தெய்வாசுரசம்பத்விபாக யோகம்

தெய்வாசுரசம்பத்விபாக யோகம்

தெய்வாசுரசம்பத்விபாக யோகம்


தற்பெருமை, முரட்டுத்தனத்தோடு பணத்திமிரும், குலத்திமிரும் கொண்டு பகட்டுக்காக விதி முறைகளைப் புறக்கணித்து வேள்வி செய்கின்றனர்(17). அகந்தை, பலம், கர்வம், காமம், கோபம், இவற்றால் மயக்கமுற்று, தம்மிடமும், பிறரிடமும் உள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்(18). அப்படி என்னை வெறுக்கின்ற தூய்மையற்ற வக்ரபுத்தியுடைய மனிதர்களைத் திரும்ப திரும்ப நான் அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்(19). அப்படி அசுரப் பிறவி எடுத்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் பிறவி தோறும் அசுரராய் பிறக்கின்றனர்(20). காமம், கோபம், பேராசை என்ற மூன்று வாயில்களை கொண்டது நரகம். இவை ஆத்மாவை அழிப்பவை, எனவே இம்மூன்றையும் விலக்க வேண்டு(21). அந்த மூன்று வாயில்களிலிருந்தும் தப்பியவன் உயர்ந்த கதியை அடைகிறான் தன்னை உணர்வதற்கானச் செயல்களை செய்கிறான்,(22) சாஸ்திர நெறியை புறக்கணித்து, மனம் போனபோக்கில் செல்பவனுக்கு, சித்தியோ, நற்கதியோ, இன்பமோ கிடைக்காது(23). சாஸ்திரப்படி செய்யத்தக்கது, செய்யத்தாகாது எது என்று தீர்மானித்து அதன்படி செயல் புரி.(24).


தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத் தாற் காணப்படும்
தேவர், அசுரர் என்பது அவர்தம் புகழாலும், பழியாலும் காணப்படும்.
 
Back
Top