குணத்ரய விபாக யோகம்

praveen

Life is a dream
Staff member
குணத்ரய விபாக யோகம்

குணத்ரய விபாக யோகம்


அழிவில்லா ஆத்மாவை உடலில் கட்டி பிணைக்கின்ற ரஜஸ், தமஸ், சத்வ என்ற மூன்று குணங்களை பற்றி இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் காரண கர்த்தா இந்த குணங்களே. ஒரு மனிதனின் இன்பதுன்பம், சொர்க்கம்நரகம், எல்லாவற்றிற்கும் இந்த குணங்களே காரணமாகிறது. இன்பத்தின் ஈடுப்பட்டால் சத்துவமும், செயலின் ஈடுபாட்டால் ரஜஸும், சொம்பலினால் தமஸும் ஆத்மாவை உடலோடு கட்டி போடுகின்றன. சத்வ குணத்தின் விளைவு தூய்மை, ரஜோ குணத்தின் விளைவு துன்பம், தமோ குணத்தின் விளைவு அறிவின்மை. சத்வ குணத்தில் ஞானம் உண்டாகிறது, ரஜோ குணத்தில் பேராசை உண்டாகிறது. தமோ குணத்தில் அஞ்ஞானம், மயக்கம், தவறான செயல் உண்டாகிறது. இந்த முக்குணங்களை வென்றவன், இந்த குணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவன் தன்னை வந்து அடைவான் என்றும், அவ்வாறு விடுப்பட்டவன் குணங்கள் தங்கள் வேலையை செய்கின்றன என்று அசட்டையாக எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பான், என்றும் இங்கே விளக்குகிறார்.


குணத்ரய விபாக யோகம் முக்குணங்கள் செய்யும் மாயாஜாலம்.
 
Back
Top