தியோடு நின்றான்.

"இதெல்லாம் எனக்குன்னுதான் கொண்டு வந்தாயா?"

அவர் கேட்ட முதல் கேள்வியே சிறுவன் கணேசனின் நேர்மையான பதிலை சோதிக்கும்படி அமைந்தது.

மகாபெரியவா அப்படிக் கேட்டதும், ஒரு விநாடி யோசித்தான் அவன். தன் குரு எப்போதும் பொய் பேசவே கூடாது என்று போதனை பண்ணியது நினைவுக்கு வந்தது.

ஆசிரியரோட வார்த்தைகளைக் கடைப்பிடிக்கும் மாணவனாக "இல்லை,பெரியவா. இதெல்லாம் நான் என்னோட வாத்தியாருக்குத்தான் வாங்கிண்டு வந்தேன். அவர்தான், எல்லாத்தையும் 'பெரியவாளுக்கு கொண்டு போய் கொடுத்துடு'ன்னு சொன்னார்"--என்று சொன்னான்.

"இதெல்லாம் உங்க நிலத்திலே விளைஞ்சதோ?" ஒன்றும் அறியாதவர் போல கேட்டார்.

"இல்லை பெரியவா,எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லே"

"அப்போ காசு கொடுத்து வாங்கிண்டு வந்தியோ?" என்று அவனிடம் கேட்டதுமல்லாமல், அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்கள் பக்கம் திரும்பி, "இந்தக் குழந்தைக்கு எவ்வளவு குருபக்தி..! தன் குருவுக்காக பிரியமா இதெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கான் பாரு!" என்று பாராட்டிச் சொல்ல, கணேசனுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது

அடுத்து யாருமே எதிர்பார்க்காதவிதமாக ஒரு திடுக்கிடும் நாடகத்தை,நிகழ்த்தி அருளினார்,அந்த நடமாடும் தெய்வம். மடமடவென்று கீழே குனிந்த மகான் அந்தக் காய்கனி பரப்பப்பட்ட மூங்கில் தட்டை எடுத்து தன் தலைக்கு மேல் கொண்டு சென்று,தடாலென்று அத்தனையும் தனது சிரசின் மேல் அபிஷேகமாகக் கொட்டிக் கொண்டார்.

சிறுவன் கணேசன் அதைப் பார்த்து திடுக்கிட்டுப் போய்விட்டான். தான் ஏதாவது தவறு செய்து விட்டோமா என்று படபடப்போடு உடல் நடுங்க ஏதும் செய்வதறியாமல் விக்கித்து நின்றான்.

அந்தத் திகைப்பைக் கண்டும் காணாவதர் போல், "போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!" என்று பெரியவா சொல்ல, வித்தியாசமான செயல் போதாதென்று இந்த புதிய திருவாக்கையும் கேட்டவர்கள் ஒன்றும் புரியாமல் திருதிருத்தார்கள்.

சிறுவன் கணேசனும் எதுவும் புரியாமல், மறுபடியும் மகானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு, பிரசாதத்தை வாங்கிக்கொண்டு தயங்கியபடியே மெதுவாக நடந்தான். அப்போது குரு சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தது.

"அவர் பெரிய ஆலமரம்.அவரை நம்மால குளிப்பாட்ட முடியுமா? ஏதோ உத்தரணி ஜலம் விடுவோம்!"

வாத்தியார் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக, "இந்த எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!" அப்படின்னு உணர்த்தறவிதமா, 'குளிப்பாட்டினுட்டேன்!' என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது அவனுக்குப் புரிந்தது.

அதுவரை கொஞ்சம் தளர்வாக இருந்தவன்,குதூகலத்தோடு புறப்பட, விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் மற்றவர்கள். மகிழ்ச்சியாக ஓடிச்சென்று தன் குருவிடம் நடந்ததையெல்லாம் சொன்னான்.

நெகிழ்வோடு எல்லாவற்றையும் கேட்ட அவன் குரு, காஞ்சிமாமுனி இருந்த திசை நோக்கி சாஷ்டாங்கமா நமஸ்கரித்தார்,

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
Back
Top